----VETTRI NEWS.COM---- பக்கசார்பற்ற நம்பகத்தன்மையான தகவல்கள் மக்கள் முன்...

Showing posts with label விளையாட்டு செய்திகள். Show all posts
Showing posts with label விளையாட்டு செய்திகள். Show all posts

Wednesday, September 27, 2023

ஹசரங்க உபாதையிலிருந்து மீண்டால் மாற்று வீரராக உலகக் கிண்ண குழாத்தில் பெயரிடப்படுவார்..

 உபாதைக்குள்ளான வனிந்து ஹசரங்க பூரண குணமடையாததால் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாத்தில் இணைத்துக் கொள்ளப்படவில்லை என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அவர் சிறுக சிறுக தேறி வருகின்ற நிலையில் அவரது உடற்தகுதி குறித்து அவதானித்து வருவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் குறிப்பிட்டுள்ளது.

ஒருவேளை ஹசரங்க பூரண உடற்தகுதியைப் பெற்றால் அவர் பதில் வீரராக கணிக்கப்படுவார் எனவும் இலங்கை வீரர்களில் எவரேனும் உபாதைக்குள்ளானால் அவர் மாற்று வீரராக அணியில் இணைக்கப்படுவார் எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்தது.

இலங்கை குழாம் இன்று புதன்கிழமை (27) பிற்பகல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை வீரர்கள் இந்தியா சென்றடைந்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, இந்திய ஆடுகளங்களில் திறமையாக துடுப்பெடுத்தாடக்கூடியவர் என தெரிவிக்கப்பட்ட ஏஞ்சலோ மெத்யூஸ், உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாத்தில் இணைக்கப்படவில்லை.

மாறாக ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை குழாத்தில் இடம்பெற்ற பெரும்பாலானவர்கள் உலகக் கிண்ண குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

வனிந்து ஹசரங்கவை விட உபாதைக்குள்ளான மற்றொரு வீரரான வேகப்பந்துவீச்சாளர் துஷ்மன்த சமீரவும் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.

ஆசிய கிண்ண கிரிக்கெட் குழாத்தில் இடம்பெற்ற ப்ரமோத் மதுஷான், பினுர பெர்னாண்டோ ஆகியோர் நிக்கப்பட்டு லக்ஷான் மதுஷன்க, லஹிரு குமார ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் இலங்கை குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை குழாத்தில்  பயணிக்கும் பதில் வீரராக சாமிக்க கருணாரட்ன பெயரிடப்பட்டுள்ளார்.

இலங்கை அணித் தலைமையில் மாற்றம் இடம்பெறவேண்டும் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டபோதிலும் தசுன் ஷானக்க மீது தெரிவாளர்கள் நம்பிக்கை வைத்து அவரிடம் தொடர்ந்து தலைமைப் பதவியை விட்டுவைத்துள்ளனர்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது உபாதைக்குள்ளான மஹீக் தீக்ஷன பூரண குணமடைந்ததை அடுத்து அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.





இதேவேளை, உலகக் கிண்ணப் போட்டியில் திமுத் கருணாரட்னவுக்குப் பதிலாக குசல் பெரேரா ஆரம்ப ஜோடியாக பெத்தும் நிஸ்ஸன்கவுடன் இணைவார் என அறிவிக்கப்படுகிறது.

இதனைவிட துடுப்பாட்ட வரிசை 7ஆம் இலக்கம் வரை ஆசிய கிண்ணத்தில் போன்று இடம்பெறவுள்ளது.

இலங்கை குழாம் துடுப்பாட்ட வீரர்கள்: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் ஜனித் பெரேரா  (வி.கா.), திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம (வி.கா.).

சகலதுறை வீரர்கள்: சரித் அசலன்க, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானக்க (அணித் தலைவர்), துஷான் ஹேமன்த.

பந்துவீச்சாளர்கள்: லஹிரு குமார, டில்ஷான் மதுஷன்க, மதீஷ பத்திரண, கசுன் ராஜித்த, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே.

Share:

Tuesday, September 26, 2023

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு..

 ஐ.சி.சி.யின் ஒருநாள் உலகக் கிண்ண போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தசுன் சாணக்க அணியின் தலைவராக செயற்படவுள்ளதுடன் அணியின் உப தலைவராக குசல் மெண்டிஸ் உப தலைவராக செயற்படவுள்ளார்.








வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்ஷன மற்றும் டில்ஷான் மதுசங்க ஆகியோர் உடற்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் அவர்கள் மூவரும் அணியில் இணைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.

15 பேரடங்கிய இலங்கை கிரிக்கெட் குழாம் வருமாறு, 

தசுன் சாணக்க ( அணித் தலைவர்)

குசல் மெண்டிஸ்

பத்தும் நிஷங்க

குசல் ஜனித் பெரேரா

திமுத் கருணாரத்ன

சரித்த அசலங்க

தனஞ்சய டி சில்வா

சதீர சமரவிக்ரம

துனித் வெல்லலாகே

கசுன் ராஜித்த

மதீஷ பத்திரண

லகிரு குமார

வனிந்து ஹசரங்க ( உடற்தகுதியின்மை )

மகேஷ் தீக்ஷன ( உடற்தகுதியின்மை )

டில்ஷான் மதுசங்க ( உடற்தகுதியின்மை )

இதேவேளை, துஷான் ஹேமந்த மற்றும் சாமிக்க கருணாரத்தன ஆகியோரின் பெயர்கள் மேலதிக வீரர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.

Share:

Tuesday, September 5, 2023

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் ஐந்தாம் நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி

 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் ஐந்தாம் நாள் போட்டியில் இந்தியா மறு்றும் நேபாள அணிகள் மோதின.

நேற்று (04)  கண்டி - பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்றது. இதற்கமைய இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாள அணி 48.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 230 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. நேபாள அணிசார்பில், அதிகபடியாக ஆசிப் ஷேக் 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

ஆசிய கிண்ண போட்டிகளை நடத்த ஏற்பட்ட சிக்கல்: எடுக்கப்பட்ட மாற்று நடவடிக்கை

ஆசிய கிண்ண போட்டிகளை நடத்த ஏற்பட்ட சிக்கல்: எடுக்கப்பட்ட மாற்று நடவடிக்கை

145 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

பந்துவீச்சில் இந்திய அணியின் ரவிந்திர ஜடேஜா 40 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் ஐந்தாம் நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி | Indian Team Won The 5 Day Of The Asia Cup Cricket

இந்தநிலையில், 231 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது. இந்திய அணி 17 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில் மழை குறுக்கிட்டதால், போட்டி இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில், பின்னர் டக்வத் லூயிஸ் முறைமைக்கு அமைய போட்டி 23 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. இதன்படி, இந்திய அணிக்கு 145 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

சூப்பர் 4 சுற்றுக்கு 

இந்திய அணி 20.1 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்து சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் ஐந்தாம் நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி | Indian Team Won The 5 Day Of The Asia Cup Cricket

இந்திய அணிசார்பில், அதிகபடியாக ரோஹித் சர்மா 74 ஓட்டங்களையும், சுப்மன் கில் 67 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Friday, September 1, 2023

ஆசிய கிண்ண போட்டிக்கான பற்றுசீட்டு விலைகளில் மாற்றம் - விலை விபரம் உள்ளே...

ஆசியக்கிண்ணத் தொடரின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான பற்றுசீட்டுகளின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமை(02) கண்டி - பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது. இவ்வாறான நிலையில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பற்றுசீட்டுகளின் விலைகளை அதிகமாக நிர்ணயித்திருந்தது. பல்லேகலை மைதானத்தின் புற்தரை பகுதிகளுக்கான பற்றுசீட்டுகளின் விலை 9600 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் குறித்த விலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், தற்போது இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான புற்தரை பகுதிகளுக்கான பற்றுசீட்டுகளை 1500 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்தியா - பாகிஸ்தான் மற்றும் நேபாளம் - இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளுக்குமான பற்றுசீட்டுகளை ரசிகர்கள் கொள்வனவு செய்யும் பட்சத்தில் 2550 ரூபாவுக்கு இரண்டு போட்டிகளையும் ரசிகர்கள் பார்வையிட முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Share:

Wednesday, August 30, 2023

இக்பால் ஞாபகார்த்த கிண்ணம்-ஏறாவூர் ஜங்ஸ் ஸ்டார் விளையாட்டு கழகம் வசமானது

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் அனுசரணையில் கல்முனை சனிமௌன்ட் விளையாட்டு கழகம் நடாத்திய அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த 22 முன்னணி உதைப்பந்தாட்ட விளையாட்டு கழகங்கள் கலந்து கொண்ட மர்ஹூம் எம்.ஐ.எம் இக்பால் ஞாபகார்த்த சம்பியன் கிண்ண மின்னொளி உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி கடந்த சனிக்கிழமை(26) அன்று நடைபெற்றது. இதன் போது சனிமௌன்ட் விளையாட்டு கழகத்தை 5:0 என்ற கோல் அடிப்படையில் ஏறாவூர் ஜங்ஸ் ஸ்டார் விளையாட்டு கழகம் இறுதிப்போட்டியில் வெற்றி கொண்டு மர்ஹூம் எம்.ஐ.எம் இக்பால் ஞாபகார்த்த சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி இறுதிப்போட்டிக்கு பிரதம அதிதியாக முன்னாள் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் கௌரவ அதிதியாக முன்னாள் கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொள்கை பரப்பு செயலாளருமான கே.எம் அப்துல் ரஸாக் கலந்து கொண்டதுடன் ஏனைய முக்கியஸ்தர்கள் உதைப்பந்தாட்ட விளையாட்டு கழகங்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் மேற்படி இறுதி சுற்றுப்போட்டியை காண்பதற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் பார்வையாளர்களாக வந்திருந்ததுடன் சீரற்ற நுழைவுச்சீட்டு பரிசோதனைகளினால் சிறிய குழப்பங்களும் இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
Share:

இலங்கைக்கு வந்தடைந்த இந்திய கிரிக்கெட் அணி!

இந்திய கிரிக்கெட் அணியினர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.ஆசிய கிரிக்கெட் சம்பியன்ஷிப் போட்டியின் சில போட்டிகளில் பங்கேற்பதற்காகவே அவர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.இந்நிலையில் இவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையான பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.செப்டம்பர் 2 இலங்கைக்கு வந்தடைந்த இந்திய கிரிக்கெட் அணி
அவர்கள் இன்று மதியம் 12.45 மணியளவில் இந்தியாவின் பெங்களூரில் இருந்து விசேட ஜெட் விமான சேவைக்கு சொந்தமான SG-9045 என்ற விசேட விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அத்துடன் அவர்கள் பங்கேற்கும் முதல் போட்டி பாகிஸ்தான் அணிக்கு எதிராக செப்டம்பர் 2 ஆம் திகதி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
Share:

Tuesday, August 29, 2023

ஆசிய கிண்ணம் : இலங்கை அணி அறிவிப்பு!

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை அணியின் உப தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.அத்துடன், பெத்தும் நிஷங்க, திமுத் கருணாரத்ன, குசல் ஜனித் பெரேரா, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, மகேஸ் தீக்ஷன ஆகியோர் இலங்கை குழாமில் பெயரிடப்பட்டுள்ளனர். சதீர சமரவிக்ரம, துனித் வெல்லாலகே, மதீஷ பத்திரண, கசுன் ராஜித, துஷான் ஹேமந்த, பினுர பெர்னாண்டோ, பிரமோத் மதுஷங்க ஆகியோரும் ஆசியக் கிண்ண தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை (30) ஆரம்பமாகவுள்ளது.பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் இம்முறை ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகின்றது.தொடரின் முதலாவது போட்டி நாளை நடைபெறவுள்ளதுடன், பாகிஸ்தானும் நேபாளமும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. பாகிஸ்தானின் முல்தான் மைதானத்தில் நாளை மாலை 3 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.இலங்கை அணி பங்கேற்கும் முதலாவது போட்டி நாளை மறுதினம் (31) பல்லேகலையில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.
Share:

இலங்கையின் மற்றுமொரு கிரிக்கெட் வீரருக்கும் உபாதை!

 இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு வீரரும் உபாதையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 30 ஆம் திகதி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், தற்போது வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்கவும் முதுகு உபாதையால் பாதிக்கப்பட்டுள்ளார்.




இதனால் 31 ஆம் திகதி கண்டி பல்லேகலவில் இடம்பெறவுள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் டில்ஷான் மதுங்க பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கை அணியின் துஷ்மந்த ஷாமிர தோள்பட்டை உபாதையாலும் வனிந்து ஹசரங்க தொடைப்பிடிப்பாலும் லகிரு குமார காயம் மற்றும் முதுகு வலியாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன் குசல் ஜனித் பெரேரா மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

துஷ்மந்த ஷாமிரவுக்குப் பதிலாக கசுன் ராஜிதவும் டில்ஷான் மதுஷங்கவுக்குப் பதிலாக பினுர பெர்னாண்டோவும் அணியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

Share:

இலங்கைக்கு விதித்த தடையை நீக்கியது சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம்

 இலங்கை கால்பந்தாட்ட  சம்மேளனத்திற்கு விதித்த தடையை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் நீக்கியுள்ளது.

இது தொடர்பான கடிதத்தை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை கால்பந்தாட்ட  சம்மேளனத்துக்கு அனுப்பிவைத்துள்ளது.

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவது தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கு சில வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருந்தன.





இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிர்வாகம் தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 24ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் இலங்கை கால்பந்தாட்ட  சம்மேளனத்துக்கு அனுப்பிவைத்துள்ளது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்காலத்தில் இலங்கை கால்பந்தாட்ட அணிக்கு சர்வதேச போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பு கிட்டுமென்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தல் வரை, சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஆசிய கால்பந்தாட்ட கூட்டமைப்பு என்பன நிலைமைகளை தொடர்ந்தும் கண்காணிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன நிர்வாகத்தில் ஏற்பட்ட சில முரண்பாடுகளையடுத்து, அதன் அங்கத்துவத்தை கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி முதல் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Share:

நாளை ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி

 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை (30) ஆரம்பமாகவுள்ளது.

இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை ஏ பிரிவில் பங்கேற்கும் அதே வேளையில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை பி பிரிவில் பங்கேற்கின்றன.

இந்த போட்டி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை அணி

நாளை ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி | Asia Cup Cricket Match Tomorrow 2023

பாகிஸ்தானின் முல்தான் நகரில் பகலிரவு போட்டியாக நாளை பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி நடைபெறவுள்ளது.

அத்துடன், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளதுஇந்நிலையில், ஏனைய ஐந்து அணிகளினதும் வீரர் குழாம் பெயரிடப்பட்டுள்ளதாகவும், இலங்கை அணி இதுவரை பெயரிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share:

Sunday, August 27, 2023

சர்வதேச ஒரு நாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த பாகிஸ்தான்

ICC ஆடவர் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் பாகிஸ்தான் அணி முதலிடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று நேற்று (26) நிறைவுக்கு வந்தது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த 2 போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரை 2 – 0 என்று வெற்றி கொண்டு முன்னிலையில் இருந்த நிலையில், நேற்று 3ஆவதும் இறுதியுமான போட்டி கொழும்பு ஆர். பிரேமதாஸ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஒரு நாள் தொடர் ஆரம்பிக்கும் முன்னரே தொடரை பாகிஸ்தான் 3 – 0 என வெற்றி கொண்டால் ஐசிசியின் அணிகளுக்கான ஒரு நாள் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறும் என்று கூறப்பட்டு இருந்தது. அதற்கமைய, 3ஆவது ஒரு நாள் போட்டியிலும் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்து 3 போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடரை 3 – 0 என்ற அடிப்படையில் கைப்பற்றி, சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது. ஏற்கனவே கடந்த மே மாதம் நடைபெற்ற நியூஸிலாந்து அணியுடனான 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் 4 போட்டிகளை வெற்றி கொண்டு, பாகிஸ்தான் அணி வரலாற்றில் முதல் தடவையாக சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை தனதாக்கியது. ஆயினும் அத்தொடரின் 5ஆவது போட்டியில் தோல்வி அடைந்ததன் காரணமாக முதலாம் இடம் பறிபோயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share:

Monday, August 7, 2023

இலங்கை சிறுமி ஒருவருக்கு பிரித்தானியாவில் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு!

வரலாற்றில் முதல் தடவையாக, இலங்கை சிறுமி ஒருவர் பிரித்தானியாவின் தேசிய ஜிம்னாஸ்டிக் அணிக்கு தெரிவாகியுள்ளார்.

இலங்கையை பூர்விகமாக கொண்ட 11 வயதுடைய மினுலி சோஹன்சா என்ற சிறுமியே இவ்வாறு தெரிவாகியுள்ளார்.அதேவேளை, கடந்த ஜூலை மாதம் பிரித்தானியாவில் நடைபெற்ற 'பிரிட்டிஷ் நசனல் சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக்ஸ்' போட்டியிலும் இவர் பங்கேற்றுள்ளார்.

இந்த போட்டியில், பிரித்தானியாவின் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை வீரராக மினுலி சோஹன்சா களமிறங்கியுள்ளார்.

தந்தையின் உத்வேகம்

இலங்கை சிறுமி ஒருவருக்கு பிரித்தானியாவில் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு! | Sri Lankan Citizenship Child Best Records Uk

இந்தநிலையில் லண்டனில் வசிக்கும் இவர் தனது தந்தையின் உத்வேகத்தால் ஜிம்னாஸ்டிக்ஸில் சிறந்து விளங்குவதாக தெரிவித்துள்ளார்.

இவரது தந்தை குணரத்ன பண்டார, இலங்கையில் உள்ள பல பாடசாலைகளில் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளராக பணியாற்றியதுடன் இலங்கையில் தேசிய மட்டத்தில் பங்கேற்கும் வகையில் பல தடகள வீரர்களையும் உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தந்தையின் பயிற்சியில் ஜிம்னாஸ்டிக் செய்த மினுலி, தனது 6ஆவது வயதில் பிரித்தானிய பயிற்சியாளரிடம் பயிற்சி பெறத் தொடங்கியுள்ளார்.

மினுலி பிரித்தானிய தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி பல போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார்.

ஒலிம்பிக்கில் தங்கம்

இலங்கை சிறுமி ஒருவருக்கு பிரித்தானியாவில் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு! | Sri Lankan Citizenship Child Best Records Uk

இதேவேளை சமீபத்தில் மினுலி 'கிரேட் பிரிட்டன் ஜிம்னாஸ்டிக் நசனல்' அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் ஜெர்மனியில் நடைபெறவுள்ள Gutenberg cup international போட்டியில் முதல் முறையாக பிரித்தானிய தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கவுள்ளார்.

மேலும் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வதே சிறுமி மினுலியின் கனவு என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



Share:

Tuesday, July 25, 2023

மழை காரணமாக இந்திய - மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிவு!!

போர்ட் ஒவ் ஸ்பெய்ன், ட்ரினிடர், குவீன்ஸ் பார்க் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்தியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. இப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததால் இரண்டு அணிகளுக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான தலா 4 புள்ளிகள் வழங்கப்பட்டன.போட்டியின் 3ஆம், 4ஆம் நாள் ஆட்டங்களும் சீரற்ற காலநிலை காரணமாக அவ்வப்போது ஆட்டம் தடைப்பட்டது.கடைசி நாளான திங்கட்கிழமை தொடர்ந்து மழை பெய்ததால் ஆடடம் கைவிடப்படுவதாக மேற்கிந்தியத் தீவுகளின் நேரப்படி பிற்பகல் 2.50 மணிக்கு அறிவிக்கப்பட்டது. திங்கட்கிழமை காலையிலிருந்து மழை பெய்துகொண்டிருந்ததால் மதிய போசனத்திற்குப் பின்னரும்கூட இரண்டு அணியினரும் மைதானத்திற்கு சென்றிருக்கவில்லை.பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை சற்று ஓய்ந்த போதிலும் 2.00 மணியளவில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்ததால் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப் போட்டியில் 365 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 4ஆம் நாள் 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அன்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 76 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.அணித் தலைவர் க்ரெய்க் ப்றத்வெய்ட் (28), கேர்க் மெக்கென்ஸி (0) ஆகிய இருவரே ஆட்டம் இழந்தனர். டேஜ்நரேன் சந்தர்போல் 24 ஓட்டங்களுடனும் ஜேர்மெய்ன் ப்ளக்வூட் 20 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.கடைசி நாளன்று தொடர்ச்சியாக மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டு வெற்றிதோல்வியின்றி முடிவுக்கு வந்தது. இந்தியா 1ஆவது இன்: 438 (விராத் கோஹ்லி 121, ரோஹித் ஷர்மா 80, ரவிந்த்ர ஜடேஜா 61, யஷஸ்வி ஜய்ஸ்வால் 57, ரவீந்த்திரன் அஷ்வின் 56, ஜொமெல் வொரிக்கன் 89 - 3 விக்., கெமர் ரோச் 104 - 3 விக்., ஜேசன் ஹோல்டர் 57 ய- 2 விக்.)மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: 255 (க்ரெய்க் ப்றத்வெய்ட் 75, அலிக் அதானேஸ் 37, டேஜ்நரேன் சந்தர்போல் 33, கேர்க் மெக்கென்ஸி 32, மொஹமத் சிராஜ் 60 - 5 விக்., ரவிந்த்ர ஜடேஜா 37 - 2 விக்., முக்கேஷ் குமார் 48 - 2 விக்.) இந்தியா 2ஆவது இன்: 181 - 2 விக். டிக்ளயார்ட் (ரோஹித் ஷர்மா 57, இஷான் கிஷான் 52 ஆ.இ., யஷஸ்வி ஜய்ஸ்வால் 38, ஷுப்மான் கில் 29
ஆ.இ.)
மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 365) 76 - 2 விக். (க்ரெய்க் ப்றத்வெய்ட் 28, டேஜ்நரேன் சந்தர்போல் 24 ஆ.இ., ஜெர்மெய்ன் ப்ளக்வூட் 20 ஆ.இ., ரவிச்சந்திரன் அஷ்வின் 33 - 2 விக்.) ஆட்டநாயகன்: மொஹமத் சிராஜ்.
Share:

Monday, July 24, 2023

ஆஷஸ் கிண்ணத்தை அவுஸ்திரேலியா தக்கவைத்துக்கொண்டது!!

மென்செஸ்டர், ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட்டரங்கில் நடைபெற்ற இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக தடைப்பட்டு வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததால் ஆஷஸ் கிண்ணத்தை அவுஸ்திரேலியா தக்கவைத்துக்கொண்டது. ஐந்து போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அவுஸ்திரேலியாவும் 3ஆவது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றிபெற்றிருந்தன. இதற்கு அமைய தொடரில் 2 - 1 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கும் அவுஸ்திரேலியாவுக்கு 2001க்குப் பின்னர் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் ஒன்றில் முதல் தடவையாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான 5ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி ஓவல் விளையாட்டரங்கில் எதிர்வரும் வியாழக்கிழமை 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடரின் கடைசிப் போட்டியில் அவுஸ்திரேலியா தோல்வி அடைந்தாலும்கூட இதற்கு முந்தைய தொடரில் ஆஷஸ் கிண்ணத்தை அவுஸ்திரேலியா வெற்றிபெற்றிருந்ததன் அடிப்படையில் ஆஷஸ் கிண்ணத்தை தக்கவைத்துக்கொள்ளும். நான்காவது டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாளன்று (சனிக்கிழமை 22) மழை காரணமாக 30 ஓவர்கள் மாத்திரம் விளையாடப்பட்ட நிலையில் 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் மீதமிருக்க அவுஸ்திரேலியாவைவிட 61 ஓட்டங்களால் இங்கிலாந்து பின்னிலையில் இருந்தது. எனினும் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ச்சியாக மழை பெய்ததால் அன்றைய ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்ட நிலையில் பிற்பகல் 5.24 மணியளவில் நான்காவது டெஸ்ட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது என உறுதிப்படுத்தப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் அணித் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் 17 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து எதிர்கொண்ட முதலாவது வெற்றிதோல்வியற்ற முடிவு இதுவாகும். மற்றைய 16 போட்டிகளில் 12 வெற்றிகளை ஈட்டிய இங்கிலாந்து 4இல் தோல்வி அடைந்தது. எண்ணிக்கை சுருக்கம் அவுஸ்திரேலியா 1ஆவது இன்: 317 (மார்னுஸ் லபுஸ்சான் 51, மிச்செல் மார்ஷ் 51, ட்ரவிஸ் ஹெட் 48, ஸ்டீவன் ஸ்மித் 41, மிச்செல் ஸ்டார்க் 36, க்றிஸ் வோக்ஸ் 62 - 5 விக்., ஸ்டுவட் ப்றோட் 68 - 2 விக்.) இங்கிலாந்து 1ஆவது இன்: 592 (ஸ்க் க்ரோவ்லி 189, ஜொனி பெயார்ஸ்டோவ் 99 ஆ.இ., ஜோ ரூட் 84, ஹெரி ப்றூக் 61, மொயின் அலி 54, பென் ஸ்டோக்ஸ் 51, உதிரிகள் 35, ஜொஷ் ஹேஸ்ல்வூட் 126 - 5 விக்., கெமரன் க்றீன் 64 - 2 விக்., மிச்செல் ஸ்டார்க் 137 - 2 விக்.)அவுஸ்திரேலியா 2ஆவது இன்: 214 - 5 விக். (மார்னுஸ் லபுஸ்சான் 111, மிச்செல் மார்ஷ் 31 ஆ.இ., டேவிட் வோர்னர் 28, மார்க் வூட் 27 - 3 விக்.) ஆட்டநாயகன்: ஸக் க்ரோவ்லி
Share:

Sunday, July 23, 2023

ஆண் குழந்தை பிறந்தால் மெஸ்ஸி என்று பெயர் வைப்பேன் - நெய்மர்

தனக்கு ஆண் குழந்தை பிறந்தால் லியோனல் மெஸ்ஸி என்று பெயர் வைப்பதாக பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மர் கூறியுள்ளார். நெய்மர் தனது அடுத்த குழந்தை மகனாக இருந்தால், தனது சிறந்த நண்பரும் கால்பந்து ஜாம்பவானுமான லியோனல் மெஸ்ஸியின் பெயரை அவருக்கு வைப்பேன் என்று கூறியுள்ளார். நெய்மர் தனது முதல் குழந்தையை காதலி புருனா பியான்கார்டியுடன் எதிர்பார்க்கிறார். ப்ரூனா பியான்கார்டி கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை நெய்மர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.இதனிடையே, குழந்தையின் பாலினம் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அர்ஜென்டினா கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, நெய்மர் ஜூனியர் இருவரும் பார்சிலோனாவில் ஒன்றாக இருந்த காலத்திலிருந்து இன்னும் நட்பைப் பேணுகிறார்கள். நெய்மர் 2017-ல் பிஎஸ்ஜிக்கு வந்தார். பின்னர் மெஸ்ஸியும் அணியில் இனைந்தார். ஆனால் மெஸ்ஸி தற்போது அமெரிக்க அணியான இண்டர் மியாமியில் இணைந்துள்ளார்.
Share:

அஸ்வினின் மாயாஜாலத்தில் விக்கெட்...! அசந்து போன மே.தீவுகள் அணித் தலைவர்

டிரினிடாட் டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் பிராத்வெயிட் 75 ஓட்டங்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த காணொளி தற்போது வைரலாகியுள்ளது. குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது. தொடக்க வீரர் தேஜ்நரைன் சந்தர்போல் 33 ஓட்டங்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.அதன் பின்னர் கிர்க் மெக்கென்சி 32 ஓட்டங்களில் முகேஷ் குமார் ஓவரில் இஷன் கிஷனிடம் பிடி கொடுத்து வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரும், அணியின் தலைவருமான கிரேஜ் பிராத்வெயிட் இந்திய அணிக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தார். அணியின் ஓட்ட எண்ணிக்கை 157 ஆக உயர்ந்தபோது அஸ்வினின் மாயாஜால பந்தில் பிராத்வெயிட் ஆட்டமிழந்தார். அவர் ஒரு கணம் எப்படி ஆட்டமிழந்தேன் என்று குழம்பினார்.மொத்தம் 235 பந்துகளை எதிர்கொண்ட பிராத்வெயிட், ஒரு சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 75 ஓட்டங்கள் எடுத்தார்.
Share:

Saturday, July 22, 2023

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இலங்கை முன்னணி வீரர் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமன்னே அறிவித்துள்ளார். 33 வயதான அவர் 2010 இல் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். மற்றும் 44 டெஸ்ட், 127 ஒருநாள்போட்டிகள் மற்றும் 26 ரி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
2014ல் ஐசிசி உலக ரி 20 கோப்பையை வென்ற இலங்கை அணியின் முக்கிய உறுப்பினராக திரிமன்னே இருந்தார். இது தொடர்பில் திரிமன்னே வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இலங்கை முன்னணி வீரர் ஓய்வு கடந்த சில ஆண்டுகளாக எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு முழுமையான மரியாதை. இந்த விளையாட்டு பல ஆண்டுகளாக எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. ஆனால் பல கலவையான உணர்வுகளுடன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எனது ஓய்வை உடனடி விளைவுடன் அறிவிக்க முடிவு செய்துள்ளேன். ஒரு வீரராக நான் எனது சிறந்ததைக் கொடுத்துள்ளேன், என்னால் முடிந்தவரை முயற்சித்தேன், விளையாட்டை மதித்து, எனது தாய்நாட்டிற்கு நேர்மையாகவும், நெறிமுறையாகவும் எனது கடமையைச் செய்துள்ளேன். இது ஒரு கடினமான முடிவாக இருந்தது, ஆனால் இந்த முடிவை விருப்பத்துடன் அல்லது விருப்பமின்றி எடுக்க பல எதிர்பாராத காரணங்கள் உள்ளன. அவற்றை நான் குறிப்பிட முடியாது. அனைவருக்கும் நன்றி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இலங்கை முன்னணி வீரர் ஓய்வு சிறிலங்கா கிரிக்கெட் அணி உறுப்பினர்கள், எனது பயிற்சியாளர்கள், அணியினர், உடற்தகுதியாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பகுப்பாய்வாளர்களின் ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டுகளில் நீங்கள் எனக்கு அளித்த அன்பு, ஆதரவு மற்றும் உந்துதலுக்கு எனது ரசிகர்கள், ஆதரவாளர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். எனது வாழ்க்கை முழுவதும் திரைக்குப் பின்னால் எனக்கு ஆதரவாக இருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
Share:

Wednesday, July 12, 2023

தற்போதைய நெருக்கடிக்கு 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பேற்க வேண்டும்: ரணதுங்க




நாட்டின் தற்போதைய அவல நிலைக்கு 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பேற்க வேண்டுமென அரசாங்கத்தின் பிரதம கொறடா நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“இந்த எம்.பி.க்கள் அனைவரும் இந்த குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பங்களித்துள்ளனர். அந்தவகையில் தற்போதுள்ள நிலைமைக்காக ஒரு அரசை மட்டும் குற்றம் சாட்டுவது சரியல்ல. எதிர்க்கட்சிக்கு ஒரு கொள்கையோ அல்லது ஒரு நோக்கமோ இல்லை, அதன் செயல்பாடு அரசாங்கத்தை குற்றம் சாட்டுவதையும் அது செய்யும் எல்லாவற்றிலும் தவறுகளைக் கண்டறிவதையும் தவிர வேறொன்றுமில்லை, ”என்று ரணதுங்க கூறினார்.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்காக அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சிகளுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் பொருட்களின் விலைகளைக் குறைக்கும்போதும், மீண்டும் விலைகளை உயர்த்தும்போதும் அவர்கள் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களுக்கு தெளிவான குறிக்கோள் இல்லை. தற்போதைய நெருக்கடிக்கான பொறுப்பை அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தின் மீது பகிர்வது தவறானது.

“சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களின் உருவாக்கம்தான் இந்த நிலைமை. அதற்கும் மேலாக, இந்த சபையில் உள்ள அனைத்து 225 எம்.பி.க்களும், தற்போதைய சூழ்நிலையை உருவாக்குவதற்கு ஏதோ ஒரு வகையில் பங்களித்துள்ளனர்,” என்று கூறிய அமைச்சர், நிலைமையை மேம்படுத்த எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

Share:

Wednesday, July 5, 2023

ஐ.சி.சியின் துடுப்பாட்ட தர வரிசையில் முதலிடம் பிடித்த இலங்கை வீராங்கனை..!

 நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டு சதங்களை விளாசி இலங்கை மகளிர் அணியின் தொடர் வெற்றிக்கு உதவிய இலங்கை துடுப்பாட்ட அணித் தலைவி சாமரி அத்தபத்து துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் பெத் மூனியை பின்தள்ளி சாமரி அதபத்து துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சமரி அதபத்து 3 போட்டிகளில் 2 சதங்களை பெற்றிருந்தார்.

சாதனை

ஐ.சி.சியின் துடுப்பாட்ட தர வரிசையில் முதலிடம் பிடித்த இலங்கை வீராங்கனை..! | Sri Lankan Woman Cricketer 1St Place Icc Odi Rank

முதல் போட்டியில் 108 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்ற அவர், இரண்டாவது போட்டியில் ஓட்டங்களின்றி ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெறும் 80 பந்துகளில் 140 ஓட்டங்களை பெற்று இலங்கை அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

வரலாற்றில் முதன்முறையாக நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை மகளிர் அணி ஒருநாள் தொடரை வெற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில், இலங்கை மகளிர் கிரிக்கெட்டில் தரவரிசையில் முதலிடம் பிடித்த இலங்கை வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

சனத் ஜயசூரியவை தொடர்ந்து ஐ.சி.சியின் துடுப்பாட்ட தர வரிசையில் முதலிடம் பிடித்த இரண்டாவது இலங்கையர் என்ற சாதனையை பதிவுசெய்துள்ளார். 

Share:

About