----VETTRI NEWS.COM---- பக்கசார்பற்ற நம்பகத்தன்மையான தகவல்கள் மக்கள் முன்...

Showing posts with label சினிமா செய்திகள். Show all posts
Showing posts with label சினிமா செய்திகள். Show all posts

Thursday, September 28, 2023

சந்தோஷ் நாராயணன் இசையில் “ஜிகர்தாண்டா double x” படத்துக்கு பாடல் எழுதியுள்ள யாழ். இளைஞன்

 ராகவா லோரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளித் திருநாளன்று வெளியாகவுள்ள “ஜிகர்தாண்டா double x” படத்தில் இலங்கை கலைஞரான பூவன் மதீசன் பாடல் எழுதியிருப்பதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு மற்றும் கலைஞர்களுடனான சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.“ஜிகர்தாண்டா double x” படத்தில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய காட்சி இருப்பதாகவும் அதனை அருமையாக இயக்குநர் கையாண்டிருப்பதாகவும் தெரிவித்த சந்தோஷ் நாராயணன், அதற்கேற்ற மாதிரி யாழ்ப்பாணத் தமிழில் ஒரு பாடலை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த பாடலையே நம் நாட்டு பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகங்களைக் கொண்ட கலைஞர் பூவன் மதீசன் எழுதியுள்ளதாக குறிப்பிட்டார். அத்துடன், மதீசனுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் காத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Share:

Friday, September 8, 2023

எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து திடீர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. பிரபலங்கள் வருத்தம்

 சென்னை: எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் மாரிமுத்து திடீரென்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தற்போதைய சூழ்நிலையில் ட்ரெண்டிங் ஸ்டார் ஆக வலம் வந்த மாரிமுத்துவின் இறப்பிற்கு பலரும் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். சீரியல் நடிகர்கள் மற்றும் ரசிகர்கள், பிரபலங்கள் என பலர் மாரிமுத்துவின் இறப்பு குறித்த அதிர்ச்சியில் மீள முடியாமல் இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் குணசேகரன் ஆக பிரபலம் அடைந்த மாரிமுத்து திடீரென்று இன்று அதிகாலை டப்பிங் பேசுவதற்காக சென்றிருந்த நிலையில் திடீரென்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார். இது குறித்து அந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் வருத்தத்தோடு பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். இவருக்கு இந்த நிலைமை வரும் என்று நாங்கள் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. இவருடைய குடும்பத்தினருக்கு நாங்கள் எப்படித்தான் ஆறுதல் சொல்ல போகிறோம் என்று தெரியவில்லை என்றும் கூறியிருக்கிறார். அதுபோல அரசியல் பிரமுகராக இருக்கும் சுப.வி இந்த அதிர்ச்சியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சில தினங்களுக்கு முன்புதான் நான் எதிர்நீச்சல் சீரியல் எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று நான் என்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் எழுதி இருந்தேன். அதில் குணசேகரன் ஆக மாரிமுத்து அந்த அளவிற்கு நடித்து இருப்பார். அவருடைய நடிப்பை குறித்து நான் பாராட்டியதற்கு எனக்கு நன்றியும் தெரிவித்து இருந்தார். ஆனால் அவருடைய இறப்பு இப்படியாகும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என்று கண்ணீரோடு பேசி இருக்கிறார். சில தினங்களுக்கு முன்புதான் மாரிமுத்து தன்னுடைய பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடி தன்னோடு நடித்த பிரபலங்கள் பலருக்கும் சாப்பாடு போட்டு இருந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்குள் இவருக்கு எந்த நிலைமையில் ஆக வேண்டும் என்று இவரோடு சீரியலில் தம்பியாக நடிக்கும் கமலேஷ் அதாவது சீரியலில் ஞானம் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.தொடர்ச்சியாக இந்த தகவல் தெரிந்ததும், அதிகமான ரசிகர்களும் சீரியல் பிரபலங்களும் முன்னணி நடிகர்களும் நடிகர் மாரிமுத்துவின் இறப்பிற்கு வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

Share:

Thursday, September 7, 2023

உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியார் – 6 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை..!

 உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் மீது மதுரை காவல் துறையினர் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டின் போது சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது நாடு முழுவதிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து உத்தரப்பிரதேசத்தைச் அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி தலையை கொண்டு வருவோருக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

மேலும்  உதயநிதியின் தலையை யாரும் சீவவில்லை என்றால் நானே சீவுவேன். அதற்காக வாள் ஒன்றையும் தயாரித்துள்ளேன். உதயநிதி தலையை வெட்ட ரூ.10 கோடி போதாது எனில் அந்த தொகையை உயர்த்தவும் தயார் என கூறியிருந்தார்.

இந்நிலையில் அமைச்சரை அச்சுறுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், அச்சுறுத்தும் விதமாக வீடியோ வெளியிட்ட பரமஹம்ச ஆச்சார்யா மற்றும் அவரது வீடியோவை X தளத்தில் பதிவிட்ட ஐடியின் பயனாளர் பியூஸ்ராய் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி திமுகவின் மதுரை மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் தேவசேனன் சார்பில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் இருவர் மீதும் 153, 153A (1) (a), 504, 505(1)(b), 505(2) & 506(ii) IPC 6 பிரிவுகளின் கீழ் மதுரை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி, கலகத்தை விளைவிக்கும் நோக்கில் செயல்படுதல், ஒற்றுமைக்கு குந்தகமாக செயல்படுதல், அமைதியின்மையை வேண்டுமென்றே ஏற்படுத்துதல், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துதல், தீய எண்ணத்தை உருவாக்குதல், கொலை மிரட்டல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதே போல் சாமியாரின் டுவிட்டர் கணக்கை கையாளும் பியூஸ் ராய் என்பவர் மீதும் அதே 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

Share:

Sunday, August 13, 2023

மூன்று நாட்களில் வசூலை வாரிக்குவித்த ஜெயிலர்.. இதுவரை எவ்வளவு தெரியுமா...

 

ஜெயிலர்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி கடந்த 10ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் ஜெயிலர்.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மூன்று நாட்களில் வசூலை வாரிக்குவித்த ஜெயிலர்.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Superhit Jailer Movie 3 Days Box Office

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களை முழுமையாக பூர்த்தி செய்துள்ளது.

முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வரும் ஜெயிலர் படம் மூன்று நாட்கள் முடிவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மூன்று நாள் வசூல்

அதன்படி ஜெயிலர் திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்களில் ரூ. 210 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளது.

மூன்று நாட்களில் வசூலை வாரிக்குவித்த ஜெயிலர்.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Superhit Jailer Movie 3 Days Box Office

இனி வரும் நாட்களில் கண்டிப்பாக எதிர்பார்க்க முடியாத வசூல் சாதனையை ஜெயிலர் படம் செய்யும் என கூறப்படுகிறது.

Share:

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா.. ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர்..

 

வைரல் புகைப்படம்

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா.. ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் | Popular Actress Childhood Picture

இவர் தமிழ் சினிமாவின் ஒரு காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். மேலும் ரசிகர்களால் புன்னகை அரசி என கொண்டாடப்பட்டவர்.

அட இவரா

ஆம், இந்த புகைப்படத்தில் இருப்பவர் வேறு யாருமில்லை நடிகை சினேகா தான். சினேகாவின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா.. ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் | Popular Actress Childhood Picture

தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து வந்த நடிகை சினேகா கடந்த 2013ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.Share:

Saturday, August 12, 2023

பிறந்தநாள் பார்ட்டியில் கிளாமராக டான்ஸ் ஆடிய அமலா பால்! வீடியோ இதோ

 

அமலா பால்

நடிகை அமலா பால் சமீப காலமாக தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து இணையத்தில் வைரல் ஆகின்றன. கடைசியாக அவர் நடிப்பில் கடாவர் என்ற படம் தான் வந்து இருந்தது.

அமலா பால் வெளிநாட்டுக்கு செல்லும் இடங்களில் நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்.

ஹாட் டான்ஸ்

அமலா பால் தற்போது பார்ட்டியில் ஹாட் உடையில் டான்ஸ் ஆடிய வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. 

Share:

கடைசி நிமிடத்தில் ரத்தான ஏ.ஆர்.ரஹ்மானின் கான்செர்ட்.. அதிர்ச்சியான ரசிகர்கள்

 

ஏ.ஆர்.ரஹ்மான்ஆஸ்கார் வென்ற இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக உலகம் முழுவதும் அவர் இசை கச்சேரி நடத்தி வருகிறார்.

இன்று மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் சென்னையில் கன்செர்ட் நடக்க இருந்தது. அதில் பங்கேற்க ரசிகர்களும் கிளம்பி வந்த நிலையில் திடீரென கடைசி நிமிடத்தில் ஷோ ரத்தாகிவிட்டதாக ரஹ்மான் அறிவித்து இருக்கிறார்.

Share:

பஹத் பாசில் மோகன்.ஜி நம்பரை பிளாக் பண்ணிட்டாரா.. சர்ச்சைக்கு இயக்குனர் விளக்கம்..

 மாமன்னன் படத்தில் ரத்னவேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்த பஹத் பாசில் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகி இருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு அவரது வீடியோக்கள் தான் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி இருந்தது.

எல்லா பாடலுக்கு செட் ஆகுறாரே என சொல்லி ஜாதி பெருமை பேசும் பாடல்களை இணைத்து மாமன்னன் பட வீடியோக்களை வெளியிட்டு வந்தனர் நெட்டிசன்கள்.

இந்நிலையில் பஹத் பாசிலை இயக்குனர் மோகன்.ஜி நடிக்க கூப்பிட்டதாகவும், அதனால் தான் பஹத் பேஸ்புக் கவர் படத்தை நீக்கி, மோகன் போன் நம்பரை ப்ளாக் செய்து விட்டார் என ஒரு செய்தி நேற்று வைரல் ஆகி இருந்தது.

பஹத் பாசில் மோகன்.ஜி நம்பரை பிளாக் பண்ணிட்டாரா.. சர்ச்சைக்கு இயக்குனர் விளக்கம் | Mohan G Clarifies On Fahadh Faasil Issue

இயக்குனர் விளக்கம்

இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி மோகன்.ஜி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அது பொய்யான செய்தி என்று குறிப்பிட்டு, தவறான செய்தி வெளியிட்ட வார இதழையும் அவர் கடுமையாக விமர்சித்து வீடியோவில் பேசி இருக்கிறார். 

Share:

Friday, July 28, 2023

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு சர்வதேச நீதி விசாரணையை கோரி வடக்கில் போராட்டம்!!

தமிழ் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினால் பிழை என கூறும் இலங்கையின் அரசியல் தலைவர்கள் இருக்கும் வரை இலங்கையின் நீதித்துறை கேள்விக்குறியே என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இன்று (28) முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நீதியான முறையில் விசாரணை வடகிழக்கு தழுவிய முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குளாய் கொக்குத்தொடுவாயில் அளவுகணக்கு தெரியாதளவில் போராளிகள், மக்கள் ஆயிரக்கணக்கில் புதைக்கப்பட்ட மனித புதைகுழிக்கு எதிராக ஒரு சர்வதேச விசாரணை வேண்டி சர்வதேசத்தின் மேற்பார்வையோடு நீதியான முறையில் விசாரணை செய்யப்பட வேண்டும் என இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழ் தேசிய மண்ணிலே பல்வேறுபட்ட இடங்களில் மனித புதைகுழிகள் இன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த மனித புதைகுழிகள் வெளியில் வருமானால் சிறிலங்கா இராணுவம் சிறிலங்கா கடற்படை, விமானப்படை , பாதுகாப்பு படைகள் கேள்விக்குட்படுத்தப்படுவார்கள்.
அணி திரண்டுள்ள மக்கள் குறிப்பாக இப்போது கொக்குத்தொடுவாயிலே கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி, மண்டைதீவிலே இருக்கின்ற மனித புதைகுழி , இன்னும் பல இடங்களிலே இராணுவ முகாம்களிலே மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மனித புதைகுழிகள் என்பது இராணுவம் மற்றும் அரசபடைகளால் மிகவும் வன்மமான முறையிலே அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு மிக நுட்பமான முறையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட தமிழ் உறவுகளுடையதாக இருப்பதனால் இப்போராட்டத்தில் இன்று மக்கள் அணிதிரண்டிருக்கிறார்கள். சர்வதேச சமூகத்திடம் நாம் கோருவது ஒரு நீதி விசாரணை வேண்டும். நாங்கள் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படுகின்றோம். இந்த மண்ணிலே நீதியற்ற மனிதர்களாக தமிழர்கள் தொடர்ந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த நீதி விசாரணை என்பதற்காகத்தான் ஒரு சர்வதேச நீதி கோரி இன்று மக்கள் அணியாக திரண்டு தமது ஆதங்கத்தையும், உணர்வுகளையும் வெளிப்படுத்துவதாக இப்போராட்டம் அமைந்துள்ளது. மனித புதைகுழிகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டாலும் அது தொடர்பாக விசாரணைகள் நடாத்தப்படவில்லை. இந்நேரத்தில் புதிதாக மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுகின்றது . இதற்கு நீதியான விசாரணை நடாத்தப்பட வேண்டும். இலங்கை அரசாங்கம் என்பது உண்மையில் நீதியாக நடப்பதில்லை. தமிழ் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினால் கூட அதனை பிழை என கூறும் இலங்கையின் அரசியல் தலைவர்கள் இருக்கும் வரை இலங்கையின் நீதித்துறை சரியாக செயற்படுமா? இவர்களால் நீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமா ? என்பது கேள்விக்குறியே.
அதனால்தான் செம்மணி மனித புதைகுழியிலிருந்து மண்டைதீவு மனித புதைகுழி மற்றும் கொக்குதொடுவாயில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி, மன்னாரில் இருக்கும் மனித புதைகுழி என இவ்வாறு பல இடங்களிலும் மனித புதைகுழிகள் தோண்டத் தோண்ட தமிழர்களாக வந்து கொண்டிருப்பதுதான் மிகப்பெரிய அநியாயம். அந்த அநியாயத்தினுடைய நீதி என்பது இலங்கையிலே கிடைக்காது அதனால் தான் இந்த சர்வதேச நீதி விசாரணையை கோரி இந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.
Share:

Tuesday, July 25, 2023

(SLTB) நிராகரிக்கப்பட்ட 175 பேருந்துகள் பழுது பார்க்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்!!

சுமார் 175 எண்ணிக்கையான பேருந்துகள் பாவனைக்கு உகந்ததில்லை என்று இலங்கை போக்குவரத்து சபையினால் (SLTB) நிராகரிக்கப்பட்ட நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவை பழுது பார்க்கப்பட்டு திருத்தப்பட்ட பின்னர் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 175 பேரூந்துகள் பழுது பார்க்கப்படுதல் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ தகவல்களைப் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டின் இறக்குமதிக் கட்டுப்பாடுகளின் விளைவால் வாகன உதிரிப் பாகங்கள் கிடைக்காமையால் குறித்த பேருந்துகள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டிருந்தன. அவை தொடர்பான ஆவணங்கள் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் அதிபரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 400 பேருந்துகளை திருத்த தீர்மானம் இந்த திருத்த நடவடிக்கைகளுக்கு டிப்போ மட்டத்தில் திட்டமொன்றினை ஆரம்பித்து பொது திறைசேரி ஒதுக்கீட்டின் மூலம் நிதி வழங்குவதற்கு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்திருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சேவையில் ஈடுபடாத 852 பேருந்துகளில் 400 பேருந்துகளை திருத்தப்படுவதற்கு அரசினால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் முதல் பகுதியாக, 175 பேருந்துகள் பழுது பார்க்கப்பட்டன சுமார் 300 மில்லியன் ரூபாய் செலவில் இந்த திருத்தப்பணிகள் நிகழ்ந்துள்ளன. தொழிநுட்ப நிபுணர்களின் ஒத்துழைப்பு இலங்கை போக்குவரத்துச் சபையின் தொழிநுட்பப் பிரிவைச் சேர்ந்த பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்ப நிபுணர்களின் ஒத்துழைப்புடன் இந்தத் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த 175 பேருந்துகளில் 15 பேருந்துகள் "சிசு சீரிய" திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டு, பள்ளி மாணவர்களுக்கான போக்குவரத்திற்காக வழங்கப்படும் என்றும் மீதமுள்ள பேருந்துகள் பயணிகள் போக்குவரத்துக்காக அந்தந்த டிப்போக்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் குறிப்பிடப்படுகிறது.
Share:

Sunday, July 23, 2023

கங்குவா...' சூர்யாவின் பிறந்தநாளுக்கு வெளியான சிறப்பு டீசர்!

சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, சிவா இயக்கத்தில் அவர் நடிக்கும் 'கங்குவா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது.இப்படம் சூர்யாவின் மற்ற படங்களைவிட அதிக பட்ஜெட்டில் 3டி தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாக பத்து மொழிகளில் தயாராகி வருகிறது. இதன் பீரியட் போர்ஷன் காட்சிகள் முழுவதையும் கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப் பகுதியில் எடுத்து வருகின்றனர். சூர்யாவின் வித்தியாசத் தோற்றத்திற்கான மேக்கப் போடுவதற்கு மட்டுமே தினமும் இரண்டரை மணி நேரம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் சூர்யாவின் பிறந்த நாளுக்கு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாகும் என்ற அறிவிப்புடன் சூர்யா கைகளில் தழும்புகளுடன் வாளேந்திய படி இருக்கும் போஸ்டர் ஒன்றைப் படக்குழு வெளியிட்டிருந்தது. இதையடுத்து கிளிம்ப்ஸ் வீடியோவை உருவாக்குவதற்காக சில வாரங்களுக்கு முன்னர் சென்னை ஈவிபி ஃபிலிம்சிட்டியில் பீரியட் காலகட்டத்துக்கான அரங்கங்கள் அமைக்கப்பட்டுப் படப்பிடிப்பு நடந்தது. இதில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ஜிம்பாய்ஸ் பங்கேற்றனர். படப்பிடிப்பு இரண்டு நாள்கள் நடைபெற்றது என்றாலும் அதன் கிராபிக்ஸ் வேலைகளுக்கு சில வாரங்கள் பிடித்தன. இந்நிலையில் தற்போது சூர்யாவின் பிறந்த நாளான இன்று 'கங்குவா' படத்தின் பிரமாண்டமான கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறது படக்குழு. அதில் சூர்யா பலருடன் போரிட்டு அவர்களை வீழ்த்துவது போன்றும், பெரும் படைக்கு நடுவே நின்று கத்துவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Share:

Friday, July 14, 2023

இலங்கையில் நடிகர் ரஜினிகாந்த்!


நடிகர் ரஜினிகாந்த் இன்று (14) இலங்கை வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் மாலைதீவுக்கு செல்லும் வழியில் இலங்கை விமான நிலையம் ஊடாக  சென்றதாக கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் இந்த விஜயத்தின்போது, எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஸ்ரீலங்கன் விமான சேவை தங்களது உத்தியோகபூர்வ பேஸ்புக்கில் பதிவேற்றிய நிலையில், அந்த படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றதுShare:

சொந்த வாழ்க்கையில் பிரச்சினைகள் வந்தன'- நடிகை மீரா ஜாஸ்மின்

 

தமிழில் ரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமான மீரா ஜாஸ்மின் தொடர்ந்து சண்டக்கோழி, ஆயுத எழுத்து, ஆஞ்சநேயா, திருமகன், நேபாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

இந்த நிலையில் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். 2014-க்கு பிறகு படங்களில் அவர் நடிக்கவில்லை. தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இதில் மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார்.

மீண்டும் நடிப்பது குறித்து மீரா ஜாஸ்மின் அளித்துள்ள பேட்டியில், "என் சொந்த வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. அதனால் நடிப்பின் மீது கவனம் செலுத்த முடியவில்லை, சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தேன். இப்போது பிரச்சினைகளில் இருந்து மீண்டு வந்துள்ளேன். எனவேதான் சினிமாவிலும் எனது பயணத்தை தொடங்கி இருக்கிறேன். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் எனக்கு அமோக ஆதரவு தருகிறார்கள். அதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார்.

Share:

Wednesday, July 12, 2023

லிஸ்ட்ல விட்டுப்போன மாணவி… நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கிய விஜய்… வெளியான புகைப்படம்..!!

  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அதேசமயம் விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாகவும் இணையத்தில் கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதனிடையே சென்னை அருகே பனையூர் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டார். 

இதனிடையே கடந்த மாதம் விஜய் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் இரண்டு இடத்தை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பரிசுத்தொகை வழங்கினார்.


அதில் ஒரு சில மாணவிகளின் பெயர் இடம்பெறாத நிலையில் பலரும் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

 

இந்நிலையில் நேற்று பனையூர் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற விஜய் பத்தாம் வகுப்பில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதியில் முதல் மாவட்டம் பிடித்த மாணவி உதயா அவர்களை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கினார். அது தொடர்பான புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


Share:

அரசியலுக்கு வந்தால் சினிமாவில் நடிக்க மாட்டேன் : விஜய்


நடிகா் விஜய்யின் மக்கள் இயக்கம் சாா்பில் கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக சிறப்பிடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை, சான்றிதழ் வழங்கும் விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

இதில் சுமார் 1,600 மாணவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் நடிகர் விஜய் மேடையில் நின்றவாறு பொன்னாடை போர்த்தி சான்றிதழ் – ஊக்கத்தொகை வழங்கினார்.

இந்த நிகழ்வு மூலம் தொகுதிவாரியாக அரசியலில் தன்னை முன்னெடுத்து செல்வதற்காக விஜய் நடத்தினார் எனப் பல்வேறு தரப்பினர் கருத்துகளைப் பதிவு செய்திருந்தனர்.

இதற்கிடையே, வெங்கட் பிரபுவுடன் இணைந்து நடிக்கவுள்ள அடுத்த படத்துக்கு பிறகு 3 ஆண்டுகள் நடிப்பில் இருந்து விஜய் ஓய்வெடுக்கவுள்ளதாகவும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கவனம் செலுத்தவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பனையூர் இல்லத்தில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை ஈடுபட்டார்.

இந்தக் கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த நிர்வாகிகள், “ அரசியலுக்கு வந்தால் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விடுவதாகவும் தன் கவனம் முழுக்க அரசியலில் மட்டுமே இருக்கும் என விஜய் கூறினார். அவர் அரசியலுக்கு வருவதற்கான அனைத்துக் கட்டமைப்புகளையும் நாங்கள் செய்துவிட்டோம். அவர் கைகாட்டினால் அரசியலில் ஈடுபடுவதோடு அவரோடு தொடர்ந்து பயணிப்போம்” எனத் தெரிவித்துள்ளனர்.

Share:

Wednesday, July 5, 2023

ஷாக் கொடுத்த சமந்தா! சினிமாவில் இருந்து விலகுகிறாரா.. திடீர் முடிவுக்கு இதுதான் காரணம்நடிகை சமந்தா கடந்த வருடம் தான் மயோசிடிஸ் என்ற auto immune நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். அதற்காக அவர் தீவிர சிகிச்சை பெற்று ஓரளவு குணமாகி இருக்கிறார்.

தற்போது விஜய் தேவரகொண்டா உடன் குஷி என்ற படத்தில் சமந்தா நடித்து வருகிறார். மேலும் Citadel தொடரின் ஷூட்டிங்கும் விரைவில் முடிய இருக்கிறது.

ஷாக் கொடுத்த சமந்தா! சினிமாவில் இருந்து விலகுகிறாரா.. திடீர் முடிவுக்கு இதுதான் காரணம் | Samantha To Take Break From Cinema

சமந்தா எடுத்த முடிவு  

இந்நிலையில் தற்போது கையில் இருக்கும் ப்ராஜெக்ட்களை முடித்தபிறகு சமந்தா சினிமாவில் இருந்து ஒரு வருடம் பிரேக் எடுக்க இருக்கிறாராம். மேலும் ஏற்கனவே வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் சில தயாரிப்பாளர்களுக்கு திருப்பி கொடுத்துவிட்டாராம்.

ஒரு வருடம் பிரேக் எடுத்து தனது உடல்நிலையை மட்டும் கவனிக்க போகிறாராம் சமந்தா. 

ஷாக் கொடுத்த சமந்தா! சினிமாவில் இருந்து விலகுகிறாரா.. திடீர் முடிவுக்கு இதுதான் காரணம் | Samantha To Take Break From Cinema

Share:

About