----VETTRI NEWS.COM---- பக்கசார்பற்ற நம்பகத்தன்மையான தகவல்கள் மக்கள் முன்...

Tuesday, October 3, 2023

க.பொ.த உயர்தர பரீட்சை திகதிகள் குறித்து கல்வி அமைச்சர் விசேட அறிவிப்பு

 இந்த ஆண்டுக்கான (2023) க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதிகள் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (03) அறிவித்துள்ளார்.

பரீட்சைகள் நடைபெறவிருக்கும் திகதியினை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எதிர்வரும் சில தினங்களில் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சென்ற மாதம் இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் திட்டமிடப்பட்ட திகதியினை ஒத்திவைக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்திருந்தார்.

போதிய கால அவகாசம்

அப்போது, மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்கவே பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை நடைபெறும் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அது பிற்போடப்பட்டது.

க.பொ.த உயர்தர பரீட்சை திகதிகள் குறித்து கல்வி அமைச்சர் விசேட அறிவிப்பு | Gce Advance Level Examination 2023

இந்நிலையில் பரீட்சைகளுக்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்று இன்று குறித்த அறிவிப்பை அமைச்சர் நாடாளுமன்றில் விடுத்துள்ளார். 

Share:

கொழும்பு உயர்நீதிமன்ற முன்றலில் மாபெரும் கண்டனப் போராட்டம்

 கொழும்பு உயர்நீதிமன்ற முன்றலில் எதிர்வரும் 09ஆம் திகதி மாபெரும் கண்டனப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதிபதி ரீ. சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, வடக்கு – கிழக்கு சட்டத்தரணிகள் சங்கங்களைச் சார்ந்த சட்டத்தரணிகள் மற்றும் தென்பகுதி சட்டத்தரணிகளையும் அழைத்து கண்டனப் போராட்டத்தை நடாத்தவுள்ளனர்.

மாபெரும் எதிர்ப்பு

வடக்குக் கிழக்கின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த பெருமளவிலான சட்டத்தரணிகளும் தென்பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணிகளும் இப்போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு உயர்நீதிமன்ற முன்றலில் மாபெரும் கண்டனப் போராட்டம் | Protest In Front Of Colombo High Court

Share:

Monday, October 2, 2023

2013 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட 49 சொகுசுப்பேருந்துகள் செயலிழப்பு

 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு இறக்குமதி செய்யப்பட்ட 49 சொகுசுப் பேருந்துகள் தற்போது செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளின் நலனுக்காக இந்த சொகுசுப் பேருந்துகளை இறக்குமதி செய்ததாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் அல்விஸ் தெரிவித்துள்ளார்.

மாநாட்டின் பின்னர் இந்தப் பேருந்துகளை இலங்கையின் தென் பகுதியில் அதிவேக நெடுஞ்சாலையின் பொதுப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தி வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

உதிரிப் பாகங்கள் இன்மை

இதன் வாயிலாக நாளொன்றுக்கு 80,000 ரூபா முதல் 90,000 ரூபா வரையில் அரசாங்கம் வருவாய் ஈட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறிருக்கையில் அவற்றை பராமரிப்பதற்கும் பழுது பார்ப்பதற்கும் உரிய உதிரிப் பாகங்கள் இலங்கை போக்குவரத்துச் சபையிடம் இல்லாத காரணத்தினால் அவை தற்போது செயலிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த சொகுசு பேருந்துகளை உற்பத்தி செய்யும் சீனாவின் ஃபோட்டொன் (Foton) மோட்டார் நிறுவனத்திடமிருந்து உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2013 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட 49 சொகுசுப்பேருந்துகள் செயலிழப்பு | 49 Luxury Buses Imported For Chogm 2013 Now Idle

இதேவேளை இலங்கையில் இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமே இருப்பதால், பழுதுபார்க்கும் பணியை விரைவுபடுத்த நிறுவனத்திடம் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு ஒன்றைக் கோரியுள்ளதாகவும் லலித் அல்விஸ் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் சீனாவிற்கு சென்றிருந்த போது ஃபோட்டொன் (Foton) நிறுவனத்தின் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, இலகுவான கட்டண முறையில் பேருந்துகளை இறக்குமதி செய்யும் கோரிக்கையினையும் முன்வைத்திருந்தார்.இந்தக் கோரிக்கையினை நிறுவன இயக்குநரின் ஒப்புதலுக்காக அனுப்பவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

Share:

Sunday, October 1, 2023

ஊர்வலத்துக்கு அழைத்து வரப்பட்ட சீத்தாவை காட்டு யானை என நினைத்து துப்பாக்கிப் பிரயோகம் செய்த வனஜீவராசி அதிகாரிக்குப் பிணை!

 ஊர்வலத்துக்கு அழைத்து வரப்பட்ட 'சீதா' என்ற யானையை துப்பாக்கியால் சுட்டுக்  காயப்படுத்திய குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

மஹியங்கனை எசல பெரஹெரவில் கலந்துகொண்ட சீதாவை காட்டு யானை என நினைத்து மாபகதேவாவ வனஜீவராசிகள் அலுவலக சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.





இதனையடுத்து, அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 

சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Share:

ஹிட்லர் பிறந்த வீட்டை பொலிஸ் நிலையமாக்க முயற்சி - வலுக்கின்றது எதிர்ப்பு

 image

ஆஸ்திரியாவில்  ஜேர்மனியின் சர்வாதிகாரி அடொல்வ்  ஹிட்லர் பிறந்த வீட்டை பொலிஸ் நிலையமாக மாற்றுவதற்கான முயற்சிகளிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

என்ற முகவரியுடன் காணப்படும் கல்லினால் கட்டப்பட்ட அந்த வீடு பழுப்புநிற வர்ணம் பூசப்பட்டு காணப்படுகின்றது.

முதல் தளத்தின் ஜன்னல்களை மறித்தவாறு இரும்புக்கம்பிகள் காணப்படுகின்றன ஒரு பேருந்து நிறுத்தம் அருகில் காணப்படுகின்றது அதற்கு அருகில் கிரனைட்கல்லினால் கட்டப்பட்ட நினைவுத்தூபி காணப்படுகின்றது --அமைதி சுதந்திரம் ஜனநாயகத்திற்காக மீண்டும் பாசிசம் வேண்டாம் உயிரிழந்தவ மில்;லியன் கணக்கானவர்கள் அதனை நினைவுபடுத்துகின்றனர் என்ற வாசகம் அதில் பொறிக்கப்பட்டுள்ளது.

சர்வாதிகாரி அடொல்வ் ஹிட்லர் இந்த வீட்டிலேயே பிறந்தார்.

பேர்லினின் இல் உள்ள பதுங்குழியில் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டு 78 வருடங்களாகியும் அவர் பிறந்த இடம்குறித்து விவாதங்கள் காணப்படுகின்றன.

ஹிட்லர் தனது நாட்டில் தான் பிறந்தார் என்பதிலிருந்து விடுபட ஆஸ்திரியா போராடுகின்றது- நியோநாஜிகளிற்கான வழிபாட்டுத்தலத்தை அகற்ற அது விரும்புகின்றது.

இதன் காரணமாக அந்த வீட்டை பொலிஸ் நிலையமாக மாற்றுவதற்கு அந்த நாடு முயல்கின்றது எனினும் அதற்கு எதிர்ப்பும் உருவாகியுள்ளது.

ஹிட்லரின் வீட்டை பொலிஸ்நிலையமாக மாற்றுவதற்கான முயற்சிகள் தவறான சமிக்ஞையாக அமையும் என தெரிவிக்கின்றார் இயக்குநர் குண்டர் ஸ்வைகர் இது ஹிட்லரால் கொல்லப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில் அறைவதற்கு சமம் என்கின்றார் அவர் .

இவர் யார் பிரானோவுக்கு அச்சப்படுகின்றனர் என்ற ஹிட்லரின் பிறப்பிடம் குறித்து நன்கு பிரசித்த பெற்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளார்.

பிரானோ ஒரு நாஜிகள் நகரம் இல்லை அதற்கு எதிர்மாறானது என்கின்றார் அவர்.

ஹிட்லர் இங்கு பிறந்தார் என்பது மக்கள் உண்மையை நேருக்நேர் எதிர்கொள்ள உதவுகின்றது நீங்கள் இந்த நகரை பார்த்து அஞ்சத்தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அந்த பகுதி மக்கள் குழுவொன்றும்  ஹிட்லர் பிறந்த வீட்டை பொலிஸ் நிலையமாக்கும் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது பேரழிவு முயற்சியாக அமையும் என தெரிவித்துள்ள என அமைப்பொன்றின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாஜிகாலத்தில் பொலிஸார் கேள்விக்குறிய விடயத்தில்  நடந்துகொண்டார்கள் என தெரிவித்துள்ள அவர் இந்த வீட்டை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்த வேறு சிறந்த ஆலோசனைகள் திட்டங்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

ஹிட்லரின் வீட்டை எவ்வாறு பயன்படுத்துவது என்ற பிரச்சினை 1938 முதல் காணப்படுகின்றது- ஜேர்மனி ஆஸ்திரியாவை  தன்னுடன் ஆக்கிரமித்த பின்னர்  நாஜி கட்சி தனது ஸ்தாபகரின் பிறந்த இடத்தை கைப்பற்றி அதில் கலாச்சார நிலையமொன்றை ஏற்படுத்தியது.

யுத்தத்தின் பின்னர் அந்த வீடு பழைய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது அதன் பின்னர் அந்த வீடு ஒரு நூலகமாகவும் பாடசாலையாகவும் மாற்றுத்திறனாளிகளிற்கான அலுலவகமாகவும் காணப்பட்டது

Share:

இலங்கையில் அதிகரித்த தயிரின் விலை

 இலங்கையில் தயிர்ச்சட்டி ஒன்றின் விலை 500 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தேசிய வாடிக்கையாளர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையில்  தற்போது உற்பத்தி செய்யப்படும் பாலின் விலை குறைவடைந்துள்ளதாலேயே தயிர்ச்சட்டியின் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி

மேலும், உலகில் அதிகளவில் பால் மாவை பயன்படுத்தும் ஐந்து நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இலங்கையில் அதிகரித்த தயிரின் விலை | Yogurt Price Increased In Sri Lanka

இதேவேளை இலங்கைக்கு தேவையான பாலில் 40 வீதம் மாத்திரமே உள்நாட்டிலிருந்து பெறப்படுவதோடு மீதமுள்ள 60 வீதமானது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக அண்மையில் கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பீ. ஹேரத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Share:

வாள்வெட்டு தாக்குதலில் பலியான பௌத்த பிக்கு

 குருணாகல் - பொத்துஹெர, லிஹினிகிரிய, பொத்குல் விகாரையில் வசித்து வந்த பிக்கு ஒருவர் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொத்துஹெர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிக்குவுக்கு சொந்தமான பொத்துஹெர - பரபாவில பிரதேசத்தில் உள்ள தனியார் வீடொன்றில் வைத்து அவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட பிக்கு சிறிலங்கா இராணுவத்தின் பொறியியல் பிரிவில் இருந்து ஓய்வுபெற்று கடந்த மார்ச் மாதம் துறவு வாழ்க்கைக்கு பிரவேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காவல்துறையினர் சந்தேகம் 

உயிரிழந்த தெரணம திருமணமானவர் எனவும், அவரது மனைவி சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் அவரை விட்டுச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வாள்வெட்டு தாக்குதலில் பலியான பௌத்த பிக்கு | A Buddhist Monk Who Was Killed In A Sword Attack

இந்நிலையில், மரணமான அன்று இரவு சிலர் தேரரைச் சந்திக்க வந்து வீட்டைக் கவனித்துக் கொண்டிருந்த தம்பதிகளை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதாக காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் பிக்குவின் கொலையில் அவருடன் இருந்த நபரே ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Share:

About