----VETTRI NEWS.COM---- பக்கசார்பற்ற நம்பகத்தன்மையான தகவல்கள் மக்கள் முன்...

Wednesday, June 28, 2023

டிஜிட்டல் மயப்படுத்தல்



இலங்கையில் தனித்துவமான முறையில் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்திய இலங்கை கூட்டு ஒப்பந்தத்துக்கமைய குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தில் அவர் கூறியுள்ளார்.

இந்த அடையாள அட்டைகளை வழங்குவதற்கு தனிநபர்களின் சுய விபரங்கள், முகம், கருவிழி மற்றும் கைரேகை தரவுகள் என்பன மத்திய தரவுக்கட்டமைப்பில் உள்வாங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பிரஜைகளின் பிறப்புச்சான்றிதழ் முதல் அனைத்து ஆவணங்களையும், ஏனைய தரவுகளையும் ஒரு தனித்துவமான இலக்கத்தின் கீழ் டிஜிட்டல் மயப்படுத்துவது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இது தொடர்பான யோசனை உள்வாங்கப்பட்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் செயற்பாட்டுப் பொறிமுறையில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், தாமதங்களையும் பின்னடைவையும் ஏற்படுத்தும் கடந்த கால ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க முயற்சிப்பதற்கு பதிலாக, ஒரு தொகுதியிலிருந்து புதிதாகத் தொடங்கி முன்னோக்கிச் செல்லும் வகையில் செயற்படுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share:

Tuesday, June 27, 2023

மின் கட்டணம் குறைப்பு குறித்து வெளியான அறிவிப்பு


ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் மின்கட்டணம் குறைக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு அறிவித்திருந்தது.
மின்கட்டண திருத்த பட்டியல் இலங்கை மின்சார சபையினால் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அண்மையில் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்த கட்டணத் திருத்தம் குறித்த இறுதித் தீர்மானத்தை எதிர்வரும் 30 ஆம் திகதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இம்முறை 3 சதவீதம் மட்டுமே மின்சார கட்டணம் குறைக்கப்படவுள்ளதாகவும், அதுவும் 0-90 அலகுகள் வரையில் மின்சார பாவணையாளர்களுக்கு மட்டுமே மின்கட்டணம் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
May be an image of ticket stub and text

Share:

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஐந்து மாத இலாபம் அறுபது மில்லியன் ரூபா ஆகும்...

கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறுபது மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக, கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்தார். இதன் மூலம் கிடைக்கும் இலாபத்தை எதிர்காலத்தில் மக்களுக்கு வழங்கும் வகையில் கழகம் செயற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எதிர்காலத்தில் எரிபொருளின் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் கூறினார். இந்த இலாபத்தை பெறுவதற்கு முக்கிய காரணம் மாநகராட்சியில் திறமையின்மை மற்றும் முறைகேடுகளை தவிர்க்கும் திறனே காரணம் என நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.
Share:

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய கும்பாபிஷேகத்தின் முதல் நிகழ்வான எண்ணெய் காப்பு சாத்தும் கிரியை நிகழ்வுகள்

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்டபக்ஷ பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேகத்தின் முதல் நிகழ்வான எண்ணெய் காப்பு சாத்தும் கிரியை நிகழ்வுகள். அத்துடன் காரைதீவு 2001 உயர்தர மாணவர்களினால் பக்த அடியார்களுக்கு தாகசாந்தியும் வழங்கி வைக்கப்பட்டது
Share:

About