Column Left

Vettri

Breaking News

அக்கரைப்பற்று கிழக்கு கமநல சேவைகள் மத்திய நிலையத்திற்கு புதிய கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவியேற்பு!!




செல்வி வினாயகமூர்த்தி

அக்கரைப்பற்று கிழக்கு கமநல சேவைகள் மத்திய நிலையத்திற்கு  புதிய கமநல அபிவிருத்தி உத்தியோகத்தராக மயில்வாகனம் அஜந்தன்   பதவியேற்றுக் கொண்டார்.

கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் U.L சம்சுடீன் அவர்கள் அக்கரைப்பற்று தெற்கு கமநல நிலையத்திற்கு கடந்த (27) இடமாற்றம் பெற்று சென்றதையடுத்து இன்று (03) செவ்வாய்கிழமை காரைதீவை சேர்ந்த மயில்வாகனம் அஜந்தன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய கமநல அபிவிருத்தி உத்தியோகத்தரை வரவேற்கும் இந்நிகழ்வில் அக்கரைப்பற்று கிழக்கு கமநல சேவைகள் மத்திய நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும்  அக்கரைப்பற்று கிழக்கு விவசாய அமைப்பின் தலைவர் இராசசிங்கம் சுவர்ணராஜ் உள்ளிட்டோர்  மாலை அணிவித்து வரவேற்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments