----VETTRI NEWS.COM---- பக்கசார்பற்ற நம்பகத்தன்மையான தகவல்கள் மக்கள் முன்...

Showing posts with label உலக செய்திகள். Show all posts
Showing posts with label உலக செய்திகள். Show all posts

Sunday, October 1, 2023

ஹிட்லர் பிறந்த வீட்டை பொலிஸ் நிலையமாக்க முயற்சி - வலுக்கின்றது எதிர்ப்பு

 image

ஆஸ்திரியாவில்  ஜேர்மனியின் சர்வாதிகாரி அடொல்வ்  ஹிட்லர் பிறந்த வீட்டை பொலிஸ் நிலையமாக மாற்றுவதற்கான முயற்சிகளிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

என்ற முகவரியுடன் காணப்படும் கல்லினால் கட்டப்பட்ட அந்த வீடு பழுப்புநிற வர்ணம் பூசப்பட்டு காணப்படுகின்றது.

முதல் தளத்தின் ஜன்னல்களை மறித்தவாறு இரும்புக்கம்பிகள் காணப்படுகின்றன ஒரு பேருந்து நிறுத்தம் அருகில் காணப்படுகின்றது அதற்கு அருகில் கிரனைட்கல்லினால் கட்டப்பட்ட நினைவுத்தூபி காணப்படுகின்றது --அமைதி சுதந்திரம் ஜனநாயகத்திற்காக மீண்டும் பாசிசம் வேண்டாம் உயிரிழந்தவ மில்;லியன் கணக்கானவர்கள் அதனை நினைவுபடுத்துகின்றனர் என்ற வாசகம் அதில் பொறிக்கப்பட்டுள்ளது.

சர்வாதிகாரி அடொல்வ் ஹிட்லர் இந்த வீட்டிலேயே பிறந்தார்.

பேர்லினின் இல் உள்ள பதுங்குழியில் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டு 78 வருடங்களாகியும் அவர் பிறந்த இடம்குறித்து விவாதங்கள் காணப்படுகின்றன.

ஹிட்லர் தனது நாட்டில் தான் பிறந்தார் என்பதிலிருந்து விடுபட ஆஸ்திரியா போராடுகின்றது- நியோநாஜிகளிற்கான வழிபாட்டுத்தலத்தை அகற்ற அது விரும்புகின்றது.

இதன் காரணமாக அந்த வீட்டை பொலிஸ் நிலையமாக மாற்றுவதற்கு அந்த நாடு முயல்கின்றது எனினும் அதற்கு எதிர்ப்பும் உருவாகியுள்ளது.

ஹிட்லரின் வீட்டை பொலிஸ்நிலையமாக மாற்றுவதற்கான முயற்சிகள் தவறான சமிக்ஞையாக அமையும் என தெரிவிக்கின்றார் இயக்குநர் குண்டர் ஸ்வைகர் இது ஹிட்லரால் கொல்லப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில் அறைவதற்கு சமம் என்கின்றார் அவர் .

இவர் யார் பிரானோவுக்கு அச்சப்படுகின்றனர் என்ற ஹிட்லரின் பிறப்பிடம் குறித்து நன்கு பிரசித்த பெற்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளார்.

பிரானோ ஒரு நாஜிகள் நகரம் இல்லை அதற்கு எதிர்மாறானது என்கின்றார் அவர்.

ஹிட்லர் இங்கு பிறந்தார் என்பது மக்கள் உண்மையை நேருக்நேர் எதிர்கொள்ள உதவுகின்றது நீங்கள் இந்த நகரை பார்த்து அஞ்சத்தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அந்த பகுதி மக்கள் குழுவொன்றும்  ஹிட்லர் பிறந்த வீட்டை பொலிஸ் நிலையமாக்கும் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது பேரழிவு முயற்சியாக அமையும் என தெரிவித்துள்ள என அமைப்பொன்றின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாஜிகாலத்தில் பொலிஸார் கேள்விக்குறிய விடயத்தில்  நடந்துகொண்டார்கள் என தெரிவித்துள்ள அவர் இந்த வீட்டை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்த வேறு சிறந்த ஆலோசனைகள் திட்டங்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

ஹிட்லரின் வீட்டை எவ்வாறு பயன்படுத்துவது என்ற பிரச்சினை 1938 முதல் காணப்படுகின்றது- ஜேர்மனி ஆஸ்திரியாவை  தன்னுடன் ஆக்கிரமித்த பின்னர்  நாஜி கட்சி தனது ஸ்தாபகரின் பிறந்த இடத்தை கைப்பற்றி அதில் கலாச்சார நிலையமொன்றை ஏற்படுத்தியது.

யுத்தத்தின் பின்னர் அந்த வீடு பழைய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது அதன் பின்னர் அந்த வீடு ஒரு நூலகமாகவும் பாடசாலையாகவும் மாற்றுத்திறனாளிகளிற்கான அலுலவகமாகவும் காணப்பட்டது

Share:

Saturday, September 30, 2023

பாகிஸ்தானில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அடிதடி




 பாகிஸ்தானில் தொலைக்காட்சி விவாதத்தின் போது இம்ரான் கான் யூதர்களின் ஏஜென்ட் என விமர்சித்ததால் ஆத்திரம் அடைந்து கைகலப்பு ஏற்பட்டது. 

பாகிஸ்தானில் உள்ள பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில், இம்ரான் கான் வழக்கறிஞர் ஷெர் அப்சல் கான் மார்வாட், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சி சார்பில் அதன் செனட்டர் அப்னான் உல்லா கான் உட்பட சில முக்கியக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் போது, இம்ரான் கான் கட்சியின் வழக்கறிஞர் ஷெர் அப்சல் கான் மார்வாட்டுக்கும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியின் செனட்டர் அப்னான் உல்லா கானுக்கும் இடையில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இம்ரான் கான் வழக்கறிஞர் மார்வாட், அப்னானை தாக்க, பதிலுக்கு அப்னானும் தாக்க, நிகழ்ச்சி நடந்த இடம் போர்க்களமானது.

இதையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விரைந்து வந்து இருவரையும் சமாதானப்படுத்தினர். இச்சம்பவம் தொடர்பான காணொளிக் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share:

Thursday, September 28, 2023

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கையெழுத்துப் பிரதி 10.7 கோடிக்கு விற்பனை!

 ஜெர்மனி நாட்டை சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தான் முன்மொழிந்த சிறப்பு சார்பியல் கொள்கை, பொது சார்பியல் கொள்கை ஆகியவை குறித்து கைப்பட எழுதிய பிரதி ஏலத்தில் ரூ.10.7 கோடிக்கு (இந்திய மதிப்பு) விற்பனையாகியுள்ளது.

அறிவியலில் முக்கிய இடம் வகிக்கும் சிறப்பு சார்பியல் கொள்கையை 1905 ஆம் ஆண்டிலும், பொது சார்பியல் கொள்கையை 1915 ஆம் ஆண்டிலும் ஐன்ஸ்டீன் வெளியிட்டார்.இவற்றைக் குறித்து ஜெர்மன் மொழியில் விளக்கமளித்து அவர் எழுதிய கட்டுரைகள் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் கடந்த 1929 ஆண்டு பெப்ரவரி 3 இல் வெளியானது.

ஏல விற்பனையில் 10.7 கோடி

தற்போது, அந்தப் பிரதியானது சீனாவின் ஷாங்காய் நகரத்தில் செப் 28 இல் கிறிஸ்டி ஏல நிறுவனம் நடத்திய ஏல விற்பனையில், ரூ.10.7 கோடிக்கு விற்பனையானது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கையெழுத்துப் பிரதி 10.7 கோடிக்கு விற்பனை! | Albert Einstein Manuscript Sold At Auction 7 Crore

மொத்தம் 14 பக்கங்களைக் கொண்ட இந்தப் பிரதியில் சார்பியல் கொள்கையின் பயன்பாடு குறித்து விளக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கைகளுடன் தொடர்புடைய இரு சமன்பாடுகள், காலம் இடம் தொடர்பு குறித்து விளக்கும் ஒரு வரைபடம், அறிவியல் சூத்திரங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

Share:

Wednesday, September 27, 2023

அசர்பைஜானில் எரிபொருள் நிலையம் தீப்பிடித்ததில் 68 பேர் பலி ; 105 பேர் மாயம்.

 அசர்பைஜானில் எரிபொருள் நிலையம் தீப்பிடித்து எரிந்ததில் 68 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதுடன் 105 பேர் காணால்போன நிலையில், 300 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

தென்மேற்கு ஆசிய நாடான அசர்பைஜானுக்கு சொந்தமான நாகோர்னோ - கராபாக் பகுதியில் இராணுவம் அதிரடியாக களமிறங்கியது.

அப்போது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பிரிவினைவாதிகள் சரண் அடைந்தனர்.



இந்த பதற்றமான சூழ்நிலை காரணமாக அங்கிருந்தவர்கள் அர்மீனியாவுக்கு தப்பி செல்ல முயன்றனர்.

இதனால் அசர்பைஜானின் ஸ்டெபனகெர்ட்டில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக ஏராளமான கார்கள் அணிவகுத்து நின்றன.

அப்போது அந்த எரிபொருள் நிலையம் திடீரென தீப்பிடித்து எரிந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் பல கார்கள் தூக்கி வீசப்பட்டன. மேலும், இந்த தீ விரைவில் அருகில் உள்ள ஏனைய பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.

இந்த தீ விபத்தில் 68 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். 300 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர். அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Share:

கூகுளின் 25ஆவது பிறந்த தினம் இன்று..

 லகின் மிக பிரபலமான தேடுபொறி நிறுவனமான கூகுள் இன்று (27) தனது 25ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறது.

அதற்காக கூகுள் நிறுவனம், இந்த நாளை குறிக்க தனது முகப்பு பக்கத்தில் ஒரு டூடுலையும் உருவாக்கி உள்ளது.

ஆனால் கூகுள் நிறுவனமானது 1998இல் செப்டம்பர் 4இல் நிறுவப்பட்டது.

நிறுவப்பட்ட முதல் 7 வருடங்கள் மேற்குறிப்பிட்ட நாளில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டாலும் அதன் பிறகு செப்டம்பர் 27 ஆம் திகதியே கூகுளின் பிறந்த நாள் கொண்டாடப்படுகின்றது.

கூகுளின் 25ஆவது பிறந்த தினம் இன்று | Google 25 Th Birth Day

சுந்தர் பிச்சை

செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் என்ற இரு நண்பர்கள் இணைந்து உருவாக்கியதே கூகிள் என்ற தேடு பொறி நிறுவனம்.

கூகுளின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஆவார்.

கூகுளின் 25ஆவது பிறந்த தினம் இன்று | Google 25 Th Birth Day

தற்போதைய இணைய உலகில் தன்னிகரற்ற தேடுபொறியாக  கூகுள் ஜொலித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Share:

Tuesday, September 26, 2023

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு..

 ஐ.சி.சி.யின் ஒருநாள் உலகக் கிண்ண போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தசுன் சாணக்க அணியின் தலைவராக செயற்படவுள்ளதுடன் அணியின் உப தலைவராக குசல் மெண்டிஸ் உப தலைவராக செயற்படவுள்ளார்.








வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்ஷன மற்றும் டில்ஷான் மதுசங்க ஆகியோர் உடற்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் அவர்கள் மூவரும் அணியில் இணைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.

15 பேரடங்கிய இலங்கை கிரிக்கெட் குழாம் வருமாறு, 

தசுன் சாணக்க ( அணித் தலைவர்)

குசல் மெண்டிஸ்

பத்தும் நிஷங்க

குசல் ஜனித் பெரேரா

திமுத் கருணாரத்ன

சரித்த அசலங்க

தனஞ்சய டி சில்வா

சதீர சமரவிக்ரம

துனித் வெல்லலாகே

கசுன் ராஜித்த

மதீஷ பத்திரண

லகிரு குமார

வனிந்து ஹசரங்க ( உடற்தகுதியின்மை )

மகேஷ் தீக்ஷன ( உடற்தகுதியின்மை )

டில்ஷான் மதுசங்க ( உடற்தகுதியின்மை )

இதேவேளை, துஷான் ஹேமந்த மற்றும் சாமிக்க கருணாரத்தன ஆகியோரின் பெயர்கள் மேலதிக வீரர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.

Share:

சவுதி அரேபியாவில் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! வயிற்றிலிருந்து மீட்கப்பட்ட இரும்பு ஆணிகள்..

 வுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்யும் போது உணவுக்குப் பதிலாக ஆணிகள் மற்றும் இரும்பு ஸ்பிறிங் ஆகியவற்றை விழுங்க கட்டாயப்படுத்தப்பட்டதாக மாத்தளை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சவுதி வைத்தியசாலையொன்றில் உள்ள வைத்தியர் ஒருவரின் தலையீட்டில் தூதரகத்தின் ஊடாக குறித்த பணிப்பெண் சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியாவின் Taid பகுதியில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்த மாத்தளை, அல்கடுவ பிரதேசத்தினை சேர்ந்த எம்.எஸ். தியாக செல்வி என்ற பெண்ணே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

இருபத்தொரு வயதான ஒரு பிள்ளையின் தாயான எம்.எஸ். தியாக செல்வி என்ற பெண்ணிற்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து அவரது தாய் வத்தேகம காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.






Share:

Monday, September 25, 2023

சூரிய குடும்பத்தின் உருவாக்க மாதிரி: புதிய சாதனை படைத்த நாசா

 சூரிய குடும்பத்தில் உள்ளதாக அறியப்படும் மிகவும் ஆபத்தான பாறையின் தூசிகள் படிந்த மாதிரிகளை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவமான நாசா வெற்றிகரமாக பூமிக்கு கொண்டுவந்து சாதனை நிகழ்த்தியுள்ளது.

இந்த மாதிரிகளை சேகரித்த விண்கலம் உட்டா மாநிலத்தின் மேற்கு பாலைவனப் பகுதியில் தரையிறங்கியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

ஒசைரிஸ்-ரெக்ஸ் என்ற விண்கலத்தால் கடந்த 2020 ஆம் ஆண்டில் பென்னு என்ற சிறுகோள் மேற்பரப்பில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டன.

சிறுகோளின் மாதிரிகளின் ஆய்வு

அடுத்த 300 ஆண்டுகளில் பூமியை  தாக்கும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் குறித்த , மலைப்பாங்கான சிறுகோளை பற்றி மேலும் அறியும் வகையில் நாசா இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

சூரிய குடும்பத்தின் உருவாக்க மாதிரி: புதிய சாதனை படைத்த நாசா | Solar System Formation Model Nasa Break New Record

இதனைத் தவிர 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான சூரிய குடும்பத்தின் உருவாக்கம் மற்றும் உலகில் வாழ்க்கை எவ்வாறு தொடங்கியது என்பது பற்றிய புதிய நுண்ணறிவுகளை குறித்த சிறுகோளின் மாதிரிகளை ஆய்வு செய்வதன் ஊடாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

தரையிறக்கம்

இந்த நிலையில் அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான பாலைவன நிலத்தில் திட்டமிட்ட நேரத்திற்கு 3 நிமிடங்கள் முன்னதாக மாதிரிகளை சேகரித்த விண்கலம் தரையிறங்கியுள்ளது.

காரின் சக்கரம் அளவான குறித்த கொள்கலன் விண்கலமானது பூமியின் வளிமண்டலத்திற்குள் செக்கனுக்கு 12 கிலோமீற்றர் வேகத்தில் உள்நுழைந்திருந்தது. அதன்பின்னர் விண்கலத்தில் பொருத்தப்பட்ட பரசூட் மூலம் இறங்கும் வேகம் குறைக்கப்பட்டு, தரையில் மெதுவாக தரையிறக்கப்பட்டுள்ளது.

Share:

Sunday, September 10, 2023

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 6 பேர் பலி : 50 பேர் படுகாயம்

 பாகிஸ்தானில் மதம் சார்ந்த கூட்டத்திற்குச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன் 50 பேர் காயம் அடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் மேரியமாபாத்தில் பிரபல தேசிய மரியன்னை கிறிஸ்தவ ஆலயம் ஒன்று உள்ளது.

இங்கு நடைபெற்ற மதம் சார்ந்த கூட்டத்திற்கு பேருந்து ஒன்றில் ஏராளமானோர் சென்ற நிலையில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.

pakistan accident

விபத்துக்கான காரணம்

அளவுக்கு அதிகமானோர் பேருந்தில் பயணம் செய்ததும், வளைவான பகுதியில் சாரதி வேகமாக சென்றதும் விபத்து ஏற்ப்படுவதற்கான காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஐந்து பேரின் நிலை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Share:

Thursday, September 7, 2023

உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியார் – 6 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை..!

 உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் மீது மதுரை காவல் துறையினர் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.




தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டின் போது சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது நாடு முழுவதிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து உத்தரப்பிரதேசத்தைச் அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி தலையை கொண்டு வருவோருக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

மேலும்  உதயநிதியின் தலையை யாரும் சீவவில்லை என்றால் நானே சீவுவேன். அதற்காக வாள் ஒன்றையும் தயாரித்துள்ளேன். உதயநிதி தலையை வெட்ட ரூ.10 கோடி போதாது எனில் அந்த தொகையை உயர்த்தவும் தயார் என கூறியிருந்தார்.

இந்நிலையில் அமைச்சரை அச்சுறுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், அச்சுறுத்தும் விதமாக வீடியோ வெளியிட்ட பரமஹம்ச ஆச்சார்யா மற்றும் அவரது வீடியோவை X தளத்தில் பதிவிட்ட ஐடியின் பயனாளர் பியூஸ்ராய் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி திமுகவின் மதுரை மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் தேவசேனன் சார்பில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் இருவர் மீதும் 153, 153A (1) (a), 504, 505(1)(b), 505(2) & 506(ii) IPC 6 பிரிவுகளின் கீழ் மதுரை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி, கலகத்தை விளைவிக்கும் நோக்கில் செயல்படுதல், ஒற்றுமைக்கு குந்தகமாக செயல்படுதல், அமைதியின்மையை வேண்டுமென்றே ஏற்படுத்துதல், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துதல், தீய எண்ணத்தை உருவாக்குதல், கொலை மிரட்டல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதே போல் சாமியாரின் டுவிட்டர் கணக்கை கையாளும் பியூஸ் ராய் என்பவர் மீதும் அதே 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

Share:

பிரித்தானியாவில் இரு குழந்தைகளை காப்பாற்றிய தமிழ் இளைஞருக்கு நேர்ந்த கதி

 பிரித்தானியாவில் நீரில் மூழ்கி தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


27 வயதுடைய மோகனநீதன் முருகானந்தராஜா என்ற தமிழ் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியில் அமைந்துள்ள Brecon Becons ஏரியில் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு சிறார்களை மீட்கும் முயற்சியில் ஏரியில் குதித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இறுதிச்சடங்குகளுக்காக நிதி திரட்டல்

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் முடிவில் சுமார் 7 மணியளவில் நீருக்கடியில் செயற்படும் கமெராவினால் அந்த இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.


மோகனின் மறைவை அடுத்து அவர் செயல்பட்டு வந்த Blue Lion's Badminton அணி நிர்வாகம் அஞ்சலி செலுத்தியுள்ளதுடன், இறுதிச்சடங்குகளுக்காக பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share:

Sunday, September 3, 2023

சர்ச்சைக்குரிய வெடி பொருட்களை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்கா

 யுரேனியம் அடங்கிய சர்ச்சைக்குரிய வெடி பொருட்களை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இரு அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உத்தியோகபூர்வ அறிவிப்பு

சர்ச்சைக்குரிய வெடி பொருட்களை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்கா | Us To Send Uranium Munitions To Ukraine

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையிலான போர் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனுக்கான அமெரிக்காவின் புதிய உதவிகள் தொடர்பான தகவல்கள் அடுத்த வாரம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ரஷ்யாவின் போர்த்தாங்கிகளை அழிக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள வெடி பொருட்களை அமெரிக்கா வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Tuesday, August 29, 2023

நைஜரிலிருந்து வெளியேற பிரான்ஸ் தூதா் மறுப்பு

நைஜரிலிருந்து வெளியேற வேண்டும் என்று அந்த நாட்டு இராணுவ ஆட்சியாளா்கள் பிறப்பித்திருந்த உத்தரவை பிரான்ஸ் தூதா் இட்டே சில்வெயின் நிராகரித்திருந்தார். இது குறித்து தங்கள் நாட்டு தூதா்களிடையே திங்கட்கிழமை உரையாற்றிய பிரான்ஸ் அதிபா் இமானுவல் மக்ரான் கூறியதாவது, கடந்த சில மாதங்களாக சூடானிலும், தற்போது நைஜரிலும் பிரான்ஸ் தூதா்கள் பல்வேறு சவால்களை துணிச்சலுடன் எதிா்கொண்டு வருகின்றனா். நைஜா் இராணுவ ஆட்சியாளா்கள் விதித்திருந்த காலக்கெடுவுக்குப் பிறகும் அந்த நாட்டிலிருந்து பிரான்ஸ் தூதா் இட்டே சில்வெ வெளியேறாமல் இருப்பது மிகவும் பாராட்டத்தக்கது என்று அவர் கூறியுள்ளார்.
Share:

வீராங்கனைக்கு அனுமதியின்றி முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் இடைநிறுத்தம்




 2023 மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் சம்பியனான ஸ்பானிய அணியின் வீராங்கனைகளில்  ஒருவரை அனுமதியின்றி உதட்டில் முத்தமிட்ட குற்றச்சாட்டுக்குள்ளான, அந்நாட்டின் கால்பந்தாட்டச் சம்மேளனத் தலைவர் லூயிஸ் ரூபியாலெஸ், பீபாவினால் 90 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் கடந்த 20 ஆம் திகதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 1:0 விகிதத்தில் வென்று ஸ்பானிய மகளிர் அணி முதல் தடவையாக உலகக் கிண்ணத்தை வென்றது.

இப்போட்டியின் பின்னர் ஸ்பானிய அணி வீராங்கனைகளில் ஒருவரான ஜெனிபவர் ஹேர்மசோவுக்குகால்பந்தாட்டச் சம்மேளனத் தலைவர் லூயிஸ் ரூபியாலெஸ் உதட்டில் முத்தமிட்டார்இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

முத்தமிடுவதற்கு ஜெனியிடம் அனுமதி கோரியதாகவும்அதற்கு ஜெனி சம்மதித்த நிலையிலேயே அவரை தான் முத்தமிட்டதாகவும் ரூபியாலெஸ் கூறினார்.

எனினும்,  முத்தத்துக்கு தான் சம்மதிக்கவில்லை என வீராங்கனை ஜெனி கூறினார்.

'அச்சம்பவத்தை நான் விரும்பவில்லைமனக்கிளர்ச்சியால் தூண்டப்பட்ட பாலியல்ரீதியிலான செயலுக்குஎனது  தரப்பில் சம்மதம் எதுவும் இல்லாமலேயே பாதிக்கப்பட்டவளகாக உணர்ந்தேன்என அவர் தெரிவித்துள்ளார்.

ரூபியாலெஸின் செயலை நியாயப்படுத்தும் விதமாக அறிக்கை வெளியிடுவதற்கு தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் ஜெனிபர் (33) கூறினார்.

இதையடுத்துஸ்பானிய கால்பந்தாட்டச் சம்மேளனத் தலைவர் பதவியிலிருந்து ரூபியாலெஸ் இராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமடைந்தன.

தான் இராஜினாமா செய்யப்போவதில்லை என 46 வயதான ரூபியாலெஸ் தெரிவித்தார்.

ரூபியாலெஸ் பதவியிலிருந்து நீக்கப்படாவிட்டால்  தாம் மீண்டும் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என ஸ்பானிய மகளிர் உலகக் கிண்ண குழாத்திலுள்ள 23 வீராங்கனைகளும் மேலும் சுமார் 50 தொழிற்சார் வீராங்கனைகளும் அறிவித்தனர்.

போட்டியில் பங்குபற்ற அழைக்கப்பட்டால்  பங்குபற்ற  வேண்டிய கடப்பாடு வீராங்கனைகளுக்கு உள்ளது என ஸ்பானிய கால்பந்தாட்டச் சம்மேளனம் பதிலளித்தது.

 அதேவேளைஸ்பெய்னின் மகளிர் கால்பந்தாட்டச் செயற்திட்டத்தில் அங்கம் வகிக்கும் பயிற்றுநர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான 11 பேர்  கூட்டாக இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தனர்.

தான் இராஜினாமா செய்யப்போவதில்லை என ஸ்பானிய கால்பந்தாட்டச் சங்கத்தின் தலைவர் லூயிஸ் ரூபியாலெஸ் தொடர்ந்தும் கூறிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில்ரூபியாலெஸ் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக தான் விசாரிப்பதாக சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (பீபா) கடந்த வியாழக்கிழமை தெரிவித்தது,

ஆனால். ரூபியாலெஸ் தொடர்பில் வீராங்கனை ஜெனி பொய் கூறியதாக ஸ்பானிய கால்பந்தாட்டச் சம்மேளனம்  குற்றம் சுமத்தியதுடன் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.

அதையடுத்து . ரூபியாலெஸை 90 நாட்களுக்கு சகல விதமான கால்பந்தாட்டச் செயற்பாடுகளிலிருந்தும் தான் இடைநிறுத்துவதாக கடந்த சனிக்கிழமை அறிவித்தது. 

அதைடுத்துஸ்பானிய கால்பந்தாட்டச் ம்மேளனத்தின் உப தலைவர்  பெட்ரோ ரோச்சாவை இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என அச்சம்மேளனம் சனிக்கிழமை (26) தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரூபியாலெஸுக்கு எதிராக தான் உள்ளக விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக ஸ்பானிய கால்பந்தாட்டச் சங்கம் நேற்றுமுன்தினம் (27) தெரிவித்துள்ளது.

உலகக்  கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் ஸ்பெய்னிடம் தோல்வியுற்ற இங்கிலாந்து அணி வீராங்கனைகளும்  ஜெனிக்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

நிலவைத் தொடர்ந்து சூரியனில் களமிறங்கத் துடிக்கும் இந்தியா

 




பல வருட கால கனவு திட்டமான நிலவு பயணம் வெற்றிப்பெற்றமையை அடுத்து சூரியனுக்கான தனது ஆய்வு பயணத்தை இந்தியா ஆரம்பித்துள்ளது. 

நிலவிற்காக சந்திராயன் 3 என்ற விண்கலத்தை இந்தியா நிலவுக்கு அனுப்பியது. இந்த  விண்கலகலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 23 ஆம் திகதி நிலவின் தென்துருவத்தில் தரையங்கியது. 

எந்த ஒரு நாடும் கால்பதிக்காத நிலவின் தென்துருவத்தில் இந்தியா கால் பதித்ததோடு அவ்விடத்திற்கு பிரதமர் மோடி சிவசக்தி என பெயரிட்டுள்ளார். 

இஸ்ரோவின் நிலவுத் திட்டமான சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வுப் பணியை மேற்கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் அடுத்த கனவுத் திட்டமான சூரிய திட்டத்தை செயல்படுத்தும் பணியில் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.

விண்வெளியில் இருந்தவாறு சூரியனை ஆய்வு செய்யவுள்ள இந்திய ஆய்வகமான ஆதித்யா-எல்1, செப்டம்பர் 2-ம் திகதி  விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வகமான ஆதித்யா-எல்1, எதிர்வரும்  செப்டம்பர் மாதம்  ஆம் திகதியன்று 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.  

சூரியன் - பூமி அமைப்பில் சுமார் 15 இலட்சம் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளி 1 (எல் 1) ஐச் சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் ஆய்வகம் வைக்கப்படும் என்றும், இந்த புள்ளியை விண்கலம் அடைய 120 நாட்களுக்கு மேல் ஆகும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தடையின்றி தொடர்ந்து சூரியனைப் பார்க்கும் வகையில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதால், அது சூரியன் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளும் என்றும்  எதரிவித்துள்ளது.

மேலும், "எல் 1 புள்ளியைச் சுற்றியுள்ள ஒளிவட்ட சுற்றுப்பாதையில் ஆய்வகம் வைக்கப்படுவதால் எந்த தடையும் இல்லாமல் சூரியனைத் தொடர்ந்து பார்க்கும் முக்கிய நன்மை கிடைக்கும். சூரியனின் செயல்பாடுகள் மற்றும் விண்வெளி வானிலை ஆகியவை குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும். 

சூரியனின் வெளிப்புற அடுக்குகளை கண்காணிக்க ஏழு பேலோடுகளை விண்கலம் சுமந்து செல்கிறது. நான்கு பேலோடுகள் சூரியனை நேரடியாகப் பார்க்கும். மீதமுள்ள மூன்று பேலோடுகள், லாக்ரேஞ்ச் புள்ளி L1 இல் உள்ள துகள்கள் மற்றும் புலங்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனின் ஒளி மண்டலம், நிற மண்டலம், சூரியனின் வெளிப்புற அடுக்குகள், ஒளி வட்டம் ஆகியவற்றை பற்றி ஆய்வு செய்ய இதில் விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி ( Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி, ஏ ஸ்பெக்ஸ் (Aditya Solar wind Particle Experiment) என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் பிஏபிஏ ( Plasma Analyser Package for Aditya ), சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் ( Solar Low Energy X-ray Spectrometer), சூரியனின் வெளிப்புற அடுக்குகளில் ஏற்படும் டைனமிக் மாற்றங்களை ஆராயும் ஹெல் 10எஸ் ( High Energy L1 Orbiting X-ray Spectrometer), கிரகங்களுக்கு இடையேயான காந்த புலதன்மையை அளவிடும் மேக்னோ மீற்றர் என்ற 7 முக்கிய கருவிகள் உள்ளன.

ஆதித்யா-எல்1 ஆய்வுத் திட்டத்தின் முழுப் பணிகளும், உள்நாட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படுகிறது. ஆதித்யா செயற்கைக்கோள் தற்போது ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதை பிஎஸ்எல்வி- எக்ஸ்எல் (சி57) என்ற ரொக்கெட் மூலம், செப்டம்பர் 2-ஆம் திகதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ஆதித்யா-எல்1 திட்டம் மூலம் சூரியனின் வெளிப்பகுதியில் நிலவும் வெப்ப மாறுபாடுகளை கண்டறிவதுடன், சூரிய புயல்களின் தாக்கங்களையும் கண்டறிய முடியும்.

சந்திராயன் 4 திட்டம் ஐப்பானுடன் இணைந்து மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. எதிர் வரும் காலங்களில் இது செயலுக்கு வரக்கூடும். இவ்வாறு இந்தியா தொடர்ந்து விண்வெளித்துறையில் தன் பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

Share:

வெறிநாய்கள் கடித்து குதறியதில் 17 ஆடுகள் துடிதுடித்து பலி

 பட்டியில் அடைத்து வைக்கப்பட்ட ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறியதில்17 ஆடுகள் துடிதுடித்து பலியான பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தமிழகம் சேலம் மாவட்டம் ஆத்தூர் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பட்டியில் அடைத்த நிலையில்

வெறிநாய்கள் கடித்து குதறியதில் 17 ஆடுகள் துடிதுடித்து பலி | 17 Goats Killed In Rabid Dog Bite

ஆட்டின் உரிமையாளரான முருகனிடம் 50 ஆடுகள் இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 30 ஆடுகளை விற்றுள்ளார் . மிகுதி ஆடுகளை மேய்ச்சலுக்கு பின்னர் பட்டியில் அடைத்த நிலையில் அதிகாலைவேளை பட்டிக்குள் புகுந்த ஆறுக்கும் மேற்பட்ட வெறிநாய்கள் அங்கிருந்த 17 ஆடுகளை கடித்துக் குதறின.

இதனால் துடிதுடித்து அத்தனை ஆடுகளும் பரிதாபகரமாக உயிரிழந்தன. கால்நடைகள் மூலமே தனது வாழ்வாதாரத்தை ஈட்டி வந்த அவர் செய்வதறியாது உள்ளார்.

Share:

Monday, August 28, 2023

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இங்கிலாந்து விமான சேவையில் பாதிப்பு

 தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இங்கிலாந்து விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய விமான சேவை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் தொழில்நுட்பச் சிக்கல் எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போக்குவரத்து தாமதம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இங்கிலாந்து விமான சேவையில் பாதிப்பு | Uk Air Traffic Control Technical Issue

இதனால் விமானங்கள் தாமதமாக வரலாம் என இங்கிலாந்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் பிரித்தானியாவின் தேசிய விமான சேவை தெரிவிக்கையில், “எதிர்கொள்ளும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமானங்களுக்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இதனால் விமானங்கள் தாமதமாகலாம்” என வலியுறுத்தியுள்ளது.

Share:

வடகொரிய அதிபர் கிம்ஜொன்னின் மீது கொலை முயற்சி - தீவிரப்படுத்தப்படும் பாதுகாப்புகள்..

 வடகொரியா பலநாடுகளுடன் முரண்பட்டுக்கொண்டு வருகின்ற நிலையில், அந்நாட்டின் அதிபர் கிம்ஜொன் உன்னை கொலை செய்யும் முயற்சி ஒன்று அரங்கேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

வடகொரியா அதிபர் கிம்ஜொன் உன் அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பினையும் மீறி அவ்வப்போது அணு ஆயுத ஏவுகணைச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

கொலை முயற்சி

வடகொரிய அதிபர் கிம்ஜொன்னின் மீது கொலை முயற்சி - தீவிரப்படுத்தப்படும் பாதுகாப்புகள் | Kim Jong Un Sad

இந்நிலையில், அண்மையில் வடகொரியாவின் தலைநகரான பியாங்யாங் நகரில் குண்டுவெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் கிம்மை கொலை செய்யும் முயற்சியாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து கிம்முக்கான பாதுகாப்பு பலப்பட்டுள்ளதாகவும் இதற்காக வெளிநாட்டில் இருந்து நவீன சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளன.

Share:

Wednesday, August 23, 2023

சூடானின் உள்நாட்டு போர் - பட்டினியால் 500 சிறார்கள் மரணம்!!!!!

கடந்த மே முதல், ஜூலை வரையில், 316 குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்துள்ளதோடு, இதில் பெரும்பாலான குழந்தைகள் 5 வயதுக்கும் குறைவானவர்கள் என சூடானின், 'சேவ் தி சில்ட்ரன்' என்ற அமைப்பின் இயக்குனர் ஆரிப் நுார் தெரிவித்துள்ளார். கிழக்கு ஆபிரிக்க நாடான சூடானில், இராணுவத்துக்கும், துணை இராணுவப் படைக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் மோதல் வெடித்தது. இது மிகப் பெரிய சண்டையாக உருவெடுத்ததை அடுத்து, தலைநகர் கார்தோம் உள்ளிட்ட நகர்ப்புறங்கள் போர்க்களங்களாக காட்சி அளிக்கின்றன. நாடு முழுதும் பதற்றம் நீடித்து வருகிறது. பொதுமக்கள் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர். நாட்டின் சுகாதார வசதி முற்றிலுமாக முடங்கி உள்ளது. அத்துடன், சரியான உணவு கிடைக்காமல் அந்நாட்டு குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்து வருகின்றனர். ஊட்டச்சத்து குறைபாடு சூடானின் உள்நாட்டு போர் - பட்டினியால் 500 சிறார்கள் மரணம் | 500 Children Die Starvation Fighting In Sudan இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், “ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, 2,400 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு கடாரிப் மாகாணத்தில் உள்ள அரச குழந்தைகள் மருத்துவமனையில், 132 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால், ஏப்ரல் முதல், ஜூலை வரையிலான காலத்தில் உயிரிழந்தனர். தலைநகர் கார்தோமில் உள்ள அரசு ஆதரவற்றோர் இல்லத்தில், 20க்கும் மேற்பட்ட கைக்குழந்தைகள் உட்பட 50 குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு சிகிச்சை பெற முடியாமல், 31,000 குழந்தைகள் தவித்து வருகின்றனர்” என்றார்.
Share:

About