Column Left

Vettri

Breaking News

அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதை!!




பாறுக் ஷிஹான்

அம்பாறை  தலைமையக  பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026ம் ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை இன்று பொலிஸ் உள்ளக    மைதானத்தில் இடம்பெற்றது.

அம்பாறை  தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான  பரிசோதகர் உபுல் இந்திரஜித் குணவர்தன    தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை  பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்ன பங்குபற்றலுடன்  அம்பாறை பிரிவுக்கு சிரேஸ்ட  பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சியின் மேற்பார்வையில்  அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அம்பாறை  மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வெதமுல்ல   பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து பொலிஸ் பிரிவு வாகனங்களின் பேரணி ஆரம்பமானது .மேலும் காலை முதல் மாலை வரை  பொலிசாரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவைப்பிரிவு நிலையங்கள், சுற்றுச்சூழல் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட அறைகள் என்பவற்றைப் பார்வையிட்டதுடன், பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களையும் பரிசோதனை மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் அம்பாறை  தலைமையக  பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த   பொலிஸாரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும்  பொலிஸ் உத்தியோகத்தர்களின் சுகாதார முறைகள்  பொலிஸ் நிலையத்திலுள்ள பௌதீக வள பற்றாக்குறை தொடர்பிலும் ஆராய்ந்தார்.

இறுதியாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வழிப்படுத்தல் வகுப்பு அம்பாறை  மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் நடைபெற்றதுடன்   பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த   பொலிஸாரின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றமை  குறிப்பிடத்தக்கது.

No comments