----VETTRI NEWS.COM---- பக்கசார்பற்ற நம்பகத்தன்மையான தகவல்கள் மக்கள் முன்...

Saturday, September 30, 2023

பாகிஸ்தானில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அடிதடி
 பாகிஸ்தானில் தொலைக்காட்சி விவாதத்தின் போது இம்ரான் கான் யூதர்களின் ஏஜென்ட் என விமர்சித்ததால் ஆத்திரம் அடைந்து கைகலப்பு ஏற்பட்டது. 

பாகிஸ்தானில் உள்ள பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில், இம்ரான் கான் வழக்கறிஞர் ஷெர் அப்சல் கான் மார்வாட், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சி சார்பில் அதன் செனட்டர் அப்னான் உல்லா கான் உட்பட சில முக்கியக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் போது, இம்ரான் கான் கட்சியின் வழக்கறிஞர் ஷெர் அப்சல் கான் மார்வாட்டுக்கும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியின் செனட்டர் அப்னான் உல்லா கானுக்கும் இடையில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இம்ரான் கான் வழக்கறிஞர் மார்வாட், அப்னானை தாக்க, பதிலுக்கு அப்னானும் தாக்க, நிகழ்ச்சி நடந்த இடம் போர்க்களமானது.

இதையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விரைந்து வந்து இருவரையும் சமாதானப்படுத்தினர். இச்சம்பவம் தொடர்பான காணொளிக் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share:

யாழுக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய

 இலங்கையின் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று வெள்ளிக்கிழமை (29) யாழ்ப்பாண மாவட்டத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், கரு ஜெயசூரிய நேற்று காலை தொடக்கம் மதியம் வரை மானிப்பாய் சுதுமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இரண்டாம் மொழி கற்கைநெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டார். 

பின்னர், அவர் பிற்பகல் 4 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருகை தந்ததுடன், அங்கு இடம்பெற்ற விசேட பூஜைகளில் கலந்துகொண்டார்.

பின்னர், யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரை மத்தியஸ்தானத்தின் விகாரைக்கு சென்றதுடன் ஸ்ரீ நாகவிகாராதிபதி ஸ்ரீ விமலரத்தன தேரரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதில் வட மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் வ.ஜெயசீலன் ஆகியோர் பங்கேற்றனர்.

Share:

நில்வளா கங்கை பெருக்கெடுப்பு ; மாத்தறையில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின !

 
மாத்தறை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழையினால் நில்வளா கங்கை பெருக்கெடுத்துள்ள நிலையில், அப்பகுதியில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அங்கு போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

அக்குரஸ்ஸ - மாத்தறை பிரதான வீதியின் பரடுவ பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அக்குரஸ்ஸ - ஹொரகொட ஊடான மாத்தறை வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார்  பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அக்குரஸ்ஸ - சியம்பலாகொட வீதியின் பாணடுகம பகுதியும் நீரில் மூழ்கியுள்ளது.

அக்குரஸ்ஸ - கம்புறுப்பிட்டிய வீதி மற்றும் அக்குரஸ்ஸ - மாகந்துர வீதி என்பன வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் வாகனப்  போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share:

பங்களாதேஷுடனான பயிற்சிப் போட்டியில் இலங்கை தோல்வி : குசலுக்கு தோற்பட்டையில் உபாதை


 இந்தியாவில் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ள 13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக குவஹாட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக சனிக்கிழமை (29) நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் 7 விக்கெட்களால் இலங்கை தோல்வி அடைந்தது.

ஆரம்ப வீரர் குசல் பெரேரா திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கையில் தொற்பட்டையில் ஏற்பட்ட உபாதை காரணமாக ஓய்வு பெற்றார். 

இது பாரதூரமானது அல்லவென தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், அது இலங்கை அணிக்கு சற்று கவலையைத் தோற்றுவித்துள்ளது.

இந்தப் பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 49.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 263 ஓட்டங்களைப் பெற்றது.

சதீர சமரவிக்ரம, அணித் தலைவர் தசுன் ஷானக்க ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் தொடர்ந்து பிரகாசிக்கத் தவறினர்.

பெத்தும் நிஸ்ஸன்கவுடன் ஆரம்ப விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து குசல் பெரேரா 34 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது உபாதைக்குள்ளாகி ஓய்வு பெற்றார்.

தொடர்ந்து பெத்தும் நிஸ்ஸன்கவுடன் 40 ஓட்டங்களைப் பகிர்ந்த குசல் மெண்டிஸ் 22 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து சதீர சமரவிக்ரம 2 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த பெத்தும் நிஸ்ஸன்க 68 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

29ஆவது ஓவரில் இலங்கை 3 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது. ஆனால், கடைசி 7 விக்கெட்கள் 99 ஓட்டங்களுக்கு சரிந்தன.

மத்திய வரிசையில் தனஞ்சய டி சில்வா திறமையாகத் துடுப்பெடுத்தாடி 55 ஓட்டங்களைப் பெற்றார்.

சரித் அசலன்க (18), தசுன் ஷானக்க (3), திமுத் கருணாரட்ன (18), துனித் வெல்லாலகே (10), துஷான் ஹேமன்த  (11), லஹிரு குமார (13 ஆ.இ.) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை.

பங்களாதேஷ் பந்துவீச்சில் மெஹெதி ஹசன் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 42 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 264 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

முன்வரிசை வீரர்களான தன்ஸித் ஹசன் (84), லிட்டன் தாஸ் (61), பதில் தலைவர் மெஹிதி ஹசன் மிராஸ் (67 ஆ.இ.) ஆகியோர் பங்களாதேஷின் வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.

லிட்டன் தாஸுடன் ஆரம்ப விக்கெட்டில் 131 ஓட்டங்களையும் மெஹிதி ஹசன் மிராஸுடன் 2ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களையும் தன்ஸித் ஹசன் பகிர்ந்தார்.

இளம் அதிரடி வீரர் தௌஹித் ரிடோய் ஓட்டம் பெறவில்லை.

எனினும் மெஹதி ஹசன் மிராஸ், முஷ்பிக்குர் ரஹிம் (35 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷின் வெற்றியை உறுதிசெய்தனர்.

இவ்வாறான பயிற்சிப் போட்டியில் ஒவ்வொரு அணியிலும் இடம்பெறும் 15 வீரர்களுக்கும் விளையாட வாய்ப்பு வழங்கப்படுகிறது.

Share:

மன்னாரில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

 மன்னார் சிலாவத்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்தரிப்புத்துறை கடற்கரை ஓடைப் பகுதியில் ( ஆற்றுவாய் )  உயிரிழந்து பல நாட்கள் ஆகி சிதைவடைந்து எலும்புகள் தெரியும் வண்ணம் உள்ள சடலம் ஒன்று முத்தரிப்புத்துறை மீனவர்களால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (29) கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கடலுக்குள் வலை பாய்ச்சுவதற்காக சென்ற மீனவர்கள் குறித்த உடலை கண்டுபிடித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட சடலம் தொடர்பாக சிலாவத்துறை பொலிஸாருக்கு  மீனவர்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Share:

பண மோசடியில் ஈடுபட்டவர் கைது!

 வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நுவரெலியா காவல்துறையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாவை மோசடி செய்துள்ளார் என கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, நுவரெலியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

விசாரணைகள்

இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கடுகன்னாவை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண மோசடியில் ஈடுபட்டவர் கைது | Arrested Money Fraud Foreign Employment Sl Police

காலி, மீரந்தெனிய பகுதியை சேர்ந்த 51 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது 

Share:

இலங்கையில் தலைமறைவாக இருக்கும் பிரித்தானியப் பெண்

 இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற காலிமுகத்திடல் போராட்டத்தின் போது  காணொளிகளைப் பகிர்ந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரித்தானிய சமூக ஊடகப் பெண் தொடர்ந்தும், தாம் இலங்கையில் தலைமறைவாகவே இருப்பதாக பிரித்தானிய இணையம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 13 மாதங்கள் இவ்வாறு தலைமறைவாக உள்ள நிலையில் தாம் நம்பிக்கையை இழந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

35 வயதான கெய்லீ ஃப்ரேசர் (Kayleigh Fraser), தங்கியிருந்த இடத்தில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இலங்கை குடிவரவு அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்ட போது அவர் சட்டவிரோத விசாவில் நாட்டிற்கு வருகை தந்ததாக கூறி அவரது கடவுச்சீட்டை அதிகாரிகள் கைப்பற்றினர்.

பயங்கரவாத தடைச் சட்டம்

காலிமுகத்திடல் போராட்டங்களின் காணொளிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பகிரத் தொடங்கியதன் பின்னரே, அதிகாரிகள் தமது வீட்டை சோதனையிட்டதாக கெய்லீ ஃப்ரேசர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தலைமறைவாக இருக்கும் பிரித்தானியப் பெண் | British Woman Trapped In Sri Lanka For 13 Months

இந்தநிலையில் அவரை நாட்டில் இருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.  இலங்கையின் உயர்நீதிமன்றம், அதிகாரிகள் பிறப்பித்த நாடுகடத்துதல் உத்தரவை உறுதி செய்தது.

எனினும் நாட்டின் மோசமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில், இலங்கை அதிகாரிகளிடம் சரணடைய தாம் பயப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்துபூர்வ உறுதிமொழி

இந்த நிலையில் பிரித்தானியாவின் வடகிழக்கு ஃபைஃபா (Fifa) பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வெண்டி சேம்பர்லெய் (Wendy Chamberlai) நாட்டின் வெளியுறவு அலுவலக அதிகாரிகளை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தலைமறைவாக இருக்கும் பிரித்தானியப் பெண் | British Woman Trapped In Sri Lanka For 13 Months

இதன்போது அவர், கெய்லீ ஃப்ரேசர் இலங்கையை விட்டு வெளியேற உத்தரவாதம் அளிக்கப்படும் என்ற எழுத்துபூர்வ உறுதிமொழியை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Share:

நலமுடன் இருக்கிறேன் : மகிந்த அறிவிப்பு

 தனது உடல்நிலை குறித்து சமுக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை மறுத்துள்ள முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

களனி விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கேள்வியொன்றுக்கு பதிலளித்த அவர்,

பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்

தான் நலமுடன் இருப்பதாகவும் சமுக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

நலமுடன் இருக்கிறேன் : மகிந்த அறிவிப்பு | I Am In Good Health Says Mr

"நான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேனா அல்லது நல்ல நிலையில் இருக்கிறேனா என்பதை நீங்கள் பார்க்கலாம். சமுக ஊடகங்களில் இடுகையிடுவதை ஒருவர் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது," என்று அவர் கூறினார்.

இனியும் நீடிக்க முடியாது 

மேலும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக இனியும் நீடிக்க முடியாது எனவும், இளம் தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நலமுடன் இருக்கிறேன் : மகிந்த அறிவிப்பு | I Am In Good Health Says Mr

Share:

பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறிய நீதிபதி: ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு

 குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க, அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்குஉத்தரவிட்டுள்ளார்.

 தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையினருக்கு அல்லது நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு நீதவான் ஒருபோதும் அறிவிக்காத காரணத்தினால் அதிபர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

அதிபரின் உத்தரவு

எனவே, இந்த சம்பவத்திற்கான மூல காரணத்தை உடனடியாக ஆராயுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருடன் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதுடன், இதற்கு முன்னர் மரண அச்சுறுத்தல்கள் தொடர்பில் நீதவான் முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது.

கடந்த 24ஆம் திகதி வெளிநாடு சென்ற நீதவான், தனது பதவி விலகல் கடிதத்தை செப்டெம்பர் 23ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளார் என அதிபர் செயலக தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share:

Friday, September 29, 2023

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான நான்கு விமானங்கள் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு மணிக்கணக்கில் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். சிங்கப்பூர், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக சென்றன. நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பாகிஸ்தானின் லாகூர் நோக்கிப் புறப்படவிருந்த UL 153 என்ற விமானம் தாமதமானதால், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மீண்டும் வீட்டிற்கு செல்ல நேரிட்டது. விமான சேவைகள் தாமதம் அதன்பின், இந்தியாவின் சென்னை மற்றும் பங்களாதேஷ் டாக்கா செல்லும் விமானங்கள் தாமதமாக வருவதாக அறிவிக்கப்பட்டதால் பயணிகள் பதற்றமடைந்துள்ளனர். விமான நிலையம் வந்தடைந்ததும், சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையத்திற்கு நேற்று மதியம் 12.15 மணிக்கு புறப்பட வேண்டிய யுஎல் 308 என்ற விமானம் சுமார் ஐந்து மணி நேரம் தாமதமாக புறப்படும் என பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விமானம் நேற்று மாலை சுமார் 5.00 மணியளவில் சிங்கப்பூருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் சிங்கப்பூர் வந்த பயணிகள் உணவு பெறுவதற்காக டோக்கன் வழங்கப்பட்ட போதும் உணவு கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அத்துடன், கடமையில் இருந்த உத்தியோகத்தர்கள் இது தொடர்பில் விசாரிக்க வருகைத்தராமையினாலும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அவசர தொலைபேசி இலக்கமான 011-7771979 என்ற தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிக்காமையினாலும் பயணிகள் மேலும் சிரமப்பட்டனர். இதேவேளை, நேற்று முன்தினம் அதிகாலை சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானத்தில் ஏற்பட்ட பிரச்னையால், வணிக வகுப்பு பயணிகள் சிலர், இந்தோனேசியாவின் ஜகார்த்தா வழியாக சிங்கப்பூருக்கு மற்றொரு விமானத்தில் செல்ல நேரிட்டது.
Share:

Thursday, September 28, 2023

சந்தோஷ் நாராயணன் இசையில் “ஜிகர்தாண்டா double x” படத்துக்கு பாடல் எழுதியுள்ள யாழ். இளைஞன்

 ராகவா லோரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளித் திருநாளன்று வெளியாகவுள்ள “ஜிகர்தாண்டா double x” படத்தில் இலங்கை கலைஞரான பூவன் மதீசன் பாடல் எழுதியிருப்பதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு மற்றும் கலைஞர்களுடனான சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.“ஜிகர்தாண்டா double x” படத்தில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய காட்சி இருப்பதாகவும் அதனை அருமையாக இயக்குநர் கையாண்டிருப்பதாகவும் தெரிவித்த சந்தோஷ் நாராயணன், அதற்கேற்ற மாதிரி யாழ்ப்பாணத் தமிழில் ஒரு பாடலை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த பாடலையே நம் நாட்டு பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகங்களைக் கொண்ட கலைஞர் பூவன் மதீசன் எழுதியுள்ளதாக குறிப்பிட்டார். அத்துடன், மதீசனுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் காத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Share:

400 சிறுவர்கள் 2022 ஆம் ஆண்டில் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளனர் !

 கடந்த 2022ஆம் ஆண்டில் மாத்திரம் 400 சிறுவர்கள் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் பிரதிநிதி பேராசிரியர் சமத் தர்மரத்ன தெரிவித்தார்.

வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபையினால் “வேகமாக அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள்“ என்ற தலைப்பில் இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் நேற்று புதன்கிழமை (27) இடம்பெற்ற ஊடக விழிப்புணர்வு சபை கூட்டத்தில் கலந்துகொண்ட உரையாற்றுகையிலேயே இலங்கை மருத்துவ சங்கத்தின் பிரதிநிதி பேராசிரியர் சமத் தர்மரத்ன இவ்வாறு தெரிவித்தார்.

வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இலங்கையில் 30 வருட கால யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் கிட்டத்தட்ட 1.8 பில்லியன் ரூபாய் அளவில் வீதி விபத்துக்களில் காயமடைந்தவர்களின் சிகிச்சைக்காக செலவிடப்படுகின்றது.

2016 முதல் 2018 வரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களால் இலங்கையில் 24,786 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20,000 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாளாந்தம் ஏறக்குறைய ஏழு முதல் எட்டு பேர் வீதி விபத்துக்களில் உயிரிழக்கின்றனர் அவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்கள், பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்கள் ஆவர்.

இந்த விபத்துக்களில் உயிரிழப்பவர்களில் பெரும்பாளானோர் இளைஞர்களாக காணப்படுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

வீதி விதிமுறைகளை அமுல்படுத்தினால் வீதி விபத்துகளை 10 சதவீதம் குறைக்க முடியும்.

வீதி விபத்துகளை குறைக்க முடியவில்லை என்றால், எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் வீதி விபத்துகளை விரைவாகக் கட்டுப்படுத்த நடைமுறைகளை கையாள வேண்டும், இல்லையெனில் அவை சமூக மற்றும் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண உரையாற்றுகையில்,

வீதி விபத்துக்களை தடுப்பதற்கு ஏறக்குறைய 25 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் ஆனால் ஒரே நேரத்தில் செயல்படுத்த முடியாது.

விபத்துகளைத் தடுப்பது ஒரு தேசியப் பொறுப்பாகும், மேலும் விபத்தை குறைக்கும் நோக்கத்தை அடைய ஊடகங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். 

எங்களிடம் பாதுகாப்பான வீதி கணினி கட்டமைப்பு இல்லை, ஓடுபாதைகள் இல்லை, பாதசாரிகள் நடப்பதற்கு சிறிதளவு கூட நடைபாதைகள் இல்லை மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலங்கையில் வீதி வலையமைப்பைப் பயன்படுத்த முடியாது. எவ்வாறாயினும், விபத்துகளைத் தடுப்பதற்கு பொலிஸார் முயற்சி செய்தனர்.

தொடர்ந்து கூறுகையில், பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதற்காக வீதி விபத்துகளைத் தடுக்க வீதி பொலிஸ் செயலியை அறிமுகப்படுத்த பொலிஸ் ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் விரைவில் இந்த செயலியை அறிமுகப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Share:

ரயிலுடன் சிறிய லொறி மோதி விபத்து : ஒருவர் பலி, மற்றுமொருவர் படுகாயம்

யிலுடன் சிறிய ரக லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்டியாகொட பிரதேசத்தின் கஹாவ பகுதியில் உள்ள கொடகம புகையிரத கடவையில் இன்று வியாழக்கிழமை (28) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்த நபர் லொறியில் பயணித்த பத்தேகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர்  ஆவார்.

குறித்த நபர் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்த லொறியின் சாரதி பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி: ஒருவர் கைது

 கம்பளை, குருந்துவத்தை உடஹெந்தென்ன பகுதயில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த நாட்டில் தாயரிப்பாட்ட துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படை கம்பளை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (28) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கியானது T-56 துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் வகை தோட்டாக்களை சுடக்கூடிய துப்பாக்கி ஆகும்.

மேலதிக விசாரணை

அத்தோடு இந்த துப்பாக்கி வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 35 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி: ஒருவர் கைது | Gampola Gun Found In A House A Man Arrested

சம்பவம் தொடர்பில் குருந்துவத்தை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.   

Share:

சீரற்ற காலநிலையால் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

 நாட்டில் நிலவி வருகின்ற சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதில், 3 மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய பிரதேசம், கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை பிரதேசம், மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல, பிட்டபெத்தர பிரதேசம் மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பலத்த மழைவீழ்ச்சி

அதன்படி கடந்த 24 மணித்தியாலங்களிற்குள் குறித்த பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையால் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | 7 Districts Under Landslide Warning Heavy Rain

தொடர்ந்தும் மழைவீழ்ச்சி அதிகரித்தால், மண்சரிவு, பாறை சரிவு, நிலம் தாழிறக்கம் போன்ற அனர்த்தங்கள் இடம்பெற வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதற்கிடையில், 6 மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மஞ்சள் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பகுதிகளாவன,

  • காலி மாவட்டம் - நெலுவ, எல்பிட்டிய
  • ஹம்பாந்தோட்டை மாவட்டம் - வலஸ்முல்ல
  • களுத்துறை மாவட்டம் - அகலவத்தை, வல்லாவிட்ட
  • கேகாலை மாவட்டம் - ருவன்வெல்ல
  • மாத்தறை மாவட்டம் - முலடியன, அதுரலியா
  • இரத்தினபுரி மாவட்டம் - கலவான, கொலொன்ன, எஹெலியகொட, குருவிட்ட, கிரியெல்ல, அயகம, எலபாத, நிவித்திகல, பெல்மதுல்ல   
Share:

சிறிலங்காவில் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் நிலை

 சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெறவேண்டிய அடுத்தகட்ட தவணை நிதிக்கான உடன்பாட்டை எட்டத்தவறியதால் ஏற்பட்ட பின்னடைவு நிலைமை சர்வதேச ஊடகங்களால் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இரண்டாம் கட்ட தவணையான 330 மில்லியன் டொலர் நிதியை விடுவிப்பது தொடர்பாக இரண்டு தரப்புக்கும் இடையில் விரைவில் ஒரு உடன்பாடு எட்டப்படாமல் விட்டால் பொருளாதார நெருக்கடியால் கடந்த வருடம் எழுந்த மக்கள் போராட்டங்களைப் போன்ற போராட்டங்கள் மீண்டும் வெடிக்கலாம் என்ற அச்சநிலையும் எழுந்துள்ளது.

பின்னடைவுக்காக காரணம்இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அந்த நெருக்கடி நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்காக வடிவமைக்கப்பட்ட 3 பில்லியன் டொலர் கடன் திட்டம் பின்னடைவுக்கு உள்ளானதாக கருதப்படுகிறது.

சிறிலங்காவில் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் நிலை | Fear That Protests Will Break Out Again Sri Lanka

அந்த வகையில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இரண்டாம் கட்ட தவணை நிதியை பெறுவதற்குரிய உடன்பாடு ஒன்றை சிறிலங்கா அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் எட்டத் தவறியமை அனைத்துலக ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய உடன்பாடு ஒன்று எட்டப்படும் வரை இலங்கைக்குரிய அடுத்த கட்ட தவணை நிதிகிட்டாது என்பதால் மீண்டும் நாட்டில் தீவிரமான பிரச்சினைகள் தலையெடுக்கலாம் என்ற அச்ச நிலை எழுந்துள்ளது.

எதிர்பார்த்ததை விட அதிக நேரம்இந்த நிலையில் திட்டமிடப்பட்ட சில சீர்திருத்தங்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிக நேரம் எடுக்கப்படுவதை சிறிலங்காவின் நிதியமைச்சக அதிகாரிகள் நாணய நிதியத்திடம் ஒப்புக்கொண்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

சிறிலங்காவில் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் நிலை | Fear That Protests Will Break Out Again Sri Lanka

கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியால் எழுந்த மக்கள் போராட்டங்களால் அப்போதைய அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Share:

காவல்துறையினரின் கைத்துப்பாக்கி மாயம்

 கொட்டாஞ்சேனை காவல்துறையினரின் கைத்துப்பாக்கி ஒன்று நேற்று முன்தினம் (26ஆம் திகதி) முதல் காணாமல் போயுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாதுகாப்புப் பெட்டியிலிருந்த துப்பாக்கிகளை எண்ணும் போது, ​​கீழ்நிலை சேவை கடமைகளை பொறுப்பேற்க வந்த உத்தியோகத்தரால், இது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக அந்த வட்டாரம் தெரிவிக்கிறது.

புத்தகங்களில் பதிவு எதுவும் இல்லை

காணாமற்போன குறித்த துப்பாக்கி, அதிகாரி ஒருவரால் எடுக்கப்பட்டதாக உரிய புத்தகங்களில் பதிவு எதுவும் இல்லை என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காவல்துறையினரின் கைத்துப்பாக்கி மாயம் | A Pistol Of The Kotahena Police Is Missing

நேற்று முன்தினம் (26ம் திகதி) காணாமல் போன துப்பாக்கியை கண்டுபிடிக்க காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர சோதனை நடத்தினர்.

காவல்துறை கான்ஸ்டபிள் மீது சந்தேகம்

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் பணிப்புரையின் பிரகாரம் விசேட காவல்துறை குழுவொன்று நேற்று (27) கொட்டாஞ்சேனை காவல் நிலையத்திற்கு விஜயம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

காவல்துறையினரின் கைத்துப்பாக்கி மாயம் | A Pistol Of The Kotahena Police Is Missing

இந்த துப்பாக்கி காணாமல் போன சம்பவத்தில் காவல்துறை கான்ஸ்டபிள் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவர் போதைக்கு அடிமையானவரா என்பது தொடர்பில் விசாரணைக் குழுக்கள் கவனம் செலுத்தி வருவதாகவும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Share:

விடுதலை செய்யப்பட்ட 17 தமிழக மீனவர்கள்

 யாழ்ப்பாணம் நெடுந்தீவில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரும் நேற்று (27) விடுதலை செய்யப்பட்டனர்.

இராமேஸ்வரம் - ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 17 மீனவர்களும் கடந்த 13ஆம் திகதி, நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழிலில்  ஈடுபட்டிருந்தவேளை சிறிலங்கா  கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இதன்போது அவர்களது மூன்று விசைப் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

18மாத சாதாரண சிறைத்தண்டனை

இந்நிலையில் இந்த வழக்கானது ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் திரு.கஜநிதிபாலன் அவர்கள் முன்னிலையில் நேற்று (27) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

விடுதலை செய்யப்பட்ட 17 தமிழக மீனவர்கள் | 17 Tamil Nadu Fishermen Released

இதன்போது மீனவர்கள் 17 பேரையும் 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 18மாத சாதாரண சிறைத்தண்டனை என்ற அடிப்படையில், நிபந்தனையுடன் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன் உரிமை கோரிக்கை வழக்கின் பின்னர் கைப்பற்றப்பட்ட விசைப் படகுகளை விடுவிக்க நீதிமன்றில் தீர்மானிக்கப்பட்டதாக நீரியல் வள திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெ.சுதாகரன் தெரிவித்தார்.

Share:

இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் கிழக்கு ஆளுநரின் `மிலாது நபி' நல்வாழ்த்துக்கள்


இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இனிய "மிலாது நபி" நல்வாழ்த்துக்களை கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது

"இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் உதவி செய்ய வேண்டும் என்பதை இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகிறது

நபிகள் நாயகத்தின் பிறந்த நாள்

அத்தகைய உயரிய நோக்கத்தோடு வாழ்கின்ற இஸ்லாமிய பெருமக்கள் `மிலாது நபி' எனும் அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நாளை உலகம் எங்கும் மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர்.

இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் கிழக்கு ஆளுநரின் `மிலாது நபி

உலகம் செழிக்கவும், மானுடம் தழைக்கவும், சமுதாயத்தில் சாந்தியும், சமாதானமும், சகோதரத்துவமும் பெருக வேண்டும் என்பது அண்ணல் நபிகளின் அருட்போதனை ஆகும்.

நபிகள் நாயகத்தின் பிறந்த நாளன்று அவர்களின் போதனைப்படி, அன்பு பெருகவும், அமைதி நிலைக்கவும், சமரசம் உலவவும், சகோதரத்துவம் தழைக்கவும் அயராது உழைத்திட உறுதி ஏற்போம் எனக்கூறி, இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய `மிலாது நபி' நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை மனமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

Share:

கிளிநொச்சியில் பயங்கரம் : நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல்

 கிளிநொச்சியில் நேற்று(27) வெளிநாட்டு பிரஜையின் வீட்டிற்குள் நுழைந்த குழுவொன்று நடத்திய தாக்குதலில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கிளிநொச்சி - திருவையாறு பகுதியில் நேற்று(27) நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை இந்த குழுவினர் தாக்கிய போது சம்பவத்தை அவதானித்த தாக்குதலுக்குள்ளான வீட்டிலுள்ள ஒருவர் தனது நண்பன் தாக்கப்படுவதாக கூறி அப்பகுதிக்கு சென்றுள்ளார்.

வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல்

இந்நிலையில், குறித்த குழுவினர் இளைஞனின் கால் பகுதியில் வெட்டியதாகவும், இதனைத் தடுத்த பெண்ணையும் தாக்கியதாகவும் காவலதுறையினருக்க அளித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் பயங்கரம் : நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல் | Terror In Kilinochchi Attack At Midnight Into Home

இதேவேளை தாக்குதலுக்குள்ளான இளைஞர்கள் இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தை தொடர்ந்து, நேற்று நள்ளிரவு 20இற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட ஒரு குழுவினர் வீட்டுக்குள் நுழைந்து அவ்வீட்டில் இருந்த முதியவர்களான கணவன், மனைவி இருவரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாக காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெற்றோல் குண்டு வீசப்பட்டது

அத்துடன் வீட்டில் இருந்த சிசிரீவி , மின்விளக்குகள், பிரதான வாயில் என்பவற்றை தாக்கி சேதப்படுத்தியதுடன், மோட்டார் சைக்கிளையும் சேதமாக்கிய பின் அதனை எடுத்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சியில் பயங்கரம் : நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல் | Terror In Kilinochchi Attack At Midnight Into Home

இதேவேளை தாக்குதலின் போது பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான நான்கு பேர் வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த தாக்குதல் குழுவைச் சேர்ந்த ஒருவரும் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.தாக்குதலுக்கு உள்ளான வெளிநாட்டு பிரஜை கடந்த சில நாட்களுக்க முன்னர் பெல்ஜியம் நாட்டிலிருந்து தனது வீட்டுக்கு விடுமுறையில் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் சந்தேகம் 

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி குற்றத்தடுப்பு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேக நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் பயங்கரம் : நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல் | Terror In Kilinochchi Attack At Midnight Into Home

இதேவேளை குறிப்பிட்ட சந்தேக நபர்களில் பலர் கடந்த காலங்களில் வெவ்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இரணைமடு குளத்தின் கீழ் இடம்பெறுகின்ற சட்டவிரோத மண்ணகழ்வைத் தடுப்பதற்கு குறித்த குடும்பம் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாகவும் தாக்குதல் மேற்கொண்ட குறித்த குழுவில் மண் மாபியாக்களே அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.தற்போது குறித்த மணல் அகழ்வு முற்றாக தடுக்கப்பட்டுள்ள நிலையில் இத்தாக்குதல் சம்பவமானது பழிவாங்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Share:

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கையெழுத்துப் பிரதி 10.7 கோடிக்கு விற்பனை!

 ஜெர்மனி நாட்டை சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தான் முன்மொழிந்த சிறப்பு சார்பியல் கொள்கை, பொது சார்பியல் கொள்கை ஆகியவை குறித்து கைப்பட எழுதிய பிரதி ஏலத்தில் ரூ.10.7 கோடிக்கு (இந்திய மதிப்பு) விற்பனையாகியுள்ளது.

அறிவியலில் முக்கிய இடம் வகிக்கும் சிறப்பு சார்பியல் கொள்கையை 1905 ஆம் ஆண்டிலும், பொது சார்பியல் கொள்கையை 1915 ஆம் ஆண்டிலும் ஐன்ஸ்டீன் வெளியிட்டார்.இவற்றைக் குறித்து ஜெர்மன் மொழியில் விளக்கமளித்து அவர் எழுதிய கட்டுரைகள் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் கடந்த 1929 ஆண்டு பெப்ரவரி 3 இல் வெளியானது.

ஏல விற்பனையில் 10.7 கோடி

தற்போது, அந்தப் பிரதியானது சீனாவின் ஷாங்காய் நகரத்தில் செப் 28 இல் கிறிஸ்டி ஏல நிறுவனம் நடத்திய ஏல விற்பனையில், ரூ.10.7 கோடிக்கு விற்பனையானது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கையெழுத்துப் பிரதி 10.7 கோடிக்கு விற்பனை! | Albert Einstein Manuscript Sold At Auction 7 Crore

மொத்தம் 14 பக்கங்களைக் கொண்ட இந்தப் பிரதியில் சார்பியல் கொள்கையின் பயன்பாடு குறித்து விளக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கைகளுடன் தொடர்புடைய இரு சமன்பாடுகள், காலம் இடம் தொடர்பு குறித்து விளக்கும் ஒரு வரைபடம், அறிவியல் சூத்திரங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

Share:

Wednesday, September 27, 2023

பயணச்சீட்டின்றி ரயிலில் பயணிப்பவர்களிடம் சோதனை நடவடிக்கையை அதிகரிக்க திட்டம்

 பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணிக்கும் பயணிகளிடம் சோதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசேடமாக மருதானை மற்றும் கொழும்பு கோட்டை  புகையிரத நிலையங்களில் விசேட பயணச்சீட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படும்.கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக ரயில் பயணிகளின் பயணச்சீட்டு சோதனை நடவடிக்கைகள்  நிறுத்தப்பட்டது. இதன் விளைவாக பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணிக்கும் பயணிகள் அதிகரித்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை மருதானை புகையிரத நிலையத்தில் பயணச்சீட்டு பெறாமல் பயணித்த 72 பயணிகளிடமிருந்து கிட்டத்தட்ட 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய்  தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Share:

பாணந்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் தாதியின் திருட்டு சம்பவம்

 பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் தாதி ஒருவரின் பணப்பையை களவாடி அவரது தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி தனியார் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த மற்றுமொரு தாதி கைது செய்யப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் தாதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த ஆகஸ்ட் 16ஆம் திகதி 2,000 ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் தமது பணப்பை வேலை செய்யும் இடத்தில் காணாமல் போனதாக குறித்த சிகிச்சைப் பிரிவில் தொழில் புரிந்து வரும் தாதி ஒருவர் பாணந்துறை பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார்.

இதனையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், பாணந்துறையில் உள்ள தனியார் வங்கியொன்றில் இருந்து முறைப்பாடு செய்த தாதிக்கு, “நீங்கள் வாங்கிய கடனுக்கான தவணை சரியாக செலுத்தப்படவில்லை எனவும், அதனை செலுத்துமாறும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை  தெரியவந்துள்ளது.

இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அதே பிரிவில் தொழில் புரியும் தாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர் இன்று (27) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பத்து இலட்சமாகியது..

 

நாட்டுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நேற்று (26) ரஷ்ய பிரஜை மற்றும் அவரது குடும்பத்தினரின் வருகையுடன் பத்து இலட்சமாக அதிகரித்தது.

ரஷ்ய பிரஜை ஒருவரும் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நேற்று செவ்வாய்க்கிழமை (26) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்களை வரவேற்கும் முகமாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைபவமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கைக்கு வந்த ரஷ்ய நாட்டவருடன் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் இருந்தனர். ரஷ்யாவிலிருந்து ஓமானுக்கு வந்த அவர்கள், பின்னர் ஓமான் தலைநகர் மஸ்கட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். கட்டுநாயக்கா விமான நிலையத்தின் வருகை முனையத்தில் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், கேக் வெட்டி, மாலை அணிவித்து அவர்களை வரவேற்றனர்.

Share:

2023: இதுவரை 77 துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 46 பேர் பலி

 

ஆறு வயது சிறுமியும் உள்ளடக்கம்; பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு

இவ்வருடத்தின் (2023) இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 77 துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 06 வயது சிறுமி உட்பட 46 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நாட்டுக்குள் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம்,தென் மாகாணத்திலேயே அதிகளவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இச்சம்பவங்களில் 35 பேர் காயமடைந்து பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்தது

Share:

About

Blog Archive