Vettri

Breaking News

புத்தளம்,கல்பிட்டி யுனைடட் கழகம் நடத்திய உதைப்பந்தாட்ட தொடரில் கல்பிட்டி பனாக்கோ அணி சாம்பியனானது.






(அஸ்ஹர் இப்றாஹிம்)

கல்பிட்டி யுனைடட் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த அணிக்கு 7 பேர் கொண்ட உதைப்பந்தாட்டச் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் கல்பிட்டி யுனைடட் உதைப்பந்தாட்டக் கழகத்தை 1:0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கல்பிட்டி பனாக்கோ அணி சம்பியன் மகுடம் சூடியது.





இரு தினங்களாக கல்பிட்டி அல் மனார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இத்தொடரில் 21 உதைப்பந்தாட்ட அணிகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

இத்தொடர் முழுவதும் பிரகாசித்த பனாக்கோ அணியின் முஹம்மட் அஹதிர் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் விருதையும்  , தொடர் ஆட்டநாயகன் விருதையும் பெற்றுக்கொண்டார்.

No comments