----VETTRI NEWS.COM---- பக்கசார்பற்ற நம்பகத்தன்மையான தகவல்கள் மக்கள் முன்...

Thursday, August 31, 2023

காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மூடப்படுகின்றது

பாறுக் ஷிஹான் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி புராதன நூதனசாலையின் நிலைமை தற்போது உரிய பராமரிப்பின்றி குப்பைகள் தேங்கி காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இந்த பூர்வீக நூதனசாலைக்கு அன்றாடம் நாடு பூராகவும் தினமும் குறித்த நூதனசாலையை பெரும் எண்ணிக்கையிலான உள்ளுர் மற்றும் வெளியூர் மக்கள் பார்வையிட்டு உள்ளனர்.இந்த பிரமாண்டமான நூதனசாலை 90% முஸ்லீம் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவே அமைகிறதுடன் குறித்த நூதனசாலையை பார்வையிடுவதற்கு நுழைவுச்சீட்டு வழங்கப்பட்ட பின்னர் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் இலங்கை முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட ஆன்மீக, அறிவியில், வர்த்தக, வணக்கவழிபாடு, அரசியல் உட்பட பல்வேறு வரலாற்று சான்றுகள் இந்நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளன. பராக்கிரமபாகு மன்னரின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த முஸ்லிம்களின் உருவங்களும் பதிவாக வைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள், வியபாரா முறைகள், புராதன பள்ளிவாயல்கள், முதலாவது 'வுளு' செய்த இடம் உட்பட பல நூறு முஸ்லிம் கலாசாரம் தொடர்பான பூர்வீக அடையாளங்களும் இங்கு காணப்படுகின்றன.பல பழைமையான பொருட்களினையும் சில செயற்கையாக உருவாக்கப்பட்ட மாதிரி உருவமைப்புகளையும் காணக்கூடிய இந்நூதனசாலையின் அறிவித்தல் பலகைகள் சேதமடைந்து காணப்படுவதுடன் பார்வையாளர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற எந்தவொரு வழிகாட்டலும் இன்றி தான்தோன்றி தனமாக செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. சில காட்சி அறைகளில் ஒட்டடைகள் காணப்படுவதுடன் சில பொருட்கள் பகுதி அளவில் சேதமடைந்திருக்கின்றன. அதிகளவான குப்பைகள் சிதறி காணப்படவதுடன் இங்கு வருகை தருகின்ற பார்வையாளர்களை கட்டுப்படுத்தி வழிகாட்டல்களை மேற்கொள்வதற்கு உத்தியோகத்தர்கள் குறைவாக உள்ளனர்.இதனால் சிலர் செல்பி எடுப்பதற்காக அரிதான பொருட்களை தொடுகை மூலம் சேதப்படுத்த முயற்சிக்கின்றனர். மேலும் தற்போது காத்தான்குடி நகர சபையின் பராமரிப்பில் உள்ள மேற்படி நூதன சாலையை சில தினங்களுக்கு மூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 04.09.2023 தொடக்கம் 14.09.2023 வரை 10 நாட்களுக்கு திருத்த வெலைக்காக நூதனசாலை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக வரலாற்றைக் கூறும் வகையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் கலாசார மரபுரிமைகள் அமைச்சின அனுசரணையுடன் தொல்பொருள் ஆராய்சி திணைக்கள வழிகாட்டலில் பல மில்லியன் ரூபா செலவில் 4 மாடிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள பூர்வீக நூதனசாலை கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் திகதி காத்தான்குடியில் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்கதக்து.
Share:

கடலில் நீராடச் சென்ற 03 பேரில் ஒருவர் மாயம்!!!

காலி கொக்கல பகுதியில் கடலில் நீராடச் சென்று காணாமல் போன மூன்று பேரில் இரண்டு பேர் மீட்கப்பட்டு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மற்றொருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . சம்பவத்தில், காணாமல் போனவர் எம்பிலிபிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர். எம்பிலிபிட்டி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா பணியாளர்கள் நேற்றைய தினம் கொக்கல பகுதிக்கு சுற்றுலாச் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. சம்பவத்தில் காணமால் போயுள்ளவர் குறித்த பாடசாலையின் கல்விசாரா பணியாளர் என தெரிவிக்கப்படுகிறது.
Share:

Wednesday, August 30, 2023

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் எதிர்கால திட்டங்கள், அஸ்வெஸ்ம வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவூட்டல் செயலமர்வு

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் எதிர்கால திட்டங்கள், அஸ்வெஸ்ம வேலைத்திட்டம் தொடர்பில் திணைக்கள உத்தியோகத்தர்கள், சமுர்த்தி வங்கி மற்றும் வங்கிச் சங்க கட்டுப்பாட்டுச் சபை, நிறைவேற்றுக் குழு தலைவர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வு இன்று (30) அம்பரை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் திருமதி பாக்கியராஜா, குறுநிதிப் பணிப்பாளர் மன்னார் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் ஐ.அலியார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் அம்பாரை மாவட்டத்திலுள்ள சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி வங்கி சங்க முகாமைத்துவப் பணிப்பாளர்கள், சமுர்த்தி வலய உதவியாளர்கள், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர்கள், சமுர்த்தி வங்கி, வங்கிச் சங்க கட்டுப்பாட்டுச் சபை, நிறைவேற்றுக் குழு தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Share:

இருபேருந்துகள்நேருக்குநேர்மோதி_விபத்து; சாரதி பலி..!

கொழும்பு - கண்டி வீதியில் பட்டாலிய கஜுகம என்ற இடத்தில் இரண்டு பேருந்துகள் நேற்றிரவு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், ஊழியர் போக்குவரத்து பேருந்து ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Share:

குடும்பஸ்தர் ஒருவர் மண்வெட்டியால் தாக்கி கொலை

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஹா தோட்டத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலை நடத்திவிட்டு தலைமறைவான சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 40 வயதுடைய வீரசாமி பெஞ்சமின் என்ற 3 பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலில் கொல்லப்பட்ட நபர் தனது தாயுடன் நேற்றிரவு முரண்பட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட சத்தம் கேட்டு, அது தொடர்பில் விசாரிக்க சென்ற அயல் வீட்டு காரருடன், வாய் தர்க்கம் ஏற்பட்ட நிலையில் குறித்த நபர் மண்வெட்டிப் பிடியால் அவரைத் தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த நபர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்று (30.09.2023) அதிகாலை உயிரிழந்துள்ளார். தக்குதலை நடத்திய பெரியசாமி விஜயகுமார் என்ற 27 வயதுடைய நபர் தலைமறைவான நிலையில், லிந்துலை நாகசேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Share:

மட்டக்களப்பில் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஆர்ப்பாட்டப் பேரணி…

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை அனுஸ்டிக்கும் முகமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடக்கில் மன்னார் மாவட்டத்திலும், கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று கல்லடிப்பாளத்தில் இருந்து காந்திப்பூங்கா வரையில் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டு காந்திப் பூங்காவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுது. கல்லடிப் பாளத்தில் போராட்ட காலத்தில் உயிரிழந்த உறவுகளுக்கும், மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தலுடன் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் அவர்களைத் தேடும் வகையான, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரிய கோசங்களை எழுப்பியவாறும், பாதாதைகளையும் ஏந்தியவாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டம் காந்திப் பூங்காவை வந்தடைந்ததும், காந்திப் பூங்காவில் அமைந்துள்ள கொல்லப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் தூபியில் சுடரேற்றி ஊடகவியலாளர்களுக்கான அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் போராட்ட அறிக்கையும் வாசிக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அமலராஜ் அமலநாயகி தலைமையில் இடம்பெற்ற இப்போராட்டப் பேரணியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தில் வடக்கு கிழக்கு தலைவி யோகராசா கனகரஞ்சனி, மட்டக்களப்பு, அம்பாறை திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறவுகள், சமயத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share:

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மன்னாரில் மாபெரும் ஆரப்பாட்டப் பேரணி

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட்(30) இன்று யதினம் மன்னாரில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். அந்தவகையில் மன்னார் - சதோச மனிதப்புதைகுழி வளாகத்திலிருந்து இந்த ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பமானது. இவ்வாறு ஆரம்பமான ஆர்ப்பாட்டப்பேரணி தொடர்ந்து மன்னாரில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவகத்தை அடைந்ததும், அதற்கு முன்பும் சிறிது நேரம் கோசம் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து மன்னார் பொது விளையாட்டு மைதானத்தை ஆர்ப்பாட்டப் பேரணி வந்தடைந்தது. அங்கு ஒன்று கூடிய காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் ஐ.நாவிற்கு கையளிப்பதற்கான அறிக்கை வெளியிட்டதுடன், ஐ.நாவிற்கான அறிக்கையினையும் கையளித்திருந்தனர். அந்தவகைல் ஐ.நா விற்கான மகஜர் மன்னார் மறைமாவட்ட பங்குத் தந்தையர்களான ஜெயபாலன் குருஸ் மற்றும், மர்க்கஸ் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது. மேலும் இவ்வார்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் நானாட்டான் பிரதேசசபை தவிசாளர் திருச்செல்வம் பரன்சோதி, முன்னாள் வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தியாகராசா நிரோஷ், முன்னாள் மன்னார் நகரபிதா ஞானப்பிரகாசம் ஜெராட், முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் இரத்தினம் ஜெகதீசன், தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் அன்ரனிஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரது ஆதரவோடும் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share:

பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களை கிழக்கு மாகாண அரச சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு!!

பாறுக் ஷிஹான் பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களை கிழக்கு மாகாண அரச சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை(29) மாலை அம்பாறை டி.எஸ் சேனநாயக்க தேசிய பாடசாலையின் பிரதான கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த நியமனக்கடிதம் வழங்கும் வைபவத்தில் அதிதிகளாக கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் எம்.செந்தில் தொண்டமான், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாஉல்லா , டபிள்யூ. வீரசிங்க , விமலவீர திஸாநாயக்க, திலக் ராஜபக்ஸ, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் , அம்பாறை மாவட்ட பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்கள அதிகாரிகள், என பலரும் கலந்து கொண்டனர். அத்துடன் நாடளாவிய ரீதியான முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் சுபீட்சத்தின் நோக்கு என்னும் தொனிப் பொருளில் நாட்டில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வேலை வழங்குதல் நிகழ்ச்சி திட்டத்தில் 35,000 பயிலுநர்கள் முதற்கட்டமாக தெரிவாகி இருந்ததுடன் பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர் பயிலுனர் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்திற்கமைய 'வறுமையற்ற இலங்கை' யைக் கட்டியெழுப்பும் எண்ணக்கருவினை செயற்படுத்துவதற்காக பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தது. மேலும் பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களாக பலதரப்பட்ட காரியாலயங்களில் பணிக்கு அமர்த்தப்பட்ட பின்னர் பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களின் தகைமைகள் உறுதிப்படுத்தப்பட்டு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
Share:

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை(29) அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரமவின் ஒருங்கிணைப்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாஉல்லா, டபிள்யூ. வீரசிங்க, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் தலைமையிலும் இக்கூட்டம் இடம்பெற்றது. இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.எம்.முஷாரப், விமலவீர திஸாநாயக்க, திலக் ராஜபக்ஸ, கலையரசன் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்டத்திலுள்ள திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள், கல்வி அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது,மாவட்டத்தின் நகர அபிவிருத்தி, சுற்றுலாத்துறை மேம்படுத்தல், குடி நீர் சம்பந்தமான பிரச்சினைகள் இன்னும் முக்கிய உட்கட்டமைப்பு அபிவிருதி திட்டங்களை முன்னெடுப்பது சம்பந்தமான விடயங்கள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.
Share:

இக்பால் ஞாபகார்த்த கிண்ணம்-ஏறாவூர் ஜங்ஸ் ஸ்டார் விளையாட்டு கழகம் வசமானது

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் அனுசரணையில் கல்முனை சனிமௌன்ட் விளையாட்டு கழகம் நடாத்திய அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த 22 முன்னணி உதைப்பந்தாட்ட விளையாட்டு கழகங்கள் கலந்து கொண்ட மர்ஹூம் எம்.ஐ.எம் இக்பால் ஞாபகார்த்த சம்பியன் கிண்ண மின்னொளி உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி கடந்த சனிக்கிழமை(26) அன்று நடைபெற்றது. இதன் போது சனிமௌன்ட் விளையாட்டு கழகத்தை 5:0 என்ற கோல் அடிப்படையில் ஏறாவூர் ஜங்ஸ் ஸ்டார் விளையாட்டு கழகம் இறுதிப்போட்டியில் வெற்றி கொண்டு மர்ஹூம் எம்.ஐ.எம் இக்பால் ஞாபகார்த்த சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி இறுதிப்போட்டிக்கு பிரதம அதிதியாக முன்னாள் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் கௌரவ அதிதியாக முன்னாள் கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொள்கை பரப்பு செயலாளருமான கே.எம் அப்துல் ரஸாக் கலந்து கொண்டதுடன் ஏனைய முக்கியஸ்தர்கள் உதைப்பந்தாட்ட விளையாட்டு கழகங்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் மேற்படி இறுதி சுற்றுப்போட்டியை காண்பதற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் பார்வையாளர்களாக வந்திருந்ததுடன் சீரற்ற நுழைவுச்சீட்டு பரிசோதனைகளினால் சிறிய குழப்பங்களும் இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
Share:

About

Blog Archive