----VETTRI NEWS.COM---- பக்கசார்பற்ற நம்பகத்தன்மையான தகவல்கள் மக்கள் முன்...

Showing posts with label இலங்கை செய்திகள். Show all posts
Showing posts with label இலங்கை செய்திகள். Show all posts

Tuesday, October 3, 2023

க.பொ.த உயர்தர பரீட்சை திகதிகள் குறித்து கல்வி அமைச்சர் விசேட அறிவிப்பு

 இந்த ஆண்டுக்கான (2023) க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதிகள் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (03) அறிவித்துள்ளார்.

பரீட்சைகள் நடைபெறவிருக்கும் திகதியினை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எதிர்வரும் சில தினங்களில் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சென்ற மாதம் இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் திட்டமிடப்பட்ட திகதியினை ஒத்திவைக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்திருந்தார்.

போதிய கால அவகாசம்

அப்போது, மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்கவே பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை நடைபெறும் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அது பிற்போடப்பட்டது.

க.பொ.த உயர்தர பரீட்சை திகதிகள் குறித்து கல்வி அமைச்சர் விசேட அறிவிப்பு | Gce Advance Level Examination 2023

இந்நிலையில் பரீட்சைகளுக்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்று இன்று குறித்த அறிவிப்பை அமைச்சர் நாடாளுமன்றில் விடுத்துள்ளார். 

Share:

கொழும்பு உயர்நீதிமன்ற முன்றலில் மாபெரும் கண்டனப் போராட்டம்

 கொழும்பு உயர்நீதிமன்ற முன்றலில் எதிர்வரும் 09ஆம் திகதி மாபெரும் கண்டனப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதிபதி ரீ. சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, வடக்கு – கிழக்கு சட்டத்தரணிகள் சங்கங்களைச் சார்ந்த சட்டத்தரணிகள் மற்றும் தென்பகுதி சட்டத்தரணிகளையும் அழைத்து கண்டனப் போராட்டத்தை நடாத்தவுள்ளனர்.

மாபெரும் எதிர்ப்பு

வடக்குக் கிழக்கின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த பெருமளவிலான சட்டத்தரணிகளும் தென்பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணிகளும் இப்போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு உயர்நீதிமன்ற முன்றலில் மாபெரும் கண்டனப் போராட்டம் | Protest In Front Of Colombo High Court

Share:

Monday, October 2, 2023

2013 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட 49 சொகுசுப்பேருந்துகள் செயலிழப்பு

 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு இறக்குமதி செய்யப்பட்ட 49 சொகுசுப் பேருந்துகள் தற்போது செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளின் நலனுக்காக இந்த சொகுசுப் பேருந்துகளை இறக்குமதி செய்ததாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் அல்விஸ் தெரிவித்துள்ளார்.

மாநாட்டின் பின்னர் இந்தப் பேருந்துகளை இலங்கையின் தென் பகுதியில் அதிவேக நெடுஞ்சாலையின் பொதுப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தி வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

உதிரிப் பாகங்கள் இன்மை

இதன் வாயிலாக நாளொன்றுக்கு 80,000 ரூபா முதல் 90,000 ரூபா வரையில் அரசாங்கம் வருவாய் ஈட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறிருக்கையில் அவற்றை பராமரிப்பதற்கும் பழுது பார்ப்பதற்கும் உரிய உதிரிப் பாகங்கள் இலங்கை போக்குவரத்துச் சபையிடம் இல்லாத காரணத்தினால் அவை தற்போது செயலிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த சொகுசு பேருந்துகளை உற்பத்தி செய்யும் சீனாவின் ஃபோட்டொன் (Foton) மோட்டார் நிறுவனத்திடமிருந்து உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2013 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட 49 சொகுசுப்பேருந்துகள் செயலிழப்பு | 49 Luxury Buses Imported For Chogm 2013 Now Idle

இதேவேளை இலங்கையில் இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமே இருப்பதால், பழுதுபார்க்கும் பணியை விரைவுபடுத்த நிறுவனத்திடம் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு ஒன்றைக் கோரியுள்ளதாகவும் லலித் அல்விஸ் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் சீனாவிற்கு சென்றிருந்த போது ஃபோட்டொன் (Foton) நிறுவனத்தின் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, இலகுவான கட்டண முறையில் பேருந்துகளை இறக்குமதி செய்யும் கோரிக்கையினையும் முன்வைத்திருந்தார்.இந்தக் கோரிக்கையினை நிறுவன இயக்குநரின் ஒப்புதலுக்காக அனுப்பவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

Share:

Sunday, October 1, 2023

ஊர்வலத்துக்கு அழைத்து வரப்பட்ட சீத்தாவை காட்டு யானை என நினைத்து துப்பாக்கிப் பிரயோகம் செய்த வனஜீவராசி அதிகாரிக்குப் பிணை!

 ஊர்வலத்துக்கு அழைத்து வரப்பட்ட 'சீதா' என்ற யானையை துப்பாக்கியால் சுட்டுக்  காயப்படுத்திய குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

மஹியங்கனை எசல பெரஹெரவில் கலந்துகொண்ட சீதாவை காட்டு யானை என நினைத்து மாபகதேவாவ வனஜீவராசிகள் அலுவலக சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.





இதனையடுத்து, அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 

சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Share:

இலங்கையில் அதிகரித்த தயிரின் விலை

 இலங்கையில் தயிர்ச்சட்டி ஒன்றின் விலை 500 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தேசிய வாடிக்கையாளர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையில்  தற்போது உற்பத்தி செய்யப்படும் பாலின் விலை குறைவடைந்துள்ளதாலேயே தயிர்ச்சட்டியின் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி

மேலும், உலகில் அதிகளவில் பால் மாவை பயன்படுத்தும் ஐந்து நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இலங்கையில் அதிகரித்த தயிரின் விலை | Yogurt Price Increased In Sri Lanka

இதேவேளை இலங்கைக்கு தேவையான பாலில் 40 வீதம் மாத்திரமே உள்நாட்டிலிருந்து பெறப்படுவதோடு மீதமுள்ள 60 வீதமானது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக அண்மையில் கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பீ. ஹேரத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Share:

வாள்வெட்டு தாக்குதலில் பலியான பௌத்த பிக்கு

 குருணாகல் - பொத்துஹெர, லிஹினிகிரிய, பொத்குல் விகாரையில் வசித்து வந்த பிக்கு ஒருவர் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொத்துஹெர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிக்குவுக்கு சொந்தமான பொத்துஹெர - பரபாவில பிரதேசத்தில் உள்ள தனியார் வீடொன்றில் வைத்து அவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட பிக்கு சிறிலங்கா இராணுவத்தின் பொறியியல் பிரிவில் இருந்து ஓய்வுபெற்று கடந்த மார்ச் மாதம் துறவு வாழ்க்கைக்கு பிரவேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காவல்துறையினர் சந்தேகம் 

உயிரிழந்த தெரணம திருமணமானவர் எனவும், அவரது மனைவி சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் அவரை விட்டுச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வாள்வெட்டு தாக்குதலில் பலியான பௌத்த பிக்கு | A Buddhist Monk Who Was Killed In A Sword Attack

இந்நிலையில், மரணமான அன்று இரவு சிலர் தேரரைச் சந்திக்க வந்து வீட்டைக் கவனித்துக் கொண்டிருந்த தம்பதிகளை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதாக காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் பிக்குவின் கொலையில் அவருடன் இருந்த நபரே ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Share:

தெற்காசியாவில் சாதனை படைக்கப்போகும் இலங்கை

 இலங்கையில் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்கவேண்டுமென மின்சாரசபை பொறியியலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதன்படி அலகிற்கு ரூபா 08 அதிகரிப்பு ஏற்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு மின்சாரக் கட்டண அதிகரிப்பு இடம்பெற்றால், தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும் என எரிசக்தி நிபுணர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இலங்கை மூன்றாவது இடத்தில்

தற்போது தெற்காசியாவில் அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தெற்காசியாவில் சாதனை படைக்கப்போகும் இலங்கை | Sri Lanka To Create A Record In South Asia

மின்சார உற்பத்திப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு புதிய முறையொன்று அவசரமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.


Share:

Saturday, September 30, 2023

யாழுக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய

 இலங்கையின் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று வெள்ளிக்கிழமை (29) யாழ்ப்பாண மாவட்டத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், கரு ஜெயசூரிய நேற்று காலை தொடக்கம் மதியம் வரை மானிப்பாய் சுதுமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இரண்டாம் மொழி கற்கைநெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டார். 

பின்னர், அவர் பிற்பகல் 4 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருகை தந்ததுடன், அங்கு இடம்பெற்ற விசேட பூஜைகளில் கலந்துகொண்டார்.

பின்னர், யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரை மத்தியஸ்தானத்தின் விகாரைக்கு சென்றதுடன் ஸ்ரீ நாகவிகாராதிபதி ஸ்ரீ விமலரத்தன தேரரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதில் வட மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் வ.ஜெயசீலன் ஆகியோர் பங்கேற்றனர்.

Share:

நில்வளா கங்கை பெருக்கெடுப்பு ; மாத்தறையில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின !

 




மாத்தறை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழையினால் நில்வளா கங்கை பெருக்கெடுத்துள்ள நிலையில், அப்பகுதியில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அங்கு போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

அக்குரஸ்ஸ - மாத்தறை பிரதான வீதியின் பரடுவ பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அக்குரஸ்ஸ - ஹொரகொட ஊடான மாத்தறை வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார்  பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அக்குரஸ்ஸ - சியம்பலாகொட வீதியின் பாணடுகம பகுதியும் நீரில் மூழ்கியுள்ளது.

அக்குரஸ்ஸ - கம்புறுப்பிட்டிய வீதி மற்றும் அக்குரஸ்ஸ - மாகந்துர வீதி என்பன வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் வாகனப்  போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share:

பங்களாதேஷுடனான பயிற்சிப் போட்டியில் இலங்கை தோல்வி : குசலுக்கு தோற்பட்டையில் உபாதை


 இந்தியாவில் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ள 13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக குவஹாட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக சனிக்கிழமை (29) நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் 7 விக்கெட்களால் இலங்கை தோல்வி அடைந்தது.

ஆரம்ப வீரர் குசல் பெரேரா திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கையில் தொற்பட்டையில் ஏற்பட்ட உபாதை காரணமாக ஓய்வு பெற்றார். 

இது பாரதூரமானது அல்லவென தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், அது இலங்கை அணிக்கு சற்று கவலையைத் தோற்றுவித்துள்ளது.

இந்தப் பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 49.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 263 ஓட்டங்களைப் பெற்றது.

சதீர சமரவிக்ரம, அணித் தலைவர் தசுன் ஷானக்க ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் தொடர்ந்து பிரகாசிக்கத் தவறினர்.

பெத்தும் நிஸ்ஸன்கவுடன் ஆரம்ப விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து குசல் பெரேரா 34 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது உபாதைக்குள்ளாகி ஓய்வு பெற்றார்.

தொடர்ந்து பெத்தும் நிஸ்ஸன்கவுடன் 40 ஓட்டங்களைப் பகிர்ந்த குசல் மெண்டிஸ் 22 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து சதீர சமரவிக்ரம 2 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த பெத்தும் நிஸ்ஸன்க 68 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

29ஆவது ஓவரில் இலங்கை 3 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது. ஆனால், கடைசி 7 விக்கெட்கள் 99 ஓட்டங்களுக்கு சரிந்தன.

மத்திய வரிசையில் தனஞ்சய டி சில்வா திறமையாகத் துடுப்பெடுத்தாடி 55 ஓட்டங்களைப் பெற்றார்.

சரித் அசலன்க (18), தசுன் ஷானக்க (3), திமுத் கருணாரட்ன (18), துனித் வெல்லாலகே (10), துஷான் ஹேமன்த  (11), லஹிரு குமார (13 ஆ.இ.) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை.

பங்களாதேஷ் பந்துவீச்சில் மெஹெதி ஹசன் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 42 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 264 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

முன்வரிசை வீரர்களான தன்ஸித் ஹசன் (84), லிட்டன் தாஸ் (61), பதில் தலைவர் மெஹிதி ஹசன் மிராஸ் (67 ஆ.இ.) ஆகியோர் பங்களாதேஷின் வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.

லிட்டன் தாஸுடன் ஆரம்ப விக்கெட்டில் 131 ஓட்டங்களையும் மெஹிதி ஹசன் மிராஸுடன் 2ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களையும் தன்ஸித் ஹசன் பகிர்ந்தார்.

இளம் அதிரடி வீரர் தௌஹித் ரிடோய் ஓட்டம் பெறவில்லை.

எனினும் மெஹதி ஹசன் மிராஸ், முஷ்பிக்குர் ரஹிம் (35 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷின் வெற்றியை உறுதிசெய்தனர்.

இவ்வாறான பயிற்சிப் போட்டியில் ஒவ்வொரு அணியிலும் இடம்பெறும் 15 வீரர்களுக்கும் விளையாட வாய்ப்பு வழங்கப்படுகிறது.

Share:

மன்னாரில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

 மன்னார் சிலாவத்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்தரிப்புத்துறை கடற்கரை ஓடைப் பகுதியில் ( ஆற்றுவாய் )  உயிரிழந்து பல நாட்கள் ஆகி சிதைவடைந்து எலும்புகள் தெரியும் வண்ணம் உள்ள சடலம் ஒன்று முத்தரிப்புத்துறை மீனவர்களால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (29) கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கடலுக்குள் வலை பாய்ச்சுவதற்காக சென்ற மீனவர்கள் குறித்த உடலை கண்டுபிடித்துள்ளனர்.





கண்டுபிடிக்கப்பட்ட சடலம் தொடர்பாக சிலாவத்துறை பொலிஸாருக்கு  மீனவர்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Share:

பண மோசடியில் ஈடுபட்டவர் கைது!

 வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நுவரெலியா காவல்துறையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாவை மோசடி செய்துள்ளார் என கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, நுவரெலியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

விசாரணைகள்

இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கடுகன்னாவை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண மோசடியில் ஈடுபட்டவர் கைது | Arrested Money Fraud Foreign Employment Sl Police

காலி, மீரந்தெனிய பகுதியை சேர்ந்த 51 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது 

Share:

இலங்கையில் தலைமறைவாக இருக்கும் பிரித்தானியப் பெண்

 இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற காலிமுகத்திடல் போராட்டத்தின் போது  காணொளிகளைப் பகிர்ந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரித்தானிய சமூக ஊடகப் பெண் தொடர்ந்தும், தாம் இலங்கையில் தலைமறைவாகவே இருப்பதாக பிரித்தானிய இணையம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 13 மாதங்கள் இவ்வாறு தலைமறைவாக உள்ள நிலையில் தாம் நம்பிக்கையை இழந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

35 வயதான கெய்லீ ஃப்ரேசர் (Kayleigh Fraser), தங்கியிருந்த இடத்தில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இலங்கை குடிவரவு அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்ட போது அவர் சட்டவிரோத விசாவில் நாட்டிற்கு வருகை தந்ததாக கூறி அவரது கடவுச்சீட்டை அதிகாரிகள் கைப்பற்றினர்.

பயங்கரவாத தடைச் சட்டம்

காலிமுகத்திடல் போராட்டங்களின் காணொளிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பகிரத் தொடங்கியதன் பின்னரே, அதிகாரிகள் தமது வீட்டை சோதனையிட்டதாக கெய்லீ ஃப்ரேசர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தலைமறைவாக இருக்கும் பிரித்தானியப் பெண் | British Woman Trapped In Sri Lanka For 13 Months

இந்தநிலையில் அவரை நாட்டில் இருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.  இலங்கையின் உயர்நீதிமன்றம், அதிகாரிகள் பிறப்பித்த நாடுகடத்துதல் உத்தரவை உறுதி செய்தது.

எனினும் நாட்டின் மோசமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில், இலங்கை அதிகாரிகளிடம் சரணடைய தாம் பயப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்துபூர்வ உறுதிமொழி

இந்த நிலையில் பிரித்தானியாவின் வடகிழக்கு ஃபைஃபா (Fifa) பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வெண்டி சேம்பர்லெய் (Wendy Chamberlai) நாட்டின் வெளியுறவு அலுவலக அதிகாரிகளை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தலைமறைவாக இருக்கும் பிரித்தானியப் பெண் | British Woman Trapped In Sri Lanka For 13 Months

இதன்போது அவர், கெய்லீ ஃப்ரேசர் இலங்கையை விட்டு வெளியேற உத்தரவாதம் அளிக்கப்படும் என்ற எழுத்துபூர்வ உறுதிமொழியை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Share:

நலமுடன் இருக்கிறேன் : மகிந்த அறிவிப்பு

 தனது உடல்நிலை குறித்து சமுக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை மறுத்துள்ள முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

களனி விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கேள்வியொன்றுக்கு பதிலளித்த அவர்,

பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்

தான் நலமுடன் இருப்பதாகவும் சமுக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

நலமுடன் இருக்கிறேன் : மகிந்த அறிவிப்பு | I Am In Good Health Says Mr

"நான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேனா அல்லது நல்ல நிலையில் இருக்கிறேனா என்பதை நீங்கள் பார்க்கலாம். சமுக ஊடகங்களில் இடுகையிடுவதை ஒருவர் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது," என்று அவர் கூறினார்.

இனியும் நீடிக்க முடியாது 

மேலும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக இனியும் நீடிக்க முடியாது எனவும், இளம் தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நலமுடன் இருக்கிறேன் : மகிந்த அறிவிப்பு | I Am In Good Health Says Mr

Share:

பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறிய நீதிபதி: ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு

 குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க, அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்குஉத்தரவிட்டுள்ளார்.

 தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையினருக்கு அல்லது நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு நீதவான் ஒருபோதும் அறிவிக்காத காரணத்தினால் அதிபர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

அதிபரின் உத்தரவு

எனவே, இந்த சம்பவத்திற்கான மூல காரணத்தை உடனடியாக ஆராயுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.



அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருடன் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதுடன், இதற்கு முன்னர் மரண அச்சுறுத்தல்கள் தொடர்பில் நீதவான் முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது.

கடந்த 24ஆம் திகதி வெளிநாடு சென்ற நீதவான், தனது பதவி விலகல் கடிதத்தை செப்டெம்பர் 23ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளார் என அதிபர் செயலக தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share:

Friday, September 29, 2023

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான நான்கு விமானங்கள் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு மணிக்கணக்கில் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். சிங்கப்பூர், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக சென்றன. நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பாகிஸ்தானின் லாகூர் நோக்கிப் புறப்படவிருந்த UL 153 என்ற விமானம் தாமதமானதால், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மீண்டும் வீட்டிற்கு செல்ல நேரிட்டது. விமான சேவைகள் தாமதம் அதன்பின், இந்தியாவின் சென்னை மற்றும் பங்களாதேஷ் டாக்கா செல்லும் விமானங்கள் தாமதமாக வருவதாக அறிவிக்கப்பட்டதால் பயணிகள் பதற்றமடைந்துள்ளனர். விமான நிலையம் வந்தடைந்ததும், சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையத்திற்கு நேற்று மதியம் 12.15 மணிக்கு புறப்பட வேண்டிய யுஎல் 308 என்ற விமானம் சுமார் ஐந்து மணி நேரம் தாமதமாக புறப்படும் என பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விமானம் நேற்று மாலை சுமார் 5.00 மணியளவில் சிங்கப்பூருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் சிங்கப்பூர் வந்த பயணிகள் உணவு பெறுவதற்காக டோக்கன் வழங்கப்பட்ட போதும் உணவு கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அத்துடன், கடமையில் இருந்த உத்தியோகத்தர்கள் இது தொடர்பில் விசாரிக்க வருகைத்தராமையினாலும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அவசர தொலைபேசி இலக்கமான 011-7771979 என்ற தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிக்காமையினாலும் பயணிகள் மேலும் சிரமப்பட்டனர். இதேவேளை, நேற்று முன்தினம் அதிகாலை சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானத்தில் ஏற்பட்ட பிரச்னையால், வணிக வகுப்பு பயணிகள் சிலர், இந்தோனேசியாவின் ஜகார்த்தா வழியாக சிங்கப்பூருக்கு மற்றொரு விமானத்தில் செல்ல நேரிட்டது.
Share:

Thursday, September 28, 2023

400 சிறுவர்கள் 2022 ஆம் ஆண்டில் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளனர் !

 கடந்த 2022ஆம் ஆண்டில் மாத்திரம் 400 சிறுவர்கள் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் பிரதிநிதி பேராசிரியர் சமத் தர்மரத்ன தெரிவித்தார்.

வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபையினால் “வேகமாக அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள்“ என்ற தலைப்பில் இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் நேற்று புதன்கிழமை (27) இடம்பெற்ற ஊடக விழிப்புணர்வு சபை கூட்டத்தில் கலந்துகொண்ட உரையாற்றுகையிலேயே இலங்கை மருத்துவ சங்கத்தின் பிரதிநிதி பேராசிரியர் சமத் தர்மரத்ன இவ்வாறு தெரிவித்தார்.

வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இலங்கையில் 30 வருட கால யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.





அரசாங்கத்தினால் கிட்டத்தட்ட 1.8 பில்லியன் ரூபாய் அளவில் வீதி விபத்துக்களில் காயமடைந்தவர்களின் சிகிச்சைக்காக செலவிடப்படுகின்றது.

2016 முதல் 2018 வரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களால் இலங்கையில் 24,786 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20,000 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாளாந்தம் ஏறக்குறைய ஏழு முதல் எட்டு பேர் வீதி விபத்துக்களில் உயிரிழக்கின்றனர் அவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்கள், பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்கள் ஆவர்.

இந்த விபத்துக்களில் உயிரிழப்பவர்களில் பெரும்பாளானோர் இளைஞர்களாக காணப்படுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

வீதி விதிமுறைகளை அமுல்படுத்தினால் வீதி விபத்துகளை 10 சதவீதம் குறைக்க முடியும்.

வீதி விபத்துகளை குறைக்க முடியவில்லை என்றால், எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் வீதி விபத்துகளை விரைவாகக் கட்டுப்படுத்த நடைமுறைகளை கையாள வேண்டும், இல்லையெனில் அவை சமூக மற்றும் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண உரையாற்றுகையில்,

வீதி விபத்துக்களை தடுப்பதற்கு ஏறக்குறைய 25 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் ஆனால் ஒரே நேரத்தில் செயல்படுத்த முடியாது.

விபத்துகளைத் தடுப்பது ஒரு தேசியப் பொறுப்பாகும், மேலும் விபத்தை குறைக்கும் நோக்கத்தை அடைய ஊடகங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். 

எங்களிடம் பாதுகாப்பான வீதி கணினி கட்டமைப்பு இல்லை, ஓடுபாதைகள் இல்லை, பாதசாரிகள் நடப்பதற்கு சிறிதளவு கூட நடைபாதைகள் இல்லை மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலங்கையில் வீதி வலையமைப்பைப் பயன்படுத்த முடியாது. எவ்வாறாயினும், விபத்துகளைத் தடுப்பதற்கு பொலிஸார் முயற்சி செய்தனர்.

தொடர்ந்து கூறுகையில், பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதற்காக வீதி விபத்துகளைத் தடுக்க வீதி பொலிஸ் செயலியை அறிமுகப்படுத்த பொலிஸ் ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் விரைவில் இந்த செயலியை அறிமுகப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Share:

ரயிலுடன் சிறிய லொறி மோதி விபத்து : ஒருவர் பலி, மற்றுமொருவர் படுகாயம்

யிலுடன் சிறிய ரக லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்டியாகொட பிரதேசத்தின் கஹாவ பகுதியில் உள்ள கொடகம புகையிரத கடவையில் இன்று வியாழக்கிழமை (28) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.





விபத்தில் உயிரிழந்த நபர் லொறியில் பயணித்த பத்தேகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர்  ஆவார்.

குறித்த நபர் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்த லொறியின் சாரதி பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி: ஒருவர் கைது

 கம்பளை, குருந்துவத்தை உடஹெந்தென்ன பகுதயில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த நாட்டில் தாயரிப்பாட்ட துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படை கம்பளை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (28) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கியானது T-56 துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் வகை தோட்டாக்களை சுடக்கூடிய துப்பாக்கி ஆகும்.

மேலதிக விசாரணை

அத்தோடு இந்த துப்பாக்கி வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 35 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி: ஒருவர் கைது | Gampola Gun Found In A House A Man Arrested

சம்பவம் தொடர்பில் குருந்துவத்தை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.   

Share:

சீரற்ற காலநிலையால் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

 நாட்டில் நிலவி வருகின்ற சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதில், 3 மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய பிரதேசம், கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை பிரதேசம், மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல, பிட்டபெத்தர பிரதேசம் மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பலத்த மழைவீழ்ச்சி

அதன்படி கடந்த 24 மணித்தியாலங்களிற்குள் குறித்த பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையால் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | 7 Districts Under Landslide Warning Heavy Rain

தொடர்ந்தும் மழைவீழ்ச்சி அதிகரித்தால், மண்சரிவு, பாறை சரிவு, நிலம் தாழிறக்கம் போன்ற அனர்த்தங்கள் இடம்பெற வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதற்கிடையில், 6 மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மஞ்சள் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பகுதிகளாவன,

  • காலி மாவட்டம் - நெலுவ, எல்பிட்டிய
  • ஹம்பாந்தோட்டை மாவட்டம் - வலஸ்முல்ல
  • களுத்துறை மாவட்டம் - அகலவத்தை, வல்லாவிட்ட
  • கேகாலை மாவட்டம் - ருவன்வெல்ல
  • மாத்தறை மாவட்டம் - முலடியன, அதுரலியா
  • இரத்தினபுரி மாவட்டம் - கலவான, கொலொன்ன, எஹெலியகொட, குருவிட்ட, கிரியெல்ல, அயகம, எலபாத, நிவித்திகல, பெல்மதுல்ல   
Share:

About