Column Left

Vettri

ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி இன்று!!




 9 வது மகளிர் ஆசியக் கிண்ண 20 க்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (28) பிற்பகல் இடம்பெறவுள்ளது.


இதில் இலங்கை, இந்திய மகளிர் அணிகள் மோதுகின்றன. போட்டி ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

இவ்வருடப் போட்டித் தொடரில், ஏ பிரிவில் இருந்து போட்டிக்குள் நுழைந்த இந்திய அணி, இறுதிப் போட்டியில் இடம்பிடித்துள்ள நிலையில், போட்டியை நடத்தும் இலங்கை வீராங்கனைகளும் தோல்வியற்ற பயணத்துடன் இந்த ஆண்டுக்கான இறுதிப் போட்டிக்கான இடத்தைப் பதிவு செய்தனர்.

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுவது இது 9 வது முறையாகும், மேலும் இந்திய வீராங்கனைகள் 7 முறை ஆசிய செம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.
இலங்கை மகளிர் அணி 6 தடவைகள் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments