Column Left

Vettri

Breaking News

பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து கிண்ணத்தை வாங்க மறுத்த இந்தியா!!




 ஆசியக் கிண்ணத் தொடரில் சம்பியனான இந்தியா, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஷின் நக்வியிடமிருந்து கிண்ணத்தை வாங்க மறுத்திருந்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினதும், ஆசிய கிரிக்கெட் சபையினதும் தலைவர் நக்வி என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி முடிந்து ஒன்றரை மணித்தியாலம் தாமதமாக பரிசளிப்பு ஆரம்பமான நிலையில், மேடையிலிருந்த விருந்தினர்களிடமிருந்து குல்தீப் யாதவ், அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா ஆகியோர் தனிநபர் விருதுகளை வாங்கியிருந்த நிலையில், நக்வி இவர்களைப் பாராட்டியிருக்காததோடு, அவர்களும் இவரைக் கண்டு கொள்ளவில்லை.

மேடையில் கிண்ணம் இருப்பது போல் பாவனை செய்து இந்திய வீரர்களும், பயிற்சியாளர் குழாமும் கொண்டாடியிருந்தனர்.

No comments