கோழி இறைச்சி இறக்குமதிக்கு அனுமதி வழங்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ இன்று (31) தெரிவித்தார்.
அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தா
Monday, July 31, 2023
எரிபொருள் QR குறியீடு காரணமாக அரசுக்கு விளைந்த நன்மை !!
தேசிய எரிபொருள் அனுமதி அல்லது QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் இலங்கையில் மாதாந்த எரிபொருள் பாவனை 50 வீதத்தால் குறைக்கப்பட்டதாகவும் இதனால் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு குறைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு டொலர் நெருக்கடியில் இருந்தபோது, QR குறியீட்டை அறிமுகப்படுத்தியதன் பயனாக, மற்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்கு டொலரைப் பயன்படுத்த முடிந்தது என்றும், அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள் 65 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் கூறுகிறது
சில இராஜாங்க அமைச்சர்கள் அரசின் சன்மானத்துக்காக தன்மானத்தை இழந்து உள்ளார்கள் -ஜெயசிறில் தெரிவிப்பு!!
கருப்பு ஜூலை 40 வது நினைவு தின நிகழ்வானது இன்று(30) மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட தமிழரசுக்கட்சி உறுப்பினர்களின் ஏற்பாட்டில் துறை நீலாவனை சித்தி விநாயகர் தில்லையம்பல பிள்ளையார் ஆலய முன்றலில் இடம் பெற்றது மட்டக்களப்புபாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன்,மட்டக்களப்பு முன்னாள் மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் முன்னாள் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் ஆகியோர் கலந்து கொண்டனர் இதன்போது உரையாற்றிய முன்னாள் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் இவ்வாறு தெரிவித்தார் தமிழர்களின் இன விடுதலைக்காகவும் நில விடுதலைக்காகவும் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றோம்அரசு வழங்குகின்ற ஒரு சில சன்மானத்துக்காக தன்மானத்தை விட்டு சில இராஜாங்க அமைச்சர்கள் நில வளத்தை விற்று விட்டு தற்போது நீர்வளத்தை விற்பதற்கு தயாராகிறார்கள் இதனைப் புரிந்து மட்டு அம்பாறை மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து தமிழரசுக்கட்சி எடுக்கின்ற செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார் அபிவிருத்தி எனும் போர்வையில் இளைஞர்களை ஏமாற்றுகின்றனர் எனவே இதனைப் புரிந்து செயற்பட வேண்டும் எமது இன மக்களின் கண்கள் புடுங்கப்பட்டும் ஆடைகள் கிழிக்கப்பட்டும் இளைஞர்கள் கொத்துக்கொத்தாக அளிக்கப்பட்ட வரலாறுகள் இனி இடம் பெறக்கூடாது எனவே எமது இளைஞர்கள் தமிழ் தேசியத்தின்பால் பயணிக்கின்ற எமது தமிழரசுகட்சியுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என தெரிவித்தார்
Sunday, July 30, 2023
எரிபொருள் விலை திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!!!
அடுத்த மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தை சற்றுமுன் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் மேலும், ''எரிபொருளுக்கான கொள்வனவு கட்டளைகளைப் பிறப்பிக்காமல், 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட எரிபொருள் இருப்பை உறுதி செய்யாத எரிபொருள் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
எரிபொருள் கொள்வனவு கட்டளைகளை
எரிபொருள் விலை திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Petrol Diesel Price Today In Sri Lanka Fuel Price
92 ஒக்டேன் பெட்ரோல் இருப்பை பேணாத 51 எரிபொருள் நிரப்பு நிலையங்களும், ஒட்டோ டீசல் இருப்பைப் பேணாத 101 எரிபொருள் நிரப்பு நிலையங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றை உடனடியாக தங்களுக்கான எரிபொருள் கொள்வனவு கட்டளைகளைப் பிறப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய - இலங்கை நில இணைப்பால் கிட்டவுள்ள நன்மை...
இந்திய - இலங்கை நில இணைப்பு இலங்கைக்கு பொருளாதார ரீதியாக பயனளிக்கும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான தற்போதைய அனைத்து வர்த்தக உடன்படிக்கைகளையும் நிறைவேற்றுவதன் மூலம் இலங்கை "மிகவும் விரும்பப்படும் நாடாக" இருக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
புவியியல் இருப்பிடம்
இந்திய - இலங்கை நில இணைப்பால் கிட்டவுள்ள நன்மை | Mano Welcomes Indo Lanka Land Link
"இந்திய சந்தைக்கான இலங்கை தயாரிப்புகள் ஜி.எஸ்.பி பிளஸ் போன்ற "வரி இல்லாத சலுகை" பெறும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியா வளர்ந்து வருகிறது. எமது புவியியல் இருப்பிடம், இந்தியாவுக்கு மிக அருகாமையில் இருப்பதால் நாம் அதனைப் பயன்படுத்த வேண்டும், அதிலிருந்து சிறந்ததைப் பெற வேண்டும்.
எமது உற்பத்தியாளர்கள், குறிப்பாக தென்னிந்தியாவின் மிகவும் விரும்பப்படும் நடுத்தர வர்க்க நுகர்வோர் சந்தையை அடைய முடியும்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க கடந்த அரசாங்கத்தில் பிரதமராக இருந்த போது இதுபோன்ற யோசனைகள் குறித்து அவருடன் கலந்துரையாடியுள்ளேன் எனக் கூறியுள்ளார்.
ரணிலின் பின்னடிப்பால் இந்தியா எடுத்துள்ள முடிவு!!!
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அதிபர் ரணில் விக்ரமசிங்க கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம் எந்தெந்த தீர்மானங்களையும் எட்டாது முடிவுக்கு வந்த பின்னணியில், தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இந்திய தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையிலான அரசியல் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம்(ஓகஸ்ட் - 01) இந்திய தூதரகத்தின் அழைப்பின் பேரில் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்திப்புக்கான அழைப்பு
ரணிலின் பின்னடிப்பால் இந்தியா எடுத்துள்ள முடிவு | Political Meeting Tamil National Parties India
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஊடாக இந்த சந்திப்புக்கான அழைப்பு ஏனைய தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்டதாக தெரிய வருகிறது.
செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் கட்சிகளின் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சி.சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், கலையரசன் ஆகியோரும் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், சு. நோகராதலிங்கம் புளொட்டின் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இந்தச் சந்திப்புக்கான அழைப்பு அனுப்பப்பட்டதா? என்பதை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை.
சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த மைத்திரி புதிய திட்டம்!!!
சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகியுள்ள சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து, வலுவான கட்சியாக அடுத்த தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவரான முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கட்சியின் ஆலோசகரான முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடனும் கட்சியை ஒன்றிணைப்பது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கட்சிக்குள் பிரச்சினைகள்
சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த மைத்திரி புதிய திட்டம் | New Plan Strengthen Slfp Maithri
சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் சிறிமாவே பண்டாரநாயக்க சுதந்திரக் கட்சியை பிளவுபட இடமளிக்காது பாதுகாத்தார் எனவும் மிக கடினமான சந்தர்ப்பங்களில் கட்சியை பாதுகாக்க தானும் அவருக்கு உதவியதாகவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
தற்போதும் கட்சிக்குள் பிரச்சினைகள் உருவாகியுள்ள போதிலும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து கட்சியை முன்நோக்கி கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு
சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த மைத்திரி புதிய திட்டம் | New Plan Strengthen Slfp Maithri
கட்சியில் உயர் பதவிகளை வகித்து வந்த நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்டோர் அரசாங்கத்தில் இணைந்துகொண்டு அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டதால், அவர் உட்பட சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் எனினும் அதற்கு எதிராக நிமல் சிறிபால டி சில்வா சட்ட நடவடிக்கை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.
அந்த வழக்கு தோல்வியடைந்த போதிலும், மேன்முறையீட்டு நீதிமன்றம், அவர்கள் அனைவரும் வகித்து வந்த பதவிகளை வழங்கி அதிகாரங்களை பகிருமாறு தீர்ப்பு வழங்கியது எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சி தகவல் - வெளியாகிய புதிய அறிவித்தல்!!
அரச உத்தியோகத்தர் தொடர்பில் ஜப்பானுக்கும் இடையில் புதிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையின் அரச துறையின் இளம் நிறைவேற்று அதிகாரிகளுக்கு ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் பயிற்சியளிக்க சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.
611 மில்லியன் ரூபா மானியம்
அரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சி தகவல் - வெளியாகிய புதிய அறிவித்தல் | Government Employee Government Staffs Salary
இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம், இது தொடர்பான மனித வள அபிவிருத்தி புலமைப்பரிசில் திட்டத்திற்காக ஜப்பானிடமிருந்து 611 மில்லியன் ரூபா மானியமும் வழங்கப்படவுள்ளது...
தமிழரசு கட்சியின் காரைதீவு பிரதேச வட்டார மூலக்கிளை புனரமைப்பு.....
தமிழரசு கட்சியின் காரைதீவு பிரதேச வட்டார மூலக்கிளை புனரமைப்பானது
காரைதீவுப்பிரதேச தமிழரசு கட்சியின் செயலாளர் க. செல்வபிரகாஷ் தலைமையில்
நடைபெற்றது. இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் அவர்களும் முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் அவர்களும் காரைதீவு முன்னாள் பிரதேச சபை
தவிசாளர்,காரைதீவு பிரதேச தமிழரசுக் கட்சியின் தலைவருமான கி.ஜெயசிறில் அவர்களும்
கலந்து சிறப்பித்தனர்.
1,2,5 வட்டாரம் செயலாளர் எஸ் கணேஷ்.
தலைவர்
க.தட்சிணாமூர்த்தி .
பொருளாளர் s.பாஸ்கரன்.
6,7,10 வட்டாரம்
செயலாளர்
க.செல்வபிரகாஷ்.
தலைவர் த.மோகனதாஸ்.
பொருளாளர் 𝕃.𝔸.ரமேஷ் குமார்.
3,4,8,9 வட்டாரம்
செயலாளர் 𝕐.கோபிகாந்.
தலைவர் கி.ஜெய சிறில்.
பொருளாளர் க.யோகன்
.
11,12 வட்டாரம்
தலைவர் - V.Siva kumar
செயலாளர்- G . Thanga vadivel
பொருளாளர். - Siriyan
11 வயது சிறுமியை 57 வயதுடைய நபர் கற்பழிப்பு!!!
2023.07.28 ஆம் திகதி அக்கரைப்பற்று நாவற்காடு பிரதேசத்தில் 11 வயது சிறுமியை 57 வயதுடைய நபர் கற்பழித்தமைக்காக பெரும் குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பொலீஸ் பரிசோதகர் ஹசீப் அவர்கள் தலைமையிலான குழுவினர் சந்தேக நபரை கைது செய்து பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்...
Saturday, July 29, 2023
படுகொலையை மறைப்பதற்கே பௌத்த விகாரைகள்
மக்களுடைய படுகொலையை மறைப்பதற்கே பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி நேற்று முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்ற
இந்த போராடத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்டால் தேசிய நல்லிணக்கமும் இல்லாமல் போகும் – கம்மன்பில
13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் தற்போதுள்ள தேசிய நல்லிணக்கமும் இல்லாமல் போகும் என நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
13 ஆவது திருத்தம் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்றும் அதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் என என்றும் குறிப்பிட்டார்.
தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.
ஆனால் பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி அதிகாரம் ஆகியவற்றை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என உதய கம்மன்பில தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில் காணி தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அதற்கான விசேட பொறிமுறை ஒன்று வகுக்கலாமே தவிர காணி அதிகாரங்களை வழங்க கூடாது என்றும் கூறினார்.
இதேவேளை மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டும் என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.
மு.க. ஸ்டாலினுடன் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேச்சு !
மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவர்களை கௌரவிக்கும் முகமாக மலையகம் – 200 விழா, மீனவர் பிரச்சினை, மலையக கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ஜீவன் தொண்டமான் பேச்சு நடத்தியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் மரியாதை நிமித்தம் இன்று (29) காலை நடைபெற்ற இச்சந்திப்பில், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காக தமிழக அரசின் பங்களிப்பும் அவசியம் என்ற கோரிக்கையை அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்வைத்தார்.
இச்சந்தர்ப்பத்தில், கடந்த வருடம் இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியின் போது தமிழக அரசாங்கம் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் பாரிய அரிசி தொகையினை நன்கொடையாக வழங்கியிருந்தது. இதற்கு இலங்கை மக்கள் சார்பாக தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தின் துணைத் தூதுவர் வெங்கடேஸ்வரன் மற்றும் அரச உயர் அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.
வடக்கு கிழக்கினை இந்தியாவின் ஒரு பகுதியாக இணைக்க வேண்டும்- அடைக்கலநாதன் தெரிவிப்பு !!
தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை என்றால் வடக்கு கிழக்கினை இந்தியாவின் ஒரு பகுதியாக இணைக்க வேண்டும் என கோர வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
அதன் மூலமே தமிழர்களின் இறையான்மையினை பாதுகாக்காமுடியும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
சிங்ளவர்கள் தமிழர்களின் இரத்ததினை குடிக்கும் நோக்குடன் மட்டுமே செயற்படுகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
நாட்டை வலுப்பெறச்செய்ய வேண்டும் என்பதை சிந்திக்காது, தமிழர்களை எவ்வாறு முடக்குவது என்றுதான் அரச தலைவர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள் என குறிப்பிட்டார்.
பல வேற்றுமைகள் இருந்தாலும் எமது மக்களுக்காக நாம் ஒற்றுமைப் பட வேண்டும் என்றும் இந்த ஒற்றுமை புலம்பெயர் தேசத்து கட்டமைப்புகளும் ஒன்றுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
உதட்டளவில் தேசியம் பேசாமப் அனைவரையும் ஒன்றினைக்கின்ற செய்றபாட்டை தமிழீழ விடுதலை இயக்கம் செய்யும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
ஜனாதிபதியை சந்தித்தார் ஹயாஷி யோஷிமாசா!!
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இன்று (சனிக்கிழமை) கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார்.
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை நினைவு கூர்ந்து தொடங்கிய இந்தக் கலந்துரையாலில் பல்வேறு துறைகளில் அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இரு தரப்பும் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்படுவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
இலங்கையில் கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டிற்கு ஜப்பான் அரசாங்கம் வழங்கும் ஆதரவிற்கு இதன்போது நன்றி தெரிவித்த ஜனாதிபதி, கடன் மறுசீரமைப்பு தொடர்பான பொதுவான தளத்தை மேம்படுத்தும் மற்றும் செயல்முறையை விரைவுபடுத்தும் நோக்கில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுடன் நடைபெற்ற கலந்துரையாடல் குறித்தும் விளக்கினார்.
மேலும், ஜப்பான்-இலங்கை ஒத்துழைப்பின் முக்கிய விடயமான இலகு ரயில் திட்டம் (LRT), துறைமுக கிழக்கு முனையம், கண்டி அபிவிருத்தித் திட்டம், மத்திய அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டங்களை துரிதப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இந்து சமுத்திர பிராந்தியத்தை அமைதியான மற்றும் நிலையான பிராந்தியமாக பேணுவதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன், பிராந்திய மற்றும் பல்வேறு உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரும் கலந்துரையாடினர்,
தொழில் சந்தை சார்ந்த பொருளாதாரத்தில் இருந்து உயர் தொழில்நுட்ப பொருளாதார மாற்றத்தை எதிர்பார்த்துள்ள இலங்கையின், உயர் தொழில்நுட்ப கைத்தொழில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கு தெளிவூட்டியதோடு அதற்காக ஜப்பானிய முதலீட்டாளர்களை ஊக்குவிக்க அவசியமான பணிகளை மேற்கொள்வதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.
யாழில் மருத்துவரின் வீட்டில் நடந்த பயங்கரம்!!!
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் மருத்துவர் ஒருவரின் வீடு புகுந்த இனம் தெரியாத நபர்கள் இன்று (29) வீட்டுத் தளபாடங்களை சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கந்தர்மடம், பழம் வீதியிலுள்ள குறித்த மருத்துவ தம்பதிகளின் வீட்டுக்குள் நுழைந்த கும்பலே இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளது.
இரண்டாவது தடவை
யாழில் மருத்துவரின் வீட்டில் நடந்த பயங்கரம்! | Jaffna Doctors Home Damaged By Unknown Persons
இன்று (29) அதிகாலை ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வீட்டில் இவ்வாறு அட்டூழியம் இடம்பெறுவது இரண்டாவது முறை எனவும், கடந்த சில வாரங்களிற்கு முன்னரும் இந்த வீட்டிற்குள் இவ்வாறு கும்பல் ஒன்று நுழைந்து அட்டூழியத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் குறித்த தம்பதியினர் குறிப்பிட்டனர்.
இதேவேளை காணி உரிமை தொடர்பான தகராறினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் நிறுத்தப்படும் சேவை!!
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் சேவை பிரிவொன்று நிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வகையில், பயணிகள் போக்குவரத்து சேவையான பேருந்து சேவையே இவ்வாறு நிறுத்துவதற்கு விமான நிலைய அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
விமான நிலைய தலைவரின் அனுமதி
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் நிறுத்தப்படும் சேவை | Bus Service Stops At Bandaranaike Airport
கடந்த 6 மாத காலமாக விமான நிலை வளாகத்திற்குள் நுழைவதை நிறுத்தியிருந்த பேருந்து சேவை, இரண்டு நாட்களுக்கு முன்னரே விமான நிலைய தலைவர் அளித்த அனுமதியின் பேரில் உள்நுழைய ஆரம்பித்தது.
ஆனால் இன்று காவல்துறையினர் பேருந்துகளை அகற்றுமாறு தகவல் தெரிவித்ததையடுத்து மீண்டும் எவரிவத்தை பேருந்து நிலையம் வரையிலும் பேருந்துகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை முச்சக்கர வண்டி சாரதிகள் சந்தித்த பின்னர், விமான நிலையத்தைச் சுற்றி இருந்த பேருந்துகளை வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
யாழில் துணிவுடன் கசிப்பு உற்பத்தியை முற்றுகையிட்ட பெண் கிராம சேவையாளர்!!
யாழ் மருதங்கேணி, வத்திராயன் பெண் கிராமசேவையாளர் கசிப்பு காய்ச்சும் இடத்திற்கு காவல்துறையினருடன் நேரடியாக சென்று கசிப்பு உற்பத்தியை தடை செய்துள்ளமையால் அப்பகுதி மக்கள் குறித்த கிராம சேவையாளரை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
கிராம சேவையாளர்கள் என்றாலே கள்ள மண்ணுக்கு ஆதரவளித்தல், பக்கச்சார்புடன் செயற்படுதல், சட்டவிரோத நடவடிக்கைகளைத் தட்டிக்கேட்க தயங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் என்று மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயம் தான் இருந்து வந்தது.
சட்டவிரோத செயல்களை தடுத்தல்
யாழில் துணிவுடன் கசிப்பு உற்பத்தியை முற்றுகையிட்ட பெண் கிராம சேவையாளர்! | Woman Grama Niladhari Stop Liquor At Jaffna
ஆனால் வத்திராயன் கிராம உத்தியோகத்தர் பொதுமக்களுக்கும் தன் சக கிராம அலுவலர்களுக்கும் நேர்மையாகவும் தற்துணிவாகவும் செயலாற்ற வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியுள்ளார்.
அவரது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கிராமப்பகுதியில் இத்தகைய சட்டவிரோத செயல்கள் நிகழ்வதைத் தடுக்க வேண்டும் என்று, வத்திராயன் கிராம அலுவலர் காவல்துறையினருடன் சென்று கசிப்பு நிலையத்தை முற்றுகையிட்டதன் ஊடாக அதனை நிரூபித்துள்ளார்.
ஏனைய கிராம அலுவலர்களும் வத்திராயன் கிராம சேவையாளர் போன்று தற்துணிவுடன் பக்கச்சார்பின்றி சேவை செய்ய வேண்டும், என்பதற்கு இந்த கிராம சேவையாளர் முன்னுதாரணமாக செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
15ஆம் திகதி முதல் டொலருக்கு நிகராக ரூபாயின் பெறுமதி மீண்டும் அதிகரிக்கும்!!
இலங்கை ரூபாவின் மதிப்பு மீள அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மீண்டும் அதிகரிக்கும் ரூபாவின் பெறுமதி
மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி முதல் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் அதிகரிக்கும்.
வழங்கல் மற்றும் தேவைக்கு ஏற்ப டொலர் வீதத்தை தீர்மானிக்க அரசாங்கம் அனுமதித்துள்ளது. சமீபகாலமாக ரூபாவின் மதிப்பில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கத்திற்கு முற்றிலும் டொலர் பரிவர்த்தனையே காரணம்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்தவுடன், ரூபாவின் மதிப்பு மீள அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் இருந்து இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
15ஆம் திகதி முதல் டொலருக்கு நிகராக ரூபாயின் பெறுமதி மீண்டும் அதிகரிக்கும் | The Rupee Will Appreciate Again
Friday, July 28, 2023
1 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை!
2023 ஜூலை முதலாம் திகதி முதல் ஜூலை 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1 இலட்சத்து 23 ஆயிரத்து 503 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகைதந்த சுற்றுலாப்பயணிகளின் மொத்த எண்ணிக்கை 748,377ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
13ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் சுரேன் ராகவனின் கருத்து!!
13ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு இடையே பொது இணக்கப்பாடொன்று இல்லை என உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சர்வகட்சி கூட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் அந்த மக்களுக்கு சேவையாற்றவில்லை எனவும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
13ஆம் திருத்தச் சட்டத்தில் உள்ள சகல அதிகாரங்களும் வழங்கப்படுமா? என்ற கேள்விக்குள்ளேயே காவல்துறை அதிகாரம் தொடர்பில் பிரச்சினை எழுகிறது.
குறிப்பாக வடக்கில் பொதுவான சந்தேகம் நிலவுகிறது.
ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் வடக்கில் இருந்தால் என்றாவது தங்களுக்கு எதிராக அவர்கள் திரும்புவார்கள் என்ற அச்சம் அந்த மக்களிடம் உள்ளது.
எனினும், வடக்குக்கு தமிழ் காவல்துறையினர் அவசியமில்லை.
அங்கிருக்கின்ற காவல்துறையினரை தமிழாக்க வேண்டும்.
எனவே, வடக்கு தமிழ் தலைவர்களிடையே மாறுபட்ட கோரிக்கைகளே காணப்படுவதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
உணவுப் பாதுகாப்பு கொள்கை வரைபு சமர்ப்பிப்பு!!
உணவுப் பாதுகாப்பு (விவாசயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி) தொடர்பான கொள்கை வரைபு குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் கூடிய குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவில் இந்த வரைபு சமர்ப்பிக்கப்பட்டது.
உணவுப் பாதுகாப்பிற்கான தேசிய கொள்கையொன்றைத் தயாரிக்கும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அசங்க நவரத்ன தலைமையில் செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்ததுடன், இந்தக் குழு சுமார் எட்டு மாதங்களுக்கு மேலாகக் கூடி ஆராய்ந்து இந்தக் கொள்கைக் கட்டமைப்பைத் தயாரித்துள்ளது. நீர்ப்பாசன அமைச்சு, கமத்தொழில் அமைச்சு, கடற்றொழில் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு, வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சு, கல்வி அமைச்சு, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு உட்பட அமைச்சுக்களின் செயலாளர்கள், வடமேல்மாகாண விவசாய அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, உணவு மற்றும் விவசாய அமைப்பு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைவுத் திணைக்களம் உட்பட பல்வேறு நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் இணைந்து இதனைத் தயாரித்துள்ளனர்.
நாட்டுக்குத் தேவையான உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான குறுகியகால, நீண்டகால யோசனைகள் பல இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
உணவுப் பாதுகாப்பிற்கான கருத்தியல் கொள்கைக் கட்டமைப்பை தேசிய பேரவையில் சமர்ப்பித்து அதன் ஊடாக பாராளுமன்றத்திற்கு இது சமர்ப்பிக்கப்படும் என குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவின் தலைவர் கௌரவ நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
எதிர்காலத்தில், சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு அறிவிக்கப்பட்டு, நிறுவன ஏற்பாடுகளை ஒதுக்கீடு செய்வதற்கு தேவையான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அசங்க நவரத்ன, கௌரவ சாகர காரியவசம் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டனர்.
போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்குப் பொறுப்பான நிறுவனங்களை அழைப்பதற்குத் தீர்மானம்!!
போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்குமான முதற்கட்டமாக அது தொடர்பான நாட்டின் தற்போதைய நிலைமையைச் சரியாகப் புரிந்துகொள்வது முக்கியமானது என்பதால் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடுவதற்கு 'நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில்' தீர்மானிக்கப்பட்டது.
அந்தக் குழுவின் முதலாவது கூட்டம் குழுவின் தலைவர் அமைச்சர் கௌரவ டிரான் அலஸ் தலைமையில் நேற்று (27) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதற்கமைய, இலங்கை பொலிஸ், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான அதிகார சபை ஆகிய நிறுவனங்களை குழு முன்னிலையில் அழைத்து இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு தற்போதைய நிலைமையை கண்டறிவது அவசியமானது என குழுவின் தலைவர் அமைச்சர் கௌரவ டிரான் அலஸ் தெரிவித்தார். அதற்கமைய, அந்த நிறுவனங்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி குழுவின் முன்னிலையில் அழைப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்குமான மூலோபாயத் திட்டம் மற்றும் அது தொடர்பில் செயற்படும் நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இந்தக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜயந்த சமரவீர, கௌரவ (வைத்திய கலாநிதி) உபுல் கலப்பத்தி மற்றும் கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன மற்றும் சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்களத்தின் (பதில்) பணிப்பாளருமான எச்.ஈ. ஜனகாந்த சில்வாவும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
உலக சாரணர் ஜம்போரி அணிக்கு ஜனாதிபதியால் தேசியக் கொடி வழங்கி வைப்பு!
தென்கொரியாவில் நடைபெறவிருக்கும் 25ஆவது உலக சாரணர் ஜம்போரியில் கலந்து கொள்ளும் இலங்கை அணிக்கு இலங்கையின் பிரதம சாரணரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக தேசியக் கொடி வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
தென்கொரியாவில் நடைபெறவிருக்கும் 25ஆவது உலக சாரணர் ஜம்போரியில் கலந்து கொள்ளும் இலங்கை அணிக்கு இன்று முற்பகல் இலங்கையின் பிரதம சாரணரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக தேசியக் கொடி ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேசிய சாரணர் ஜம்போரியின் உத்தியோகபூர்வ சின்னமும் இதன்போது வெளியிடப்பட்டது.
25ஆவது உலக சாரணர் ஜம்போரி 2023 ஓகஸ்ட் 1 முதல் 12 வரை தென் கொரியாவில் உள்ள ளுயநஅயபெநரஅ இல் நடைபெறவுள்ளதோடு, உலகம் முழுவதிலுமிருந்து 50,000 சாரணியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ள நிலையில், இலங்கையைப் பிரதிநித்துவப்படுத்தி, 177 சாரணியர்கள், தலைவர், தலைவியர்களும் பங்குபற்றவுள்ளனர்.
இலங்கை சாரணர் குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி, 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை தென்கொரியா போன்று அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும், இந்த பயணத்தின் போது பெற்றுக்கொள்ளும் அனுபவங்களை கொண்டு நாட்டின் எதிர்காலத்திற்கு பங்களிப்புச் செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.
தன்னம்பிக்கை மற்றும் சவால்களை எதிர்கொள்ளக் கூடிய வலுவான எதிர்கால சந்ததியைக் கட்டியெழுப்ப சாரணர் இயக்கம் வழங்கும் பங்களிப்பை பாராட்டிய ஜனாதிபதி, நாட்டின் எதிர்காலத்திற்காக பெற்றுக்கொண்ட பயிற்சியை திறம்பட பயன்படுத்துமாறு சாரணியர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இங்கு கருத்து தெரிவித்த பிரதம சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி ஜனபிரித் பெர்னாண்டோ, இலங்கையில் சாரணர் இயக்கத்தை விரிவுபடுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய பணிப்புரையின் பிரகாரம், இலங்கையில் சாரணர் இயக்கத்தில் ஒரு இலட்சம் உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் இலக்கு அண்மையில் எட்டப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இலங்கை சாரணர் குழுவின் தலைவரும், சர்வதேச ஆணையாளருமான விசேட வைத்திய நிபுணர் ரஜீவ் பீரிஸுக்கு தேசிய கொடி வழங்கி வைக்கப்பட்டதோடு, இலங்கை சாரணர் சங்கத்தின் தலைவர் . ஸ்ரீநாத் குணரத்ன, நிறைவேற்றுக் குழு தலைவர் ரத்னசிறி பெரேரா, உட்பட சங்கத்தின் ஆணையாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு சர்வதேச நீதி விசாரணையை கோரி வடக்கில் போராட்டம்!!
தமிழ் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினால் பிழை என கூறும் இலங்கையின் அரசியல் தலைவர்கள் இருக்கும் வரை இலங்கையின் நீதித்துறை கேள்விக்குறியே என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இன்று (28) முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நீதியான முறையில் விசாரணை
வடகிழக்கு தழுவிய முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குளாய் கொக்குத்தொடுவாயில் அளவுகணக்கு தெரியாதளவில் போராளிகள், மக்கள் ஆயிரக்கணக்கில் புதைக்கப்பட்ட மனித புதைகுழிக்கு எதிராக ஒரு சர்வதேச விசாரணை வேண்டி சர்வதேசத்தின் மேற்பார்வையோடு நீதியான முறையில் விசாரணை செய்யப்பட வேண்டும் என இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழ் தேசிய மண்ணிலே பல்வேறுபட்ட இடங்களில் மனித புதைகுழிகள் இன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த மனித புதைகுழிகள் வெளியில் வருமானால் சிறிலங்கா இராணுவம் சிறிலங்கா கடற்படை, விமானப்படை , பாதுகாப்பு படைகள் கேள்விக்குட்படுத்தப்படுவார்கள்.
அணி திரண்டுள்ள மக்கள்
குறிப்பாக இப்போது கொக்குத்தொடுவாயிலே கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி, மண்டைதீவிலே இருக்கின்ற மனித புதைகுழி , இன்னும் பல இடங்களிலே இராணுவ முகாம்களிலே மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மனித புதைகுழிகள் என்பது இராணுவம் மற்றும் அரசபடைகளால் மிகவும் வன்மமான முறையிலே அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு மிக நுட்பமான முறையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட தமிழ் உறவுகளுடையதாக இருப்பதனால் இப்போராட்டத்தில் இன்று மக்கள் அணிதிரண்டிருக்கிறார்கள்.
சர்வதேச சமூகத்திடம் நாம் கோருவது ஒரு நீதி விசாரணை வேண்டும். நாங்கள் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படுகின்றோம். இந்த மண்ணிலே நீதியற்ற மனிதர்களாக தமிழர்கள் தொடர்ந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த நீதி விசாரணை என்பதற்காகத்தான் ஒரு சர்வதேச நீதி கோரி இன்று மக்கள் அணியாக திரண்டு தமது ஆதங்கத்தையும், உணர்வுகளையும் வெளிப்படுத்துவதாக இப்போராட்டம் அமைந்துள்ளது.
மனித புதைகுழிகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டாலும் அது தொடர்பாக விசாரணைகள் நடாத்தப்படவில்லை. இந்நேரத்தில் புதிதாக மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுகின்றது . இதற்கு நீதியான விசாரணை நடாத்தப்பட வேண்டும்.
இலங்கை அரசாங்கம் என்பது உண்மையில் நீதியாக நடப்பதில்லை. தமிழ் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினால் கூட அதனை பிழை என கூறும் இலங்கையின் அரசியல் தலைவர்கள் இருக்கும் வரை இலங்கையின் நீதித்துறை சரியாக செயற்படுமா? இவர்களால் நீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமா ? என்பது கேள்விக்குறியே.
அதனால்தான் செம்மணி மனித புதைகுழியிலிருந்து மண்டைதீவு மனித புதைகுழி மற்றும் கொக்குதொடுவாயில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி, மன்னாரில் இருக்கும் மனித புதைகுழி என இவ்வாறு பல இடங்களிலும் மனித புதைகுழிகள் தோண்டத் தோண்ட தமிழர்களாக வந்து கொண்டிருப்பதுதான் மிகப்பெரிய அநியாயம்.
அந்த அநியாயத்தினுடைய நீதி என்பது இலங்கையிலே கிடைக்காது அதனால் தான் இந்த சர்வதேச நீதி விசாரணையை கோரி இந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் நாளை காலை வரை போராட்டம் நடத்துவதற்கு தடை !!
இன்று (28) முற்பகல் 10.30 மணி முதல் நாளை (29) முற்பகல் 10.00 மணி வரை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தை மையமாக கொண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலை சதுக்கம் உட்பட 10 இடங்களுக்கு அருகாமையில் 9 தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
துமிந்த நாகமுவ, ரொஷான் சமீர, தம்பிட்டியே சுகதானந்த தேரர், ஜகத் தம்மிக்க முனசிங்க, தன்னே ஞானானந்த தேரர், ஜே.பி.குருசிங்க, சிந்தக ராஜபக்ச, நயன ரஞ்சனி, நிலான் பெர்னாண்டோ, லஹிரு சதுரங்க வீரசேகர மற்றும் விதர்ஷன கன்னங்க ஆகியோருக்கே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பத்து இடங்களுக்கு முன்னால்
பண்டாரநாயக்க கட்டடம், விபத்துப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, கண் வைத்தியசாலை மற்றும் பிரதான வைத்தியசாலை சதுக்கம், சுகாதார அமைச்சு, பண்டாரநாயக்க கட்டடத்திற்கு முன்பாகவும் சுற்றிலும், அவசர சிகிச்சைப் பிரிவு, சுகாதார அமைச்சு மற்றும் டீன்ஸ் வீதியைச் சுற்றியுள்ள வீதி நடைபாதைகள், கின்சி சாலை, தேசிய மருத்துவமனை சதுக்கம் ஆகியவை உள்ளடக்கப்ட்டுள்ளன.
இந்த நீதிமன்ற உத்தரவு, ஆர்ப்பாட்டம் நடைபெறுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மருதானை காவல்துறையினர் நீதிமன்றில்
இந்த போராட்டங்கள் தொடர்பில் மருதானை காவல்துறையினர் நீதிமன்றில் முன்வைத்த வாக்குமூலத்தை கருத்திற்கொண்டே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்டில் நீர் கட்டணம் அதிகரிக்கப்படும்!!!
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கான பிரேரணை அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதன் பொது முகாமையாளர் வசந்த இளங்கசிங்க தெரிவித்தார்.
அமைச்சரவை ஒப்புதல் அளித்தால் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் குடிநீர் கட்டணம் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலாகவிருந்த வைத்திய நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான கைவிரல் அடையாளம் இடும் கட்டாய நடவடிக்கையை நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!!!!
எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலாகவிருந்த வைத்திய நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான கைவிரல் அடையாளம் இடும் கட்டாய நடவடிக்கையை நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் சமல் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் கைவிரல் அடையாளம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவித்து வைத்திய நிர்வாக சேவை அதிகாரிகள் உள்ளிட்ட சிரேஷ்ட வைத்திய துறையை சேர்ந்தவர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் குறித்த விடயமானது நடைமுறைக்கு சாத்தியமற்றது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நேற்றைய தினம் அறிவித்திருந்தனர். அத்துடன் கைவிரல் அடையாள முறைமையானது வைத்திய துறையின் யாப்பில் பிரச்சினைகளை உருவாக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறித்த விடயத்தினை நீக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் சமல் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் 2023 மற்றும் 2024 ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்ட புதிய அதிகாரிகள் குழுவினர் நேற்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்தனர்.
சந்தைப் பெறுமதி மற்றும் செயற்திறனை அடிப்படையாக கொண்ட சம்பள கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்தல் புத்திஜீவிகளின் வெளியேற்றத்தை மட்டுப்படுத்தல் மற்றும் வைத்தியர்களுக்கான கொடுப்பனவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளனர்.
அத்துடன், அது தொடர்பிலான பரிந்துரைகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளன. குறுகிய கால மற்றும் இடைக்கால திட்டங்களின் ஊடாக புதிய மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அந்தத் திட்டங்களை வகுக்கும் போது ஸ்கெண்டினேவியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முன்னேற்றகரமான சுகாதார கட்டமைப்பு தொடர்பில் ஆராய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.