Column Left

Vettri

Breaking News

நேபாள பாராளுமன்றம் கலைப்பு!!




 நேபாள பாராளுமன்றம் நேற்று (12) இரவு கலைக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

நேபாளத்தில் இடம்பெற்றுவரும் போராட்டத்தால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகியதையடுத்து, நாட்டின் இடைக்கால பிரதமராக நேபாள உயர்நீதிமன்ற முன்னாள் பிரதம நீதியரசர் சுசீலா கார்கி பிரதமராக பதவியேற்றார். 

இந்நிலையில் அவரது பரிந்துரையின் கீழ் ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் நேற்று பாராளுமன்றத்தைக் கலைத்துள்ளார். 

அதன்படி, அடுத்த வருடம் மார்ச் 21ஆம் திகதி நேபாள பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் எனவும் அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார்


No comments