வோல்கர் டர்க்கரின் இலங்கை மீதான அறிக்கை ஐ.நா கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளது!!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், செப்டெம்பரில் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார். ‘இலங்கையில் மனித உரிமைகளின் நிலைமை’ என்ற தலைப்பில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 60 ஆவது அமர்வு எதிர்வரும் செப்டெம்பர் 08 ஆம் ஆரம்பமாகி அக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகம் வெளியிட்ட நிகழ்ச்சி நிரலின்படி, அமர்வின் ஆரம்ப நாளில் வோல்கர்டர்க் இலங்கை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க ஏற்பாடாகியுள்ளது.
நாட்டுக்கு விஜயம் செய்திருந்த இவர், செம்மணி மனித புதைகுழி பகுதிக்கும் சென்றிருந்தார். இந்த அறிக்கையில் செம்மணி மனித புதைகுழி குறித்த விடயங்களும் முக்கியமாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது தவிர,இந்த அமர்வில்,இலங்கை குறித்த புதிய தீர்மானத்தை சமர்ப்பிக்க பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகளும் திட்டமிட்டு ள்ளன. இந்நிலையில்,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவு ள்ள வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளார்.
No comments