கத்தாரில் நடைபெற்ற SCCQ Cricket League Season-I கிரிக்கெட் போட்டி!!
கத்தார் நாட்டின் Customs Clearance துறையில் பணியாற்றும் இலங்கையை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்திய SCCQ Cricket League Season-I கிரிக்கெட் போட்டி கிரீக் (Kreeq) விளையாட்டு மைதானத்தில் ஜனவரி 30ஆம் திகதி இடம்பெற்றது.
இப்போட்டியில், மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட தொடரில், SCCQ Riders அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இத்தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இத்தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரர் மற்றும் தொடரின் ஆட்ட நாயகன் விருதுகள் எம்.எச்.எம். இல்ஹாம் அவர்களுக்கு வழங்கப்பட்டன. அதேபோல், சிறந்த பந்து வீச்சாளராக M.Z.M.Safar தெரிவுசெய்யப்பட்டார்.
No comments