Column Left

Vettri

Breaking News

ஆசியாவில் சிக்குன்குனியா பரவும் அபாயம் ;உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!




 சிக்குன்குனியா வைரஸ் நோய், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் பரவியதைப்போன்று தற்போது இந்தியா உட்பட, இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலுள்ள நாடுகளிலும் பரவும் அபாயமுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நோய், தற்போது ஐரோப்பா உட்பட பிற பகுதிகளிலும் பரவி வருவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, சிக்குன்குனியா வைரஸால்

119 நாடுகளில் சுமார் 5.6 பில்லியன் மக்கள் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2004-−2005 ஆம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் சிக்குன்குனியா ஒரு தொற்றுநோயாகப் பரவியது.

இதன்போது, சுமார் 500,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.


No comments