Column Left

Vettri

Breaking News

இன்று சிறப்பாக நடைபெற்ற சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 ஆவது மகாசமாதி தின நிகழ்வு!!




(  வி.ரி. சகாதேவராஜா)

 உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 ஆவது மகாசமாதி தின நிகழ்வு இன்று சனிக்கிழமை (19.07.2025)  காலை அவர் அவதரித்த காரைதீவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

காரைதீவு விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணி மன்றத்தினர் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

 அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்..
திருமுன்னிலை அதிதியாக கண்ணகி அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பிரியதர்ஷன் குருக்கள் கலந்து நந்திக் கொடி ஏற்றி சிறப்பித்தார்.

 நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக   ஓய்வு நிலை சம்மாந்துறை வலய உதவி கல்வி பணிப்பாளரும் பணி மன்ற ஆலோசகருமான வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பிரபமுகர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.  

 சுவாமி விபுலாநந்தர் கற்கை நிலைய மாணவர்களின் கலை நிகழ்வுகள் சிறப்புரைகள், கலை நிகழ்வுகள் ஆகியவை இடம்பெற்றன .




No comments