Vettri

Breaking News

கொழும்பில் நாளை காலை வரை போராட்டம் நடத்துவதற்கு தடை !!




இன்று (28) முற்பகல் 10.30 மணி முதல் நாளை (29) முற்பகல் 10.00 மணி வரை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தை மையமாக கொண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலை சதுக்கம் உட்பட 10 இடங்களுக்கு அருகாமையில் 9 தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. துமிந்த நாகமுவ, ரொஷான் சமீர, தம்பிட்டியே சுகதானந்த தேரர், ஜகத் தம்மிக்க முனசிங்க, தன்னே ஞானானந்த தேரர், ஜே.பி.குருசிங்க, சிந்தக ராஜபக்ச, நயன ரஞ்சனி, நிலான் பெர்னாண்டோ, லஹிரு சதுரங்க வீரசேகர மற்றும் விதர்ஷன கன்னங்க ஆகியோருக்கே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பத்து இடங்களுக்கு முன்னால் பண்டாரநாயக்க கட்டடம், விபத்துப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, கண் வைத்தியசாலை மற்றும் பிரதான வைத்தியசாலை சதுக்கம், சுகாதார அமைச்சு, பண்டாரநாயக்க கட்டடத்திற்கு முன்பாகவும் சுற்றிலும், அவசர சிகிச்சைப் பிரிவு, சுகாதார அமைச்சு மற்றும் டீன்ஸ் வீதியைச் சுற்றியுள்ள வீதி நடைபாதைகள், கின்சி சாலை, தேசிய மருத்துவமனை சதுக்கம் ஆகியவை உள்ளடக்கப்ட்டுள்ளன. இந்த நீதிமன்ற உத்தரவு, ஆர்ப்பாட்டம் நடைபெறுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருதானை காவல்துறையினர் நீதிமன்றில் இந்த போராட்டங்கள் தொடர்பில் மருதானை காவல்துறையினர் நீதிமன்றில் முன்வைத்த வாக்குமூலத்தை கருத்திற்கொண்டே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

No comments