Column Left

Vettri

Breaking News

எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலாகவிருந்த வைத்திய நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான கைவிரல் அடையாளம் இடும் கட்டாய நடவடிக்கையை நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!!!!




எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலாகவிருந்த வைத்திய நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான கைவிரல் அடையாளம் இடும் கட்டாய நடவடிக்கையை நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் சமல் விஜேசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் கைவிரல் அடையாளம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவித்து வைத்திய நிர்வாக சேவை அதிகாரிகள் உள்ளிட்ட சிரேஷ்ட வைத்திய துறையை சேர்ந்தவர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் குறித்த விடயமானது நடைமுறைக்கு சாத்தியமற்றது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நேற்றைய தினம் அறிவித்திருந்தனர். அத்துடன் கைவிரல் அடையாள முறைமையானது வைத்திய துறையின் யாப்பில் பிரச்சினைகளை உருவாக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறித்த விடயத்தினை நீக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் சமல் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் 2023 மற்றும் 2024 ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்ட புதிய அதிகாரிகள் குழுவினர் நேற்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்தனர். சந்தைப் பெறுமதி மற்றும் செயற்திறனை அடிப்படையாக கொண்ட சம்பள கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்தல் புத்திஜீவிகளின் வெளியேற்றத்தை மட்டுப்படுத்தல் மற்றும் வைத்தியர்களுக்கான கொடுப்பனவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளனர். அத்துடன், அது தொடர்பிலான பரிந்துரைகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளன. குறுகிய கால மற்றும் இடைக்கால திட்டங்களின் ஊடாக புதிய மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அந்தத் திட்டங்களை வகுக்கும் போது ஸ்கெண்டினேவியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முன்னேற்றகரமான சுகாதார கட்டமைப்பு தொடர்பில் ஆராய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Subscribe Us