Column Left

Vettri

Breaking News

அரசினால் நாடுபூராக உள்ள தொழில் பயிற்சி நிலையகளில் கிளின் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டம் முன்னெடுப்பு....




 ஜே.கே.யதுர்ஷன்..

தேசிய மக்கள் சக்தியின் கிளின் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டமானது அம்பாறைமாவட்டம்  திருக்கோவில் பிரதேசத்தில் விநாயகபுரம் VTA தொழில் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது...

 இந் நிகழ்வானது திருக்கோவில் பிரதேச தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் நிரோஜன் சதாசிவம் அவர்களின் வழிகாட்டலில் தொழில் பயிற்சி நிலையப்பொறுப்பதிகாரி திலகராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது....

இன் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச உறுப்பினர்கள் மற்றும் VTA பயிற்சி நிலையத்தின் ஆசிரியர்கள் மாணவர்கள் திருக்கோவில் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவு உத்தியோத்தர்கள் பொதுமக்கள் மற்றும் திருக்கோவில் பிரதேச சபை உழியர் என பலரும் கலந்து கொண்டனர்....

மேலும் அகற்ப்பட்ட கழிவுப்பொருட்கள் யாவும் திருக்கோவில் பிரதேச சபையின் கழிவகற்றல் வாகனம் ஊடாக அப்புறப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது....




No comments