Vettri

Breaking News

சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த மைத்திரி புதிய திட்டம்!!!




சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகியுள்ள சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து, வலுவான கட்சியாக அடுத்த தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவரான முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கட்சியின் ஆலோசகரான முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடனும் கட்சியை ஒன்றிணைப்பது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கட்சிக்குள் பிரச்சினைகள் சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த மைத்திரி புதிய திட்டம் | New Plan Strengthen Slfp Maithri சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் சிறிமாவே பண்டாரநாயக்க சுதந்திரக் கட்சியை பிளவுபட இடமளிக்காது பாதுகாத்தார் எனவும் மிக கடினமான சந்தர்ப்பங்களில் கட்சியை பாதுகாக்க தானும் அவருக்கு உதவியதாகவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். தற்போதும் கட்சிக்குள் பிரச்சினைகள் உருவாகியுள்ள போதிலும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து கட்சியை முன்நோக்கி கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பு
சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த மைத்திரி புதிய திட்டம் | New Plan Strengthen Slfp Maithri கட்சியில் உயர் பதவிகளை வகித்து வந்த நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்டோர் அரசாங்கத்தில் இணைந்துகொண்டு அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டதால், அவர் உட்பட சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் எனினும் அதற்கு எதிராக நிமல் சிறிபால டி சில்வா சட்ட நடவடிக்கை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார். அந்த வழக்கு தோல்வியடைந்த போதிலும், மேன்முறையீட்டு நீதிமன்றம், அவர்கள் அனைவரும் வகித்து வந்த பதவிகளை வழங்கி அதிகாரங்களை பகிருமாறு தீர்ப்பு வழங்கியது எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

No comments