தந்தையின் நினைவாக தனயன் மயானத்தில் குடிநீர் வசதி!
வி.ரி.சகாதேவராஜா)
தந்தையின் நினைவாக தனயன் மயானத்தில் குடிநீர் வசதியை ஏற்படுத்தி சமூக சேவையாற்றினார்.
காரைதீவைச் சேர்ந்த தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறுப்பதிகாரி விஜயரெத்தினம் விஜயசாந்தன் என்பவரே தனது தந்தை மரணித்து நாளை சனிக்கிழமை ஒருமாதமாகிறது.
அதனையொட்டி இன்று அவர் காரைதீவு இந்து மயானத்தில் குடிநீர் வசதியை ஏற்படுத்தி கொடுத்தார்.
காரைதீவைச் சேர்ந்த அமரர் விபுலநேசன் சீனித்தம்பி விஜயரெத்தினத்தின் 31ம் நாள் நினைவஞ்சலியை முன்னிட்டு அவரின் மூத்த புதல்வன் விஜயசாந்தன்
காரைதீவு இந்து மயானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிரந்தர குடிநீர் விநியோக கட்டமைப்பு சம்பிரதாய பூர்வமாக இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
மயானச்சுவரில் அவரது திருவுருவப் படம் பதித்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
No comments