கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில் சாய்ந்தமருது அல்-கமறூன் வித்தியாலயத்திற்கு குடிநீர்த் தாங்கி வழங்கி வைப்பு!
கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில் சாய்ந்தமருது அல்-கமறூன் வித்தியாலயத்திற்கு குடிநீர்த் தாங்கி வழங்கி வைப்பு!
ஏ.எஸ்.எம்.அர்ஹம்
நிருபர்
கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டிலும், YWMA அமைப்பின் அனுசரணையுடனும், சாய்ந்தமருது அல்-கமறூன் வித்தியாலயத்தின் நீண்ட நாள் அத்தியாவசிய தேவையாக இருந்து வந்த குடிநீர்த் தாங்கி இன்று (06) உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களின் நலன் மற்றும் சுகாதார தேவைகளை கருத்தில் கொண்டு, குடிநீர்த் தாங்கி ஒன்றை பெற்றுத் தருமாறு பாடசாலை நிர்வாகம் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவர் ரஹ்மத் மன்சூர் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, குறுகிய காலத்திற்குள் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், கல்முனை Top Queen Printers நிறுவனத்தின் பணிப்பாளர் M. இல்ஹாம், ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.
மாணவர்களின் அடிப்படை தேவைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் இவ்வகையான மனிதநேயச் சேவைகள் சமூகத்திற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments