Column Left

Vettri

Breaking News

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய நிர்வாகம் போட்டியின்றி தெரிவு




கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய நிர்வாகம் போட்டியின்றி தெரிவு ( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2026/2027 ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவானது நேற்று (18) புதன்கிழமை கல்முனையில் இடம் பெற்றது. இந் நிர்வாகத்தில் ஒரு சில சிறிய மாற்றங்களுடன் 2025/2026 அதே நிர்வாகம் 2026/2027 ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய மீண்டும் தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிக்கா ஷாரிக் காரியப்பர், பொதுச்செயலாளராக சிரேஷ்ட சட்டத்தரணி ஏஜி. பிரேம் நவாத் , பொருளாளராக சட்டத்தரணி சி.ஐ.சஞ்ஜித் அஹமட் , உப தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி நடராஜா சிவரஞ்சித் , உபசெயலாளர்களாக சட்டத்தரணி எம் .ஜே.ஜாவீட் நிஷாட் , புண்ணியநாதன் துவாரகா கணக்காய்வாளராக சட்டத்தரணி எம் எவ் எம்.சுஹால்ஸ் நூலகராக சட்டத்தரணி சௌஃவி இஸ்மாயில் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளாக சிரேஷ்ட சட்டத்தரணிகளான எம் எஸ் எம்.ஜெமீல், ஏ.எல்.நதீர் , ஏ.எம்.பதிர்யுதின், எம்.எஸ்.ரஷாக் , எம்.ஷாரிக் காரியப்பர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாக சட்டத்தரணிகளான ஏ.நிதான்சன்,பாத்திமா சுஜா, எம்.எச்.சௌத் முகமட், எல்.ஏ.கே.மடோனா ஆகியோரும் ,ல் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர். 2026/2027 ஆண்டுக்கான தெரிவு போட்டியின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டமை சிறப்பம்சமாகும்.

No comments