பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து-ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் அரசுக்கு பாராட்டு
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து-ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் அரசுக்கு பாராட்டு
பாறுக் ஷிஹான்
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டமையானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சிறந்த முன்னெடுப்பாகும் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் தலைவர் முஸ்னத் முபாறக் தெரிவித்தார்.
சம கால அரசியல் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டம் 152 மேலதிக வாக்குகளால் நிறைவேறப்பட்டுள்ளமையானது தேசிய மக்கள் சத்தி அரசாங்கத்தின் மிகச்சிறந்த நடவடிக்கையாகும்.இதன் மூலம் மக்களின் பெரும் பணம் மிச்சமாகும் நல்ல நிலை வந்துள்ளது.
இந்த ஓய்வூதிய நீக்கத்துக்காக ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது.பாராளுமன்ற உறுப்பினர் பதவி என்பது ஒரு தொழில் அல்ல.அது மக்கள் நலன்புரி சேவையாகும். அச்சேவையை செய்ய வருபவர் சம்பளமோ ஓய்வூதியமோ எதிர்பார்க்க கூடாது.
பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த காலங்களில் பாராளுமன்றுக்கும் ஒழுங்காக செல்வதில்லை.போனாலும் தூக்கம்தான் பெரிது. இன்னும் சிலர் 25 மற்றும் 30 வருடங்களாக பாராளுமன்றத்தில் இருந்தும் அவர்களால் சமூகம் உருப்படியாக எதையும் பெறவில்லை.ஐந்து வருடம் பாராளுமன்றத்தில் காலத்தை கடத்திவிட்டால் ஓய்வூதியம் என்பது நமது நாட்டுக்கு கொஞ்சமும் பொருத்தமற்றமதாகும்.
உண்மையில் இந்த ஓய்வூதியம் என்பது பொது மக்களின் பணத்துக்கு செய்து வந்த அநியாயமாகும்.எம்பீக்களின் சொகுசு வாழ்க்கைக்காக மக்கள் பலியாக வேண்டுமா?என்ற நிலை இருந்தது.எந்த அரசும் முன்னெடுக்க முடியாமல் இருந்த இந்த ஓய்வூதிய ஒழிப்பை மிகவும் தைரியமாக செய்து காட்டிய ஜனாதிபதி அனுரகுமார அரசுக்கு வாழ்த்துக்கள்.
இது போல் எம்பீக்களின் சம்பளமும் நிறுத்தப்பட்டு அவர்கள் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு அமர்வுகளுக்கு மட்டும் கொடுப்பணவு கொடுக்கும் சிஸ்டம் வேண்டும் என்பதும் ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரசின் கோரிக்கையாகும் என அவர் மேலும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments