Column Left

Vettri

Breaking News

சர்ச்சைக்குரிய  வீரமுனை ஆண்டியர் சுற்றுச் சந்தி இரவோடிரவாக கார்ப்பட் இட்டு புனரமைப்பு 




சர்ச்சைக்குரிய வீரமுனை ஆண்டியர் சுற்றுச் சந்தி இரவோடிரவாக கார்ப்பட் இட்டு புனரமைப்பு (வி.ரி.சகாதேவராஜா) சர்ச்சைக்குரிய சம்மாந்துறை வீரமுனை ஆண்டியர் சுற்றுச் சந்தி இரவோடிரவாக கார்ப்பட் இட்டு புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஏலவே புனரமைப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அப்பகுதியால் செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமப்பட்டு பயணிக்க வேண்டிய அவலநிலை தோன்றியிருந்தது என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விசனம் தெரிவித்திருந்தமை தெரிந்ததே. குறித்த வீரமுனை ஆண்டியர் சந்தி அம்பாறை - காரைதீவு பிரதான வீதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை அச்சந்தியில் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது அச்சுற்றுவட்டத்தால் இலகுவாக பயணிக்க முடிகிறது என பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள்.

No comments