Vettri

Breaking News

ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத்தின் யாத்திரை நூல் வெளியீட்டு விழா!!




 ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத்தின் யாத்திரை நூல் வெளியீட்டு விழா

வவுனியாவை சேர்ந்த ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத்தின் யாத்திரை நூல் எதிர்வரும் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட உள்ளது.

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மனித உரிமை செயற்பாட்டாளரும் தைரியமிக்க பெண்களுக்கான அமெரிக்க அரசாங்கத்தின் விருது பெற்றவருமான சட்டத்தரணி திருமதி ரனித்தா ஞானராசா கலந்து கொள்வதோடு சிறப்பு விருந்தினர்களாக வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.மங்களேஸ்வரன் மற்றும் வீரகேசரியின் பிரதம ஆசிரியர் எஸ். ஸ்ரீகஜன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, கௌரவ விருந்தினர்களாக வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கனும் ஆய்வாளரும் மூத்த ஊடகவியலாளருமான தமிழ்நிதி அருணா செல்லத்துரையும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்தினை க. அகரனும் வரவேற்புரையினை க. அட்சகியும் ஆற்ற உள்ளதோடு நிருத்தியார்ப்பன நடனக்கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனமும் இடம்பெற உள்ளது.

இதேவேளை குறித்த நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர் அ. நிக்சன் சிறப்புரை ஆற்ற உள்ளதோடு நூல் விமர்சனத்தினை தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி எஸ் சிவகரன் ஆற்றவுள்ளார்.

குறித்த நூலில் தமிழர் அரசியவ் களம், அரசியலாளர்களின் நிலைப்பாடுகளும் மக்களின் நிலைப்பாடுகளையும் உள்ளடக்கிய அரசியல்  கட்டுரைகள் இடம்பெற உள்ளதோடு இது நூலாசிரியரின் இரண்டாவது நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments