ஆலையடிவேம்பு நிருபர் வி.சுகிர்தகுமார் இந்தியா தமிழ்நாட்டை சேர்ந்த மில்லர் புவுண்டேசன் நிறுவனத்தின் உரிமையாளரும் சந்தைப்படுத்தல் மு...
இந்தியா தமிழ்நாட்டை சேர்ந்த மில்லர் புவுண்டேசன் நிறுவனத்தின் உரிமையாளரும் சந்தைப்படுத்தல் முகாமையாளமான டாக்டர் எஸ்.சுந்தர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நலிவுற்ற பெண்களை சுயதொழில் முயற்சியாளர்களாக மாற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
Reviewed by Thanoshan
on
4/08/2026 04:57:00 PM
Rating: 5
ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சேவைகளில், அத்தியாவசியத் தேவைகளைக் கொண்ட விண்ணப...
ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சேவைகளில், அத்தியாவசியத் தேவைகளைக் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கான ஒருநாள் சேவை இன்று புதன்கிழமை (08) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது!! அத்தியாவசியத் தேவைக்காக தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியவர்களுக்கு மாத்திரம் பத்தரமுல்ல பிரதான அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் ஒருநாள் சேவை முன்னெடுக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் எம்.எஸ்.பி. சூரியப்பெரும தெரிவித்துள்ளார். திணைக்களத்தின் கணினி கட்டமைப்பை முழுமையாகச் சீர்செய்யும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. பிரதான மற்றும் மாகாண அலுவலகங்களின் சாதாரண சேவைகள் மற்றும் முன்கள அலுவலகச் சேவைகள் மீண்டும் அறிவிக்கும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. கணினி அமைப்பு முழுமையாகக் சீர்செய்யப்பட்ட பின்னர், அனைத்து சேவைகளும் வழமை போல் தடையின்றி முன்னெடுக்கப்படும் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது!!
Reviewed by Thanoshan
on
4/08/2026 09:27:00 AM
Rating: 5