Column Left

Vettri

Breaking News

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு உணவகங்கள் பரிசோதனை!!




பாறுக் ஷிஹான்

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஷகிலா இஸ்ஸதீன்   நெறிப்படுத்தலில்   சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே.மதனின்  வழிகாட்டலில் சாய்ந்தமருது  சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
 
இதன்போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற பழுதடைந்த மரக்கறி வகைகள்  உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு சுகாதார விதிமுறைகளை மீறிய  விற்பனையாளர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் சுகாதார விதிமுறைகள்,உணவு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன

மேலும் இப்பரிசோதனையின் போது, உணவகங்களில் காணப்பட்ட சுகாதார குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டதுடன், அவற்றை சரிசெய்ய உரிய கால அவகாசமும் வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் (SPHID), உணவு மற்றும் மருந்து பரிசோதகர் (Food and Drugs Inspector) மற்றும் எமது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டனர்.

No comments