விபுலானந்தாவுக்கு விளையாட்டு உபகரணங்கள்!!
வி.ரி. சகாதேவராஜா)
அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- AusKar), சம்மாந்துறை வலயத்திலுள்ள மல்வத்தை விபுலானந்த மத்திய மகா வித்தியாலயத்திற்கு ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தது.
"ஒஸ்கார்" ( AusKar) அமைப்பின் தலைவர் ரத்தினசிங்கம் பிரதீபராஜ் வழிநடத்தலில், அவுஸ்திரேலியாவிலிருந்து விசேடமாக "ஒஸ்கார்" அமைப்பின் ஸ்தாபக உறுப்பினரும் பொருளாளரும் இணைப்பாளருமான தம்பியப்பா கணேசநாதன் கலந்து சிறப்பித்தார்.
பிரதி அதிபர் ஆர்.இரத்னகுமாரின் வேண்டுகோளுக்கிணங்க, இத் திட்டத்திற்கு ஒஸ்கார் போஷகர் பொறியியலாளர் வேலுப்பிள்ளை சிவசுப்பிரமணியம் பூரண அனுசரணை நல்கினார்.
இந்நிகழ்வு , மல்வத்தை விபுலானந்தா வித்தியாலயத்தில் கடந்த ( 5) வெள்ளிக்கிழமை அதிபர் எஸ்.ரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக, ஒஸ்கார் அமைப்பின் பிரதிநிதியும், ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளரும், பிரபல ஊடகவியலாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.
நிகழ்வில், மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில், சம்மாந்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்ரிஎம்.ஜனோபர் , நலன்விரும்பி இரா.தவராஜா மற்றும்,ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
"ஒஸ்கார்" அமைப்பினர் கடந்த 15 வருடங்களாக இன்னொரன்ன பல சேவைகளை காரைதீவில் மட்டுமல்லாமல், அம்பாறை மாவட்ட தமிழ் கிராமங்களிலும் பொலனறுவை மற்றும் பூண்டுலோயா உள்ளிட்ட மலையகத்திலும் செய்து வருகின்றார்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.
No comments