Column Left

Vettri

Breaking News

இந்தியா தமிழ்நாட்டை சேர்ந்த மில்லர் புவுண்டேசன் நிறுவனத்தின் உரிமையாளரும் சந்தைப்படுத்தல் முகாமையாளமான டாக்டர் எஸ்.சுந்தர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நலிவுற்ற பெண்களை சுயதொழில் முயற்சியாளர்களாக மாற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டார்.




 ஆலையடிவேம்பு நிருபர்

வி.சுகிர்தகுமார்      


இந்தியா தமிழ்நாட்டை சேர்ந்த மில்லர் புவுண்டேசன் நிறுவனத்தின் உரிமையாளரும் சந்தைப்படுத்தல் முகாமையாளமான டாக்டர் எஸ்.சுந்தர் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் அழைப்பின் பேரில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நலிவுற்ற பெண்களை சுயதொழில் முயற்சியாளர்களாக மாற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற தலைவர் த.கயிலாயபிள்ளையின் ஒருங்கிணைப்பில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் (08)இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் பெண்களுக்கான சுயதொழில் பயிற்சி மற்றும் சுயதொழில் மூலம் வலுவூட்டி அவர்களை சிறந்த முயற்சியாளர்களாக மாற்றுவது தொடர்பில் தெளிவூட்டினார்.
மலேசியா நாட்டில் அன்மையில் இடம்பெற்ற சிறுதானிய உற்பத்தியினை ஊக்குவிக்கும் உலக தமிழ் வர்த்தக மாநாட்டில் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் சார்பில் மன்ற இணைப்பாளர் அசோகா ஆறுமுகம் கலந்து கொண்டார்.
இதன் பயனாக இலங்கைக்கான விஜயத்தின்போது அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு வருகைதந்த அவர் சுயதொழில் முயற்சி தொடர்பிலும் இதன் மூலம் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது தொடர்பிலும் கலந்து கொண்ட பெண்களுக்கு விளக்கமளித்தார்.

இதற்கான இயந்திரங்களை இலங்கைக்கு கொண்டுவருவது தொடர்பாகவும் விளக்கினார்.
இதேநேரம் குறித்த வேலைத்திட்டத்தின் மூலம் ஆலையடிவேம்பு பிரதேசம் அடையவுள்ள நன்மை தொடர்பிலும் இதற்கான ஒத்துழைப்பை வழங்கும் மில்லர் புவுண்டேசன் நிறுவனத்திற்கும் பிரதேச செயலாளர் நன்றி தெரிவித்தார்.
இந்து இளைஞர் மன்றம் முன்னெடுத்திருக்கும் இப்பணி பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்போடு சிறப்பாக முன்கொண்டு செல்லப்படும் என தலைவர் த.கயிலாயபிள்ளை குறிப்பிட்டார்.
அத்தோடு சுந்தர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

No comments