Column Left

Vettri

Breaking News

சம்மாந்துறையில் 50 பேருக்கு காணி உரிமம் வழங்கி வைப்பு! புதிய அரசாங்க அதிபர் பங்கேற்பு!!




( வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் அனுபமா மங்கள விக்ரமாராச்சி அவர்கள்  நேற்று (07) சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு தனது கன்னி விஜயத்தை மேற்கொண்டார். 

இவ் விஜயத்தின் முக்கிய அம்சமாக, நீண்டகாலமாக காணி உரிமைக்காகக் காத்திருந்த சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 50 பயனாளிகளுக்கு காணி அனுமதிப் பத்திரங்களை அரசாங்க அதிபர் வழங்கி வைத்தார்.

 அத்துடன் சமூக நலன்புரித் திட்டங்களின் கீழ், விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான மாதாந்த உதவிக் கொடுப்பனவுகளும், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் கல்வித் தரத்தை ஊக்குவிக்கும் வகையிலான விசேட கல்விப் உதவிக்கான காசோலைகளும் இதன்போது கையளிக்கப்பட்டன. 

மாவட்ட அரசாங்க அதிபராகப் பதவியேற்றதன் பின்னர் சம்மாந்துறைப் பகுதிக்கு அவர் மேற்கொண்ட முதல் உத்தியோகபூர்வ பயணம் இதுவாகும். 

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்த விசேட வரவேற்பு மற்றும் நலத்திட்ட நிகழ்வில், அரசாங்க அதிபர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். 

இதன்போது அரசாங்க அதிபரைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில், பிரதேச செயலாளரினால் அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் வி.வாசீத் அஹமட், கணக்காளர் எஸ்.எல். சர்தார் மிர்ஸா, நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம். ஜெமில், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம். ஹுசைன் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments