"நாவிதன்வெளி பிரதேச செயலக வரலாற்றில் முதன்முறையாக வெசாக் பண்டிகை கொண்டாட்டம்!
"நாவிதன்வெளி பிரதேச செயலக வரலாற்றில் முதன்முறையாக வெசாக் பண்டிகை கொண்டாட்டம்!
நாவிதன்வெளி பிரதேச செயலக வரலாற்றில் முதல் முறையாக வெசாக் பண்டிகை கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன. நாவிதன்வெளி பிரதேச செயலக நிர்வாகம் மற்றும் உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், பொதுமக்களுக்கான ஐஸ்கிரீம் தானம் வழங்கும் நிகழ்வு மிக வெற்றிகரமாக நடந்தேறியது.
கடந்த 05ஆம் திகதி, இந்நிகழ்வை மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் உத்தியோகபூர்வமாகத் தொடங்கிவைத்ததோடு, நீண்ட நேரம் தன் கையினால் மக்களுக்கு ஐஸ்கிரீம் பகிர்ந்தளித்தார். இந்நிகழ்வில் கணக்காளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், மற்றும் சமூர்த்தி தலைமையக முகாமையாளர் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.









No comments