Column Left

Vettri

Breaking News

கோளாவில் கிராம மறுமலர்ச்சி பாலர் பாடசாலையின் விடுகை விழா




கோளாவில் கிராம மறுமலர்ச்சி பாலர் பாடசாலையின் விடுகை விழா செல்வி வினாயகமூர்த்தி அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட கோளாவில் 01 தீவுக்காலை கிராம மறுமலர்ச்சி முன்பள்ளி பாலர் பாடசாலையின் வருடாந்த விடுகை விழா (20) செவ்வாய்கிழமை இடம்பெற்றது. முன்பள்ளி ஆசிரியை தங்கராசா தர்ஷினி தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வில் திருக்கோவில் வலய முன்பள்ளிகளுக்கான உதவிக்கல்வி பணிப்பாளர் எஸ்.விவேகானந்தராஜா கிழக்கு மாகாண பாலர் பாடசாலை. கல்விப்பணியக இணைப்பாளர்.பா மோகனராஜா ஆலையடிவேம்பு பிரதேசசபை பிரதித்தவிசாளர் கணேசபிள்ளை ரகுபதி மற்றும் ஆலையடிவேம்பு பிரதேசசெயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் இர்ஃபானா மற்றும் தில்லையாற்று பிள்ளையார் ஆலய நிருவாக உறுப்பினர் திரு நவரெட்ணம் மறுமலர்ச்சி பெண்கள் அமைப்பின் உறுப்பினர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் முன்பள்ளி சிறார்களின் கலை நிகழ்ச்சிகளும் மேடையேறியதுடன் நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் 2025ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை பாராட்டியதுடன் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

No comments