ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்
பாறுக் ஷிஹான்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் ஏற்பாட்டில் மர நிழலில் மகிழ்வுறுவோம் என்ற தொனிப் பொருளில் கல்முனைத் தொகுதி நற்பிட்டிமுனையில் வியாழக்கிழமை(15) இரவு நடைபெற்ற நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்வின் ஆரம்பத்தில் கிராஅத் மௌலவி எச்.எம்.தானீஸ் மேற்கொண்டதுடன் கட்சிக்கீதம் ஒலிக்கப்பட்டது.பின்னர் வரவேற்பு உரையினை ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரிவுத் தலைவர் எம்.எம். றியாஸ் மேற்கொண்டார்.
தொடர்ந்து அதிதிகள் உரை இடம்பெற்றதுடன் நற்பிட்டிமுனை கிராமத்தின் பிரிவிற்கான இளைஞர் அமைப்பாளர்கள் அறிமுகமும் நியமனம் வழங்கலும் நடைபெற்றது.
இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளர் ஐ.எம். உபைத்துல்லாவும் நற்பிட்டிமுனை-1 எச்.எம்.எம். நிஸ்மி நற்பிட்டிமுனை -2 ஜே.எம். சாஜஹான் நற்பிட்டிமுனை -3 ஏ.ஜி.எம். அஜித் நற்பிட்டிமுனை -4 எச்.எம் .தானீஸ் மௌலவி நற்பிட்டிமுனை -5 ஏ.எப்.நஸீம் ஆகியோர் நியமனம் பெற்றனர்.
இது தவிர ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்து கொண்ட முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம் நபாரின் அறிமுகமும் உரையும் இடம்பெற்றது.அடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளர் ஐ.எம். உபைத்துல்லா உரை எதிர்வரும் கல்முனை மாநகர பை தேர்தலில் போட்டி இடுவதற்கான வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட எம்.ஐ.நிரோஸ் உரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு செயலாளர் ஏ.எஸ்.எம் ஜஃபர் உரை என்பன இடம்பெற்று றிகழ்வ சிறப்பாக நிறைவடைந்தன.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர் உட்பட அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் பொருளாலர் முன்னாள் கல்முனை பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , ஏறாவூர் நகர சபை தலைவருமான எம். எஸ் .எம் .நளீம் மற்றும் கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் இளைஞர்கள் ஆகியோர் இந்த நிகழ்வுகளில் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்
No comments