பழுகாமம் திலகவதியார் இல்ல பழைய மாணவர்க்கு வாழ்வாதார உதவி
பழுகாமம் திலகவதியார் இல்ல பழைய மாணவர்க்கு வாழ்வாதார உதவி
( வி.ரி.சகாதேவராஜா)
அவுஸ்திரேலிய சைவ மன்ற நிதியுதவியின் கீழ்,
சமூக நலன்புரி நிறுவனத்தினால் முதற்கட்டமாக பழுகாமம் திலகவதியார் மகளிர் இல்லத்தில் கல்வி கற்று வெளியேறிய பிள்ளைகளுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இல்லத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
அமைப்பின் உப தலைவர் அ.சதானந்தம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்
பிரதம அதிதியாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் .எஸ்.ரங்கநாதன் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு அதிதிகளாக கிராம உத்தியோகத்தர் எஸ்.சங்கீர்த்தன் மற்றும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி அதிபர் சந்திரசேகரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் விபுலானந்தா ஆண்கள் இல்ல முகாமையாளர், நிறுவன இணைப்பாளர் மற்றும் பணியாளர்கள், திலகவதியார் மகளிர் இல்ல முகாமையாளர் மற்றும் பணியாளர்கள், தையல் ஆசிரியை, நிறுவன ஆலோசகர்கள், இல்ல நிர்வாகிகள், வாழ்வாதார உதவி பெறும் பயனாளிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், இல்லக் குழந்தைகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
No comments