நிவாரணப்பொருட்களை அனுப்பும் மனிதாபிமான பணியில் அம்பாரை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச மக்களும்!!
ஆலையடிவேம்பு நிருபர்
வி.சுகிர்தகுமார்
வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மலையகம் உள்ளிட்ட நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலும் வாழ்கின்ற மக்களுக்கு கரம் கொடுத்து அவர்களுக்கான நிவாரணப்பொருட்களை அனுப்பும் மனிதாபிமான பணியில் அம்பாரை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச மக்களும் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் சமமேளம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் நிவாரணப்பொருட்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேசக்கரம் நீட்டுவோம் எனும் அடிப்படையில் இன்றும் நாளையும் (02,03) இடம்பெறும் இப்பணியில் பிரதேச செயலாளர் ஆர்.திரிவியராஜ் உள்ளிட்;ட பலர் கலந்து கொண்டு பங்களிப்பை வழங்கினார்.
வெள்ள அனர்த்தத்தில் அம்பாரை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டபோதிலும் மிகவும் பாதிக்கப்பட்ட மலையகம் உள்ளிட்ட மக்களுக்கு வழங்குவதற்கான நிவாரணப்பொருட்களை மக்கள் மனமுவந்து வழங்கி வருகின்றனர்.

No comments