Column Left

Vettri

Breaking News

பூண்டுலோயா விவேகானந்தா அகதி முகாமில் ஒஸ்கார் உதவிகள் வழங்கிவைப்பு!




பூண்டுலோயா விவேகானந்தா அகதி முகாமில் ஒஸ்கார் உதவிகள் வழங்கிவைப்பு! (பூண்டுலோயாவில் இருந்து வி.ரி .சகாதேவராஜா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்) , பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்டு பூண்டுலோயாவில் அகதி முகாமில் வாழும் மூவின மக்களுக்கும் ஒரு தொகுதி பேரிடர் நிவாரண பொருட்களை நேற்று முன்தினம் (17) இரவு வழங்கி வைத்தது. இந்நிகழ்வு பூண்டுலோயா விவேகானந்தா மத்திய கல்லூரி அதிபர் ஆறுமுகம் ரவீந்திரன் தலைமையில் பாடசாலை அகதி முகாமில் நடைபெற்றது . கூடவே பூண்டுலோயா தூவானம்பீலி ஆலய குரு சண்முகம் குருக்கள் மற்றும் பூண்டுலோயாஓய்வு நிலை அதிபர் எஸ்.சிவலிங்கம் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர். ஒஸ்காரின் உறுப்பினர்களான காரைதீவு மக்கள் இதற்காக பூரண அனுசரணையை வழங்கியிருந்தனர். ஒஸ்கார் தலைவர் கந்தசாமி பத்மநாதன் தலைமையிலான குழுவினரின் பூரண ஒத்துழைப்பில் பேரிடர் நிவாரண திட்டம் முதற்கட்டமாக பொலனறுவை கல்எல கிராமத்திற்கும் , பின்னர் பெருந்தொகை நிவாரணம் மலையகத்தின் மகியங்கன கண்டி கம்பளை பூண்டுலோயா பதுளை பசறை போன்ற நாலா பக்கங்களிலும் வழங்கி வைக்கப்பட்டன. ஒஸ்கார் அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா தலைமையிலான குழுவினர் அவற்றை வழங்கி வைத்தனர். ஒஸ்கார் சார்பில் வி.ஜெயச்சந்திரன், வி.தஸானந்த், என். அமரீசன் மற்றும் ஓய்வு நிலை அதிபர் பூ.நவரெத்தினராஜா ஆகியோர் தொண்டர்களாக கலந்து கொண்டனர். அங்குள்ள மக்கள், காரைதீவு மக்களுக்கு நன்றி கூறினர். இதனை ஒஸ்கார் அமைப்பின் சமூக சேவைக்கான இணைப்பாளர் பொருளாளர் வீ. விவேகானந்தமூர்த்தி மற்றும் செயலாளர் தி.லாவண்யன் ஆகியோர் அவுஸ்திரேலியாவிலிருந்து நிதிஒழுங்கமைப்பு செய்து ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments