டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்காக அம்பாறை மாவட்டத்திலிருந்து நிவாரண உதவி
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்காக அம்பாறை மாவட்டத்திலிருந்து நிவாரண உதவி
( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவில் உள்ள மனித அபிவிருத்தி தாபன அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் கடமையாற்றியவர்களின் ஏற்பாட்டில் அண்மையில் மலையகத்தை தாக்கிய டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவியினை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந் நிவாரண பணிக்கான நிதி உதவிகளை மனித அபிவிருத்தி தாபன அம்பாறை காரியாலயத்தில் கடமையாற்றியவர்கள் மற்றும் அவர்களின் பாடசாலை நண்பர்கள் (karaitivu VCC ), காரியாலயத்துடன் இணைந்து செயற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நண்பர்கள், இளைஞர்கள், முன்பள்ளி ஆசிரியைகள், வேள்வி அமைப்பின் முக்கியஸ்தர்கள், கிராமமட்ட அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்கள், முன்னாள் பெண் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பல்வேறுபட்ட நல்லுள்ளங்களிடமிருந்து இதற்காக நிதி உதவி கிடைத்துள்ளது.
இந் நிதியுதவியின் ஊடாக பாதிக்கப்பட்ட பெண்கள், பாடசாலை மாணவிகளுக்கான அத்தியாவசிய ஆடைகள், சுகாதார பொருட்கள் உள்ளடங்கலாக 400 பேருக்கு வழங்குவதற்கான பொதியிடும் வேலை தற்போது காரைதீவு மனித அபிவிருத்தி தபான காரியாலயத்தில் நடைபெறுகின்றது.
இந்நிவாரண பொருட்களை இவ்வார இறுதியில் மனித அபிவிருத்தி தாபன கண்டி தலைமை காரியாலயத்தின் வழிகாட்டலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ளது என மனித அபிவிருத்தி தபான அம்பாறை மாவட்ட உதவி இணைப்பாளர் எம். ஐ. றியால் தெரிவித்தார்.
அத்துடன் இந் நிவாரண பணிக்கு நிதிப்பங்களிப்பு செய்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்தார்.
No comments