Column Left

Vettri

Breaking News

மன்னம்பிட்டி புகையிரத பாதை துரிதமாக திருத்தப்படுகிறது! 




மன்னம்பிட்டி புகையிரத பாதை துரிதமாக திருத்தப்படுகிறது! ( வி.ரி.சகாதேவராஜா) அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் சேதமடைந்த கொழும்பு - மட்டக்களப்பு பிரதான புகையிரத பாதை தற்போது மன்னம்பிட்டியில் துரிதமாக திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காலத்தில் இருந்து கொழும்பு - மட்டக்களப்பு புகையிரத சேவை முற்றாக பாதிக்கப்பட்டிருக்கின்றது . அதாவது புகையிரத சேவை நடைபெறவில்லை. மீண்டும் புகையிரத சேவையை மீள ஈடுபடுத்துவதற்காக ரயில் பாதைகள் ஆங்காங்கே திருத்தம் செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக மன்னம்பிட்டியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ரயில் பாதைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தன . அங்கு இன்று கனரக இயந்திரம் மூலம் இரவு பகலாக தொழிலாளர்களின் அர்ப்பணிப்பான சேவையில் அப்பாதைகள் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது . மன்னம்பிட்டி பாலம் மற்றும் அந்த புகையிரத பாதை திருத்தப்பட்டு நிறைவுறும் பட்சத்தில் விரைவாக கொழும்பு மட்டக்களப்பு புகையிரத சேவை மீண்டும் ஆரப்பிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.

No comments