நாவுக்கரசர் முன்பள்ளியில் விடுகை விழா
நாவுக்கரசர் முன்பள்ளியில் விடுகை விழா
( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்ட திருக்கோவில் விநாயகபுரம் நாவுக்கரசர் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த விடுகை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
முன்பள்ளி ஆசிரியை திருமதி நிரோசினி சிவநேசன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
நிகழ்வில் திருநாவுக்கரச நாயனார் குருகுல பணிப்பாளர் கண்.இராசரெத்தினம்
,திருக்கோவில் வலய முன்பள்ளி உதவி கல்விப் பணிப்பாளர் எஸ்.விவேகானந்தராஜா,ஓய்வு நிலை கோட்டக் கல்விப் பணிப்பாளர் சோ.ரவீந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
மாணவரின் கலைநிகழ்ச்சிகள் மடையேறின.
No comments