கல்முனை மண்ணின் மைந்தன் சிரேஷ்ட இளம் ஊடகவியலாளர் அர்ஹம் சர்வதேச மனிதநேய விருது பெற்றார்.
கல்முனை மண்ணின் மைந்தன் சிரேஷ்ட இளம் ஊடகவியலாளர் அர்ஹம் சர்வதேச மனிதநேய விருது பெற்றார்.
கல்முனை நிருபர்
2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மனிதநேய விருது சிரேஷ்ட இளம் ஊடகவியலாளரும், சர்வதேச மனித உரிமை அமைப்பின் சர்வதேச இயக்குநருமாகவும், SUNFO அமைப்பின் ஆஸ்திரேலியா நாட்டுக்கான இளைஞர் தூதுவருமான ஏ.எஸ்.எம்.அர்ஹம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இவ்விருதைப் பெற்று, கல்முனை மண்ணிற்கும் அதன் மக்களுக்கும் அவர் மேலும் ஒரு பெருமையைச் சேர்த்துத் தந்துள்ளார்.
இவ்விழா இன்று (24) கொழும்பில் அமைந்துள்ள Cinnamon Life – City of Dreams சொகுசு ஹோட்டலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த சமூக, ஊடக மற்றும் சிவில் அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய பதவிகளை வகிக்கும் பலரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
No comments