Column Left

Vettri

Breaking News

கண்டி கந்தானையில்  ஒஸ்கார் அமைப்பு  பேரிடர் நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு!




கண்டி கந்தானையில் ஒஸ்கார் அமைப்பு பேரிடர் நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு! (கண்டியில் இருந்து வி.ரி .சகாதேவராஜா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்) பேரிடரால் முற்றாக பாதிக்கப்பட்ட கண்டி கந்தானை கிராமத்தில் வாழும் மூவின மக்களுக்கும் ஒரு தொகுதி பேரிடர் நிவாரண பொருட்களை நேற்று (15) திஙட வழங்கி வைத்தது. இந்நிகழ்வு ஒருங்கிணைப்பாளரும் மனித அபிவிருத்தி தாபனத்தின் பிரதம இணைப்பாளர் பொன்னையா ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது . அவுஸ்திரேலியாவில் வாழும் காரைதீவைச் சேர்ந்த வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி டாக்டர் விவேகானந்தமூர்த்தி நுறோஜன் இதற்கான பூரண அனுசரணை வழங்கியிருந்தார். ஒஸ்கார் தலைவர் கந்தசாமி பத்மநாதன் தலைமையிலான குழுவினரின் பூரண ஒத்துழைப்பில் பேரிடர் நிவாரண திட்டத்தின் முதற்கட்டமாக ஏலவே பொலனறுவை கல்எல கிராமத்திற்கு முதல் நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. ஒஸ்கார் அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு அவற்றை வழங்கி வைத்தார். ஒஸ்கார் சார்பில் வி.ஜெயச்சந்திரன், வி.தஸானந்த், என். அமரீசன் மற்றும் ஓய்வு நிலை அதிபர் பூ.நவரெத்தினராஜா ஆகியோர் தொண்டர்களாக கலந்து கொண்டனர். இதனை ஒஸ்கார் அமைப்பின் சமூக சேவைக்கான இணைப்பாளர் பொருளாளர் வீ. விவேகானந்தமூர்த்தி மற்றும் செயலாளர் தி.லாவண்யன் ஆகியோர் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒழுங்கமைப்பு செய்து ஏற்பாடு செய்திருந்தனர். ஒஸ்கார் தலைவர் கந்தசாமி பத்மநாதன் தலைமையிலான ஒஸ்கார் குழுவினர் இன்னொரன்ன பல சேவைகளை செய்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Subscribe Us