Column Left

Vettri

Breaking News

சம்மாந்துறையில் கஞ்சா போதைப்பொருளுடன் கைதானவரிடம் விசாரணை!!




பாறுக் ஷிஹான்

கஞ்சா போதைப் பொருளை  விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில் கைதான 48 வயதுடைய சந்தேக நபர் குறித்து சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புற நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபர் குறித்துபொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஞாயிற்றுக்கிழமை(14)  மாலை இக்கைது சம்பவம் இடம்பெற்றது.

சம்மாந்துறை மலையாடி கிராமம் 02   பகுதியைச் சேர்ந்த  கைதான 48 வயதுடைய  சந்தேக நபரிடமிருந்து 70,000 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருள்  ஒரு மோட்டார் சைக்கிள்  கைத்தொலைபேசி  என்பன மீட்கப்பட்டுள்ளன.

மேலும்  இந்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின்  ஆலோசனைக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின்  வழிகாட்டலில்  ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன்  கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உட்பட   சான்றுப் பொருட்கள் யாவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Subscribe Us