Column Left

Vettri

Breaking News

உள்ளூராட்சி மன்ற வாரத்தையொட்டி, ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை! மற்றும் மாபெரும் சிரமதானப்பணி!!




 வி.சுகிர்தகுமார்        

 உள்ளூராட்சி மன்ற வாரத்தையொட்டி, ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை! மற்றும் மாபெரும் சிரமதானப்பணிகள் நேற்றும் இன்றும் (15, 16) நடைபெற்றது.
மறுமலர்ச்சி நகரத்தை உருவாக்குவோம் என்ற தொனிப் பொருளில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற வாரத்தை முன்னிட்டு  இச்செயற்பாடுகள் பிரதேச சபையால் முன்னெடுக்கப்பட்டது.
நேற்றைய நாள் ஆரம்ப நிகழ்வாக, ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட, பொதுமக்கள் நடமாடும் சேவை பிரதேச சபையின் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதேச சபை தவிசாளர் ஏ.தர்மதாசா தலைமையில், நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் பிரதேச சபையின் உப  தவிசாளர் க.ரகுபதி பிரதேச சபை செயலாளர் ஏ.ஹபீபுள் றகுமான் உள்ளிட்டவர்கள் அரச திணைக்களங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது தேசிய அடையாள அட்டை, அஸ்வெசும நலன்புரி திட்டம், முதியோர் உதவித்தொகை, ஆதன வரி, காணி, கட்டடம், வியாபார உரிமை கட்டணம், சுகாதாரம் மற்றும் பொலிஸ் பதிவுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டதோடு, அவைகள் தொடர்பான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.
இதேநேரம் இன்று அக்கரைப்பற்று பொதுமயானம் துப்பரவு செய்யும் பணி இடம்பெற்றதுடன் இதில் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பு மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நற்பணி மன்றம் உள்ளிட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் தவிசாளர் உபதவிசாளர் உள்ளிட்ட பிரதேச சபை ஊழியர்களும் பங்கேற்றனர்.

No comments