அம்பாறையில் முதல் தடவையாக மகளிர் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்!!
( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேச செயலகங்களின் மகளிர் செயற்பாட்டு உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடலில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் முதல் தடவையாக கலந்து சிறப்பித்தார்
இந் நிகழ்வு நேற்று (17) அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
அம்பாரை மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இணைப்பாளர் எம்.ரி.வாசனா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
கௌரவ அதிதிகளாக, பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவருமான வசந்த பியதிஸ்ஸ, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.ஆதம்பாவா, முத்து ரத்வத்த, அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ. ஜெகராஜன், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.அன்சார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் மூவினங்களின் கலை,கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன.
No comments