Column Left

Vettri

Breaking News

சர்வதேச அழகுக் கலை போட்டியில் இலங்கைக்கு இரண்டு வெள்ளிப்பதக்கங்கள்!!




 பிரான்ஸில் நேற்றைய தினம் நடைபெற்ற சர்வதேச அழகுக் கலை போட்டியில் இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதன்படி, கயல்விழி ஜெயபிரகாஷ் மற்றும் நிஞ்சு ஆகிய இருவரும் அழகுக் கலை போட்டியில் வெள்ளிப் பதக்கங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

‘கிரியேட்டிவ் ஐ மேக்-கப்’ (படைப்பாற்றல் மிக்க அழகுக் கலை) போட்டிப் பிரிவிலேயே கயல்விழி ஜெயபிரகாஷிற்கு இந்த சர்வதேச வெற்றி கிடைத்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பெரிஸில் இந்த போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது. அழகு கலைத்துறையில் மிகவும் கடினமான ஒப்பனை முறையாக இந்த படைப்பாற்றல் மிக்க அழகுக் கலை அமைந்துள்ளது.படைப்பாற்றல் மிக்க அழகுக்கலை துறையில் முதல் சர்வதேச விருதை இலங்கைக்குப் பெற்றுக்கொடுத்த பெருமை கயல்விழி ஜெயபிரகாஷிற்கே உரித்தானது.

படைப்பாற்றல் மிக்க அழகுக் கலை சர்வதேச போட்டியில் கயல்விழி ஜெயபிரகாஷ், மூன்றாவது முறையாகப் போட்டியிட்டுள்ளார். 2023ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் வெண்கல பதக்கத்தை வெற்றிகொண்ட அவர், இம்முறை வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அவர் இதுவரை பல விருதுகளை தன்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, கயல்விழி ஜெயபிரகாஷ், எதிர்வரும் மாதங்களில் சர்வதேச அரங்கில் நடைபெறவுள்ள சர்வதேச அழகுக்கலை போட்டிகளில் நடுவராக செயற்படவுள்ளார்.


No comments