ஆலையடிவேம்பு பிரதேசசபையில் முன்னெடுக்கப்பட்ட "செயிரி வாரம்"!!
(செல்வி வினாயகமூர்த்தி)
கிளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka)” தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அரசாங்க நிறுவனங்களில் ஒழுங்கமைப்பை பேணுவதற்காக “செயிரி வாரம்” நாடு முழுதும் செயற்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் (04) வியாழக்கிழமை செயிரி வாரம் ஆலையடிவேம்பு பிரதேசசபையிலும் முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்க நிறுவனமொன்றில் கடமையாற்றும் அலுவலர்களுக்கு தமது கடமைகளை முறையாகவும் சுதந்திரமாகவும் நிறைவேற்றுவதற்கு உகந்த வகையில் சுத்தமானதும், சுகாதார பாதுகாப்புள்ளதுமான, ஆபத்துக்கள் இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குவது ஒவ்வொரு நிறுவனத் தலைவரினதும் பொறுப்பாகும். அத்தகைய சூழல் சேவைப்பெறுநர்களின் மத்தியிலும் அலுவலகத்தைப் பற்றிய நல்லெண்ணத்தை ஏற்படுத்தும். அரசாங்க நிறுவனங்களில் காணப்படும்
வரையறுக்கப்பட்ட இடப்பரப்பை பயனுள்ளதும் வினைத்திறனானதுமான முறையில் பயன்படுத்துவதற்கும், அலுவலர்களுக்கு அமைதியான மற்றும் சுதந்திரமான வேலைச் சூழலை உருவாக்குவதும் அவசியமாகும்.
அதற்கான ஒரு நடவடிக்கையாக ஒவ்வொரு அரசாங்க நிறுவனத்திலும் குவிந்துள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுவதற்காக “செயிரி வாரம்” செப்டெம்பர் மாதம் 01ம் திகதி தொடக்கம் 04ம் திகதி வரை பிரகடனப்படுத்தி செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக இந் நிகழ்ச்சித்திட்டமானது ஆலையடிவேம்பு பிரதேசசபையிலும் செயற்படுத்தப்பட்டது
இதன் போது ஆலையடிவேம்பு பிரதேசசபை செயலாளர் கலிலுள் ரஹ்மான் பிரதேசசபை தவிசாளர் ஆரியாதாச தர்மதாச பிரதித்தவிசாளர் கணேசபிள்ளை ரகுபதி மற்றும் தமிழரசுக்கட்சி பிரதேசசபை உறுப்பினர்கள் பிரதேசசபை உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments